Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:51:14 PM
செவ்வாய் | 8 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1895, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்10:19
மறைவு18:04மறைவு22:07
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2618:5019:14
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19140
#KOTW19140
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மே 5, 2017
கத்தர் கா.ந.மன்றத்தின் பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்! காயலர்கள் திரளாகப் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2086 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கத்தர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் பல்வேறு சிறப்பம்சங்களுடன் நடைபெற்று முடிந்துள்ளது. காயலர்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-

கத்தர் காயல் நல மன்றத்தின் 29ஆவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சி 31.03.2017 வெள்ளிக்கிழமையன்று காலை 9.00 மணி முதல் 6.00 மணி வரை, கத்தர் முபெரீக் பூங்காவில் வைத்து நனி சிறப்புடன் நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்...!!!

புறப்பாடு:

மன்ற உறுப்பினர்கள் குடும்பத்துடன் தத்தம் வாகனங்களில் நிகழ்விடத்திற்கு வந்தனர். வாகன வசதி இல்லாதோருக்கு வாகனங்கள் வைத்திருப்போர்கள் பொறுப்பேற்று சிரமமின்றி அழைத்து வந்தனர். நிகழ்வின் துவக்கமாக, உறுப்பினர் பதிவு மற்றும் சந்தா சேகரிப்பு ஆகிய பணிகளை, மன்றப் பொருளாளர் ஹல்லாஜ் மற்றும் துணைப் பொருளாளர் ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன் ஆகியோர் நெறிபடுத்தினர்.

விளையாட்டு:

முதன்மையாக மன்றத்தின் உறுப்பினர்கள் இடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தேறின. இதற்காக இளைஞர்கள் முற்கூட்டியே பூங்காவில் உள்ள விளையாட்டு அரங்கில் சங்கமித்தனர். மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்ற போட்டிகளை ஜும்மா தொழுகைக்கு முன்னர் நிறைவுற்றனர்.



பொதுக்குழுக் கூட்டம்:



ஜும்மா தொழுகையை நிறைவேற்றிவிட்டு அனைவரும் குறித்த இடத்தில் ஒன்றுகூடினர். மன்ற செயலாளர் M .N . முஹம்மது சுலைமான் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தோரை வரவேற்று நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். புதிய உறுப்பினர் ஹாபிழ் சொளுக்கு முஹம்மது ஜெமீல் அவர்கள் இறைமறையின் சில வாசகங்களை ஓதி இனிதே துவக்கி வைத்தார்.



மன்றத்தின் கவுரவ தலைவர் பாஜுல் கரீம் மற்றும் மூத்த உறுப்பினர் MR ஷாஹுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகிக்க, மன்ற தலைவர் முஹம்மத் யூனுஸ் அவர்கள் இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றார்.

சிறப்பு விருந்தினர்:

தாய்லாந்து காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் முஹம்மது அலி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார்கள்.

கூட்ட நிகழ்வுகள்:

கவிக்குயில் இன்றி கத்தர் நல மன்ற கூட்டமா? என்பதற்கிணங்க "கவிக்குயில்" ஃபாயிஸ் அவர்களின் இனிய இன்னிசை பாடலுடன் கூட்டம் ஆரம்பமானது.

தலைமையுரை:

இந்த இனிய பொழுதில் இங்கு குழுமியிருக்கிற சிறப்பு விருந்தினர்கள் உட்பட - நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த அனைவரையும் துவக்கமாக வரவேற்றுப் பேசிய தலைவர் யூனுஸ் அவர்கள் இந்த வருடத்தில் மன்றம் செய்த சேவைகளை பட்டியலிட்டு அனைவரையும் கவரும் வண்ணம் அழகுற எடுத்துரைத்தார்.



செயல்திட்டங்கள்:

கத்தர் மற்றும் ஹாங்காங் காயல் நல மன்றங்கள் இணைந்து ஆண்டுதோறும் நடத்திவரும் கேன்சர் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம், கடந்த ஜனவரி (2017) மாதம் 28 & 29 அன்று நமது KMT மருத்துவமனையில் வைத்து நடந்தேறியது. இதற்காக பெரிதும் உழைத்த மன்ற உறுப்பினர் ஹாபிழ் முஹம்மது லெப்பை உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.



பள்ளிச் சீருடை இலவச வினியோகம்:

நமதூரின் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக நம் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் இக்ராஃ கல்விச் சங்கம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அங்கமாக, கடந்த 8 ஆண்டுகளாக சமூகத்தில் நலிவுற்ற ஏழை - எளிய மாணவ-மாணவியர்களுக்கு இதுவரை இறையருளால் 1000 கும் மேற்பட்ட இலவச சீருடைகள் வழங்கி வந்துள்ளோம்.



இன்ஷா அல்லாஹ், நடப்பாண்டின் தேவையை கருத்திற்கொண்டு இத்திட்டத்தை நம் நகரின் அனைத்து காயல் நல மன்றங்களையும் ஒன்றிணைத்து கூட்டுத் திட்டமாக செயல்படுத்த ஆவண செய்துள்ளோம். அதற்கான பணிகள் இக்ராஃ கல்விச் சங்கம் மூலம் நடைபெற்று வருகின்றன. இறைவனுக்கு விருப்பமான இந்த நல்ல திட்டத்திற்கு உறுதுணை புரிந்து ஆதரவு அளித்துள்ள அனைத்து காயல் நல மன்றங்களுக்கும், சிறப்புற செயலாற்றிய மன்ற செயலாளர் அவர்களுக்கும் அனைவரின் துஆ உடன் கூடிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.



