திருச்செந்தூர் ஒன்றியம் – வைகை மகளிர் கூட்டமைப்பின் சார்பில், ப்ளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி & பரப்புரைக் கூட்டம் இன்று மாலையில் நடைபெற்றது.
கடையக்குடி (கொம்புத்துறை) தேவாலய பங்குத் தந்தை மரிய ஜான் பேரணியைத் துவக்கி வைத்து, துவக்க உரையாற்றினார்.
தான் பங்குத் தந்தையாக இருக்கும் கொம்புத்துறை (கடையக்குடி) பகுதியில் ப்ளாஸ்டிக் பைகளையோ, மக்காத பொருட்களையோ பயன்படுத்துவதில்லை என பல மாதங்களுக்கு முன்பே முடிவெடுத்து, இன்றளவும் அனைவரும் இணைந்து கடைப்பிடித்து வருவதாக அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டின் கேட்டை விளக்கும் வாசகங்களடங்கிய பதாகைகளைத் தாங்கிப் பிடித்தவாறு, காயல்பட்டினம் எல்.கே.லெப்பைத் தம்பி சாலை வழியாகக் கடந்து சென்ற மகளிர் பேரணி, 17.30 மணியளவில் பேருந்து நிலையத்தைச் சென்றடைந்தது.
அங்கு நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்திற்கு, அமுத சுரபி கூட்டமைப்பின் தலைவர் ஆர்.ரமணி தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் ஏரல் ஜெயபாலன் முன்னிலை வகித்தார். காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் பீ.பொன்னம்பலம், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் ஆகியோர் விழிப்புணர்வுரையாற்றினர்.
பவுத்த ஆய்வு மையம் அமைப்பைச் சேர்ந்த இர.பு.தமிழ்க்குட்டி நிறைவுரையாற்றி, பேரணியை முடித்து வைத்தார்.
இப்பேரணி & பரப்புரைக் கூட்டத்தில், வைகை மகளிர் கூட்டமைப்பு, அமுத சுரபி கூட்டமைப்பு ஆகிய மகளிர் அமைப்புகளின் நிர்வாகிகளும், அங்கத்தினரும் திரளாகக் கலந்துகொண்டு, ப்ளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கேடுகளையும், இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தும் வாசகங்களை இணைந்து முழங்கினர்.
வைகை மகளிர் கூட்டமைப்பின் தலைவர் பி.ராஜேஷ் மேரி நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. பங்கேற்ற அனைவருக்கும் பங்குத் தந்தை மரிய ஜான் துணிப் பைகளை அன்பளிப்பாக வழங்கினார்.
கள உதவி:
T.M.N.முஹம்மத் முஹ்யித்தீன்
|