காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் பின்புறமுள்ள ப்ரின்ஸ் தெருவில், இன்று 18.30 மணிக்கு, “குடும்ப வாழ்வில் உளவியல்” எனும் தலைப்பில், மகளிருக்கான சிறப்பு உளவியல் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சி – சமூக ஆர்வலர்களால் நடத்தப்படவுள்ளது.
சென்னை மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் மவ்லவீ அஷ்ஷெய்க் மன்ஸூர் காஷிஃபீ இதில் கலந்துகொண்டு உள வள ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.
மகளிருக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில், ஆண்களுக்கும் தனி இட வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், அனைவரும் கலந்து பயனடையுமாறும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
|