காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீ/பின் 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 28.03.2017. செவ்வாய்க்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ஏப்ரல் 27 அன்று ரஜப் 29ஆம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை மஹ்ழரீ, ஐக்கிய சமாதானப் பேரவையின் தலைவரும் – தாருஸ் ஸலாம் தஃவா சென்டர் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ ஆகியோர் வழங்கினர்.
ஷஃபான் 01ஆம் நாள் (ஏப்ரல் 28) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, கேரள மாநிலம் குட்டிகாட்டூர் ஜாமிஆ ஆரிஃபிய்யா அன்வாரிய்யா அரபிக் கல்லூரியின் ஹிஃப்ழுப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எல்.முஹம்மத் அலீ பாக்கவீ, அல்அஸ்ரார் மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ ஆகியோர் வழங்குகின்றனர்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
|