காயல்பட்டினத்திலுள்ள 7 பள்ளிக்கூடங்களில் இலவச கல்வி பெற 92 இடங்கள் உள்ளதாக “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
சிறுவர்களுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (The Right of Children to Free and Compulsory Education (RTE) Act, 2009) - மத்திய அரசினால் 2009 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தது. இது குறித்த விதிமுறைகளை - 2011 ஆம் ஆண்டு, தமிழக அரசு வெளியிட்டிருந்தது. (TAMIL NADU RIGHT OF CHILDREN TO FREE AND COMPULSORY EDUCATION RULES, 2011)
இதன்படி - 6 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கு, அரசு உதவி பெறும் / அரசு உதவிபெறாத தனியார் பள்ளிக்கூடங்களில் (சிறுபான்மை அந்தஸ்து பெற்ற பள்ளிக்கூடங்களை தவிர்த்து) [(Private Aided/Unaided, Non-Minority)] - 25 சதவீத இடம், எளிய குடும்பங்களை சார்ந்த மாணவர்களுக்கு - ஒதுக்கப்பட வேண்டும்.
இந்த ஒதுக்கீடு, அப்பள்ளியின் ஆரம்ப வகுப்புகளில் இருந்து துவங்கும் (LKG அல்லது 1 ஆம் வகுப்பு). அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களிடம் இருந்து எந்த கட்டணமும் - பள்ளிக்கூடம் வாங்கக்கூடாது. அந்த மாணவர்களுக்கான கட்டணத்தை - அரசு, நேரடியாக - பள்ளிக்கூடங்களுக்கு வழங்கும்.
கடந்த பல ஆண்டுகளாக இந்த திட்டம் அமலில் இருந்தாலும், இது குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. மேலும் - பள்ளிக்கூடங்களும், இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களை இணைப்பதில் - மெத்தனம் காட்டிவந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு - இவ்வாண்டு முதல், இப்பள்ளிக்கூடங்களில் இணைய விரும்பும் மாணவர்கள் - அரசு இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
அரசு விதிமுறைகள்படி LKG முதல் இலவச கல்விபெற - காயல்பட்டினத்தில் 7 பள்ளிக்கூடங்களில் 92 இடங்கள் உள்ளன.
(1) அல்அமீன் மழலையர் & துவக்கப் பள்ளி (தேங்காபண்டக சாலை)
நுழைவு நிலை வகுப்பு: LKG
நுழைவு நிலையில் வகுப்பு எண்ணிக்கை: 1
நுழைவு வகுப்பில் மொத்த இடங்கள்: 30
இலவச கல்விக்காக ஒதுக்கப்படவேண்டிய இடங்கள்: 8
(2) காட் நீதன் மழலையர் & துவக்கப் பள்ளி (திருவள்ளுவர் தெரு)
நுழைவு நிலை வகுப்பு: LKG
நுழைவு நிலையில் வகுப்பு எண்ணிக்கை: 1
நுழைவு வகுப்பில் மொத்த இடங்கள்: 30
இலவச கல்விக்காக ஒதுக்கப்படவேண்டிய இடங்கள்: 8
(3) ஸ்ரீ சத்யா சாய் மழலையர் & துவக்கப் பள்ளி (லட்சுமிபுரம்)
நுழைவு நிலை வகுப்பு: LKG
நுழைவு நிலையில் வகுப்பு எண்ணிக்கை: 1
நுழைவு வகுப்பில் மொத்த இடங்கள்: 30
இலவச கல்விக்காக ஒதுக்கப்படவேண்டிய இடங்கள்: 8
(4) சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
நுழைவு நிலை வகுப்பு: LKG
நுழைவு நிலையில் வகுப்பு எண்ணிக்கை: 2
நுழைவு வகுப்பில் மொத்த இடங்கள்: 60
இலவச கல்விக்காக ஒதுக்கப்படவேண்டிய இடங்கள்: 15
(5) முஹைதீன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
நுழைவு நிலை வகுப்பு: LKG
நுழைவு நிலையில் வகுப்பு எண்ணிக்கை: 2
நுழைவு வகுப்பில் மொத்த இடங்கள்: 60
இலவச கல்விக்காக ஒதுக்கப்படவேண்டிய இடங்கள்: 15
(6) எல்.கே. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
நுழைவு நிலை வகுப்பு: LKG
நுழைவு நிலையில் வகுப்பு எண்ணிக்கை: 4
நுழைவு வகுப்பில் மொத்த இடங்கள்: 120
இலவச கல்விக்காக ஒதுக்கப்படவேண்டிய இடங்கள்: 30
(7) ரஹ்மானியா நர்சரி மற்றும் துவக்கப்பள்ளி
நுழைவு நிலை