தமிழகத்தில், விவசாயிகள் நலன் கருதி அரசியல் கட்சிகள் இன்று நடத்தும் கடையடைப்பால் இயல்பு வாழ்க்கை பாதிக்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது தகவலறிக்கை:-
விவசாயிகளுக்காக நாளை பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அனைத்து கட்சிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியப்படுகிறது.
இக்கடையடைப்பினால் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு எவ்வித இடையுறும் இன்றி தேவையான அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கும் விதமாக அனைத்து துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (24.04.2017) மாவட்ட ஆட்சியா; அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்.இ.ஆ.ப., அவர்கள் கூறியதாவது:
பொதுமக்களின் அத்தியாவசியப் பொருட்களான பால், காய்கறி, பழங்கள், சமையல் எரிவாயு, குடிநீர் ஆகியவை தங்கு தடையின்றி கிடைக்கவும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து தடையின்றி தகுந்த பாதுகாப்புடன் இயக்கிடவும், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தடையற்ற மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள அனைத்து காவல்நிலையங்களில் பணியாற்றும் காவல்துறையினர் எவ்வித விடுப்புமின்றி முழு நேர விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டு அறைகள் மாவட்டத்தை முழு கண்காணிப்புடன் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அஸ்வின் கோட்னீஸ்,இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வீரப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.தீபக் ஜேக்கப்,இ.ஆ.ப.,, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.பிச்சை, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.இராஜையா, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.செழியன், கோட்டாட்சியர்கள் திரு.தியாகராஜன், திருமதி.அனிதா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.மதுசூதனன், டாக்டர்.யுனு.போஸ்கோ ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|