தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்னம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத்துடன் இணைந்து – மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் முகாம், 26.04.2017. புதன்கிழமையன்று காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இம்முகாமில், 3 பேருக்கு ஊன்றுகோல் சாதனங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு அலுவலர் சரவணன் இம்முகாமில் கலந்துகொண்டு, தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் முறை, அரசு சலுகைகளை மாற்றுத் திறனாளிகள் பெறும் முறை உள்ளிட்டவை குறித்து விளக்கிப் பேசினார்.
முகாம் ஏற்பாடுகளை தமுமுக & மமக மாவட்ட – நகர – கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தகவல்:
ஐதுரூஸ் |