காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெரு – கே.டீ.எம். தெரு ஆகிய தெருக்களுக்கிடையிலான ஓடைப் பகுதியில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் புகாரைத் தொடர்ந்து, நகராட்சியால் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த அவ்வமைப்பின் செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெரு - கே.டீ.எம். தெரு இடையில் மழை நீர் ஓடை அமைந்துள்ளது. இதன் சுற்றுப்புறப் பகுதிகளது மழை நீர், இந்த ஓடை வழியாகவே கடலைச் சென்றடையும்.
இந்த ஓடை பகுதியில் குப்பைகளும், சாக்கடை நீரும் தேங்கியிருப்பதாகவும், இதனால் டெங்கு போன்ற நோய்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் - குழும உறுப்பினர் ஒருவர் வழங்கியிருந்த – நிழற்படச் சான்றுகளுடன் கூடிய தகவல் - நகராட்சி ஆணையர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக நேற்று (ஏப்ரல் 24) அனுப்பப்பட்டது.
அவ்விடம் கடைசியாக மார்ச் 13 அன்று துப்புரவு செய்யப்பட்டதாகவும், மீண்டும் அவ்விடத்தை இன்று துப்புரவு செய்துள்ளதாகவும், நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் – நிழற்படச் சான்றுகளுடன் “நடப்பது என்ன?” குழுமத்திற்குத் தகவல் வழங்கியுள்ளார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஏப்ரல் 25, 2017; 8:00 am]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|