காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீ/பின் 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 28.03.2017. செவ்வாய்க்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ஏப்ரல் 28 அன்று ஷஃபான் 01ஆம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, கேரள மாநிலம் குட்டிகாட்டூர் ஜாமிஆ ஆரிஃபிய்யா அன்வாரிய்யா அரபிக் கல்லூரியின் ஹிஃப்ழுப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எல்.முஹம்மத் அலீ பாக்கவீ, அல்அஸ்ரார் மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ ஆகியோர் வழங்கினர்.
ஷஃபான் 02ஆம் நாள் (ஏப்ரல் 29) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ, இலங்கை கொழும்பு சம்மாங்கோட் பள்ளியின் கத்தீப் மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ ஆகியோர் வழங்குகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, ‘தாருத்திப்யான் நெட்வர்க்’ நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்ற, ‘முத்துச் சுடர்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ - கத்முல் புகாரி ஷரீஃப் எனும் அபூர்வ துஆ பிரார்த்தனையை தமிழாக்கத்துடன் ஓதி இவ்வாண்டின் நிகழ்ச்சிகளை நிறைவு செய்கிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது. |