காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் (சிங்கித்துறை) நகராட்சிக்குட்பட்ட நீர்தேக்க தொட்டி உள்ளது. இதில் தண்ணீர் எவ்வளவு இருப்பு உள்ளது என்பதைக் காண்பிக்கும் அளவு மானி ஒன்று இருந்தது.
இக்குடிநீர்த் தொட்டியருகில் - மாதவடியான் மகன் அமலதாஸ் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இவர் கடல் தொழில் செய்து வருகிறார். ஏப்ரல் 20ஆம் நாளன்று காலை 11 மணியளவில் திடீரென தண்ணீர் தொட்டியில் பொருத்தப்பட்டிருந்த அந்த அளவு மானி இவரது வீட்டின் மேல் விழுந்தது.
இதனால் வீட்டின் கல் சீட்டினாலான மேற்கூரை மேற்கூரை உடைந்து, வீட்டின் அலமாரி, கணினி ஆகியன சேதமடைந்தன. வீட்டுச் சுவற்றிலும் கீறல் விழுந்தது. வீட்டினுள்ளே ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில் விழுந்ததால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
மறுநாள் நிகழ்விடம் சென்று வீட்டைப் பார்வையிட்டு, சேத மதிப்பைக் கேட்டறிந்துள்ளதாகவும், விரைவில் அதைச் சரிசெய்து தருவதாகவும், இனி இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் – காயல்பட்டினம் நகராட்சியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படம்:
V.குமார்
|