வி யுனைட்டெட் ஜூனியர் லீக் 2017 – FAAMS கோப்பைக்கான கால்பந்து இறுதிப் போட்டியில், Muhyideen Rainers அணி வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
வீ-யூனைடெட் நடத்தும் Faams கோப்பைக்கான ஜூனியர்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் 22/04 முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற்றுவந்தது.
இச்சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று (27/04) மாலை ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் Muhyideen Rainers அணியும், Soccer Smashers அணியும் விளையாடின. இப்போட்டி துவங்கிய சிறிது நேரத்தில் Muhyideen Rainers அணியின் வீரர் முத்து தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோலாக்கினார். பின்னர் முதல்பாதி ஆட்ட முடியும்வரை Soccer Smashers அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை.
முதல்பாதி ஆட்டத்தின் இடைவேலையில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முஹியத்தீன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் இயக்குனர் திரு. இரத்தினசாமி அவர்களுக்கும், ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் முன்னால் தலைவர் மர்ஹூம் L.கனி அவர்களின் மகன் ஜனாப். லெப்பைத் தம்பி அவர்களுக்கும் வீ-யூனைடெட் குழுமத்தின் நிர்வாகிகளுல் ஒருவரான ஜனாப். U.முஹம்மது ஷேக்கான லெப்பை அவர்கள் சால்வை அணிவித்து கவுரவித்தார்கள். தொடர்ந்து இரண்டு அணி வீரர்களும் சிறப்பு விருந்தினர்களுக்கு அறிமுகப்படுத்திவைக்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற இரண்டாவதுபாதி ஆட்டத்தில் Soccer Smashers அணியினர்கள் கோல் அடிப்பதற்கு எடுத்த முயற்சிகளை Muhyideen Rainers அணியினர்கள் முறியடித்தனர். ஆட்டநேர இறுதிவரை போராடிய Soccer Smashers அணியினரால் கோல் ஏதும் அடிக்கமுடியாததால் Muhyideen Rainers அணியினர்கள் 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று "V-United Juniors Leauge 2017” பட்டத்தையும், "FAAMS" கோப்பையையும் தட்டிச்சென்றனர்.
போட்டிகள் சிறப்புடன் நடைபெற்று முடித்திட உதவிபுறிந்த எல்லாம்வல்ல இறைவனுக்கு முதலாவது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். போட்டிகள் நடத்த மைதானம்தந்துதவிய ஐக்கிய விளையாட்டுச் சங்க நிர்வாகத்தினருக்கும், அணிகள் தந்துதவிய உரிமையாளர்கள் ஜனாப். சாலிஹ் (FAAMS), ஜனாப். இஸ்மாயில் (Soccer Smashers), ஜனாப்.முத்து மொகுதூம் (Afinah Honesters), ஜனாப். சல்மான் (Kayal Manchester), ஜனாப். இஸ்ஸத்தீன் (Hameed Stars), ஜனாப். ஷஃபீக் (PAK HK), திரு. பிரேம் (Kayal Kings), ஜனாப். அப்துல் பாஸித் (Muhyideen Rainers) ஆகியோர்களுக்கும், அணிகளின் பொறுப்பாளர்களாக செயல்பட்ட ஆசிரியர் ஜனாப். மீராதம்பி (FAAMS), ஜனாப். சதக்கதுல்லாஹ் (Soccer Smashers), ஜனாப். தாவூத் (Afinah Honesters), ஜனாப். ஃபாஸி (Kayal Manchester), ஜனாப். ரிஃபாய்தீன் (Hameed Stars), ஜனாப். அபுசாலிஹ் (PAK HK), ஜனாப். அஸார் (Kayal Kings) மற்றும் ஜனாப். சம்சுத்தீன் (Muhyideen Rainers)ஆகியோர்களுக்கும், நடுவர்களாக பணியாற்றிய ஆசிரியர்கள் ஜனாப். மீராதம்பி, ஜனாப். ஜமால், ஜனாப். இஸ்மாயில் ஆகியோருக்கும், அனைத்து போட்டிகளிலும் ஆர்வமுடன் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கும், கோல் போஸ்ட் தந்துதவிய கோமான் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் நிர்வாகிகளுக்கும், போட்டிகளின் முடிவுகளை உடனுக்குடன் இணையதங்களில் வெளியிட்ட இணையதள நிர்வாகிகளுக்கும், எங்களுடன் இணைந்து களப்பணியாற்றிய அனைத்து சகோதரர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகள் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற மே மாதம் 2ஆம் தேதி முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற உள்ளது என்பதை அறியத்தருகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.ஜஹாங்கீர்
|