இத்தருணத்தில் நம் மன்றத்திற்காக அயராது உழைத்த நல்லுள்ளங்களான பொருளாளர் அஸ்லம் அவர்கள் பணிநிமித்தம் காரணமாகவும், செயற்குழு உறுப்பினர் "வினாவிடை பிரபலம்" கத்தீப் மாமுனா லெப்பை அவர்கள் சொந்த காரணமாகவும் தாயகம் சென்றுவிட்டார்கள். அவர்களது பணி சிறக்க மன்றத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், தங்களது தொடர் ஆலோசனைகளை வழங்கிட வேண்டுகிறேன்.

புதிய உறுப்பினர்கள்:

கத்தர் நகருக்கு புதிதாக வந்துள்ளவர்கள் தங்களை அறிமுகப்படுத்தி மன்றத்தில் உறுப்பினராக சேர்த்துக்கொண்டனர்.

பொருளாளர் உரை:

மன்றப் பொருளாளர் ஹல்லாஜ், மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையைத் தாக்கல் செய்து, கூட்டத்தின் ஒப்புதலைப் பெற்றார்.

மேலும், நடப்பாண்டில் மன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கும் அதே தருணத்தில், உறுப்பினர்களின் சந்தா நன்கொடை நிதிகள் சென்ற வருடத்தைவிட குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது . ஆகையால், மன்ற உறுப்பினர்கள் தமது நிலுவைச் சந்தா தொகையை விரைந்து செலுத்திடுமாறும், இயன்றளவு நிலுவையின்றி பார்த்துக்கொள்ளுமாறும், தற்காலத் தேவைகளை அனுசரித்து - நகர்நலப் பணிகளை நிறைவாகச் செய்திடுவதற்காக - தமது சந்தா தொகைகளை கனிசமாக உயர்த்தி வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

நன்றியுரை:

மன்றத்தின் துணை தலைவர் மீரான் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.

கூட்ட நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடு:

மேலும், அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் நடந்திய ஒருங்கிணைப்பாளர்கள் முஹம்மத் முஹ்யித்தீன் , பொக்கு ஹல்லாஜ் மற்றும் உள்ளிட்ட அங்கத்தினர் அனைவருக்கும் மன்ற நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. நிறைவாக, ஹாஃபிழ் நைனா முஹம்மது அவர்களது துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.

பின்னர் அனைவருக்கும் மதிய உணவு பரிமாறபட்டது. சற்று இளைப்பாறிய பின்னர் இளஞ்சிறார்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.









அஸர் தொழுகை:

அஸர் தொழுகையை அனைவரும் நிகழ்விடத்திலேயே தொழுதனர் பின்னர் அனைவருக்கும் தேநீர் பரிமாறப்பட்டது. .

ஆண்களுக்கான வினாடி-வினா போட்டி:

அஸர் தொழுகைக்கு பிறகு, ஆண்களுக்கான வினாடி-வினா போட்டி நடைபெற்றது. குர்ஆன், இஸ்லாம், அறிவியல், அரசியல், நம் நகரின் பாரம்பரியம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கி கேள்விகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. துவக்கமாக ஓரணிக்கு 6 பேர் வீதம், அனைவரும் 7 அணியினராகப் பங்கேற்றனர்.

இறுதிப்போட்டியில், ஹாபிழ் நஸ்ருத்தீன் அவர்களது அணி முதற்பரிசையும், ஹாபிழ் சொளுக்கு ஜெமீல் அவர்களின் அணி இரண்டாவது பரிசையும் பெற்றது. இந்நிகழ்வை தலைவர் முஹம்மத் யூனுஸ் மற்றும் சொளுக்கு முஹமது இப்ராஹிம் ஆகியோர் இப்போட்டியை அனைவரும் ரசிக்கும் வகையில் உற்சாகமாக வழிநடத்தினர்.

பரிசளிப்பு:

குழந்தைகளுக்கும், போட்டிகளில் வென்றோருக்கும் பரிசளிப்பு விழா, 18.00 மணியளவில் நடைபெற்றது. தலைவர் முஹம்மத் யூனுஸ் அவர்கள் பரிசளிப்பு விழாவை நெறிப்படுத்தினார்.

உறுப்பினர்கள் அனைவருக்கும் மன்றத்தின் சார்பாக இலச்சினை பதித்த கோப்பை வழங்கப்பட்டது.

இனிய நினைவலைகளுடன் மன்ற உறுப்பினர்கள் பிரியாவிடைபெற்றுச் சென்றனர். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!















அனைத்து நிகழ்ச்சிகளின் படங்களைத் தொகுப்பாகக் காண கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குக!
https://drive.google.com/drive/folders/0B3Xe8zVo5DYAWUJrMGR1OHd6V28

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
காயல்பட்டினத்திலிருந்து...
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி – கத்தர் கா.ந.மன்றம்)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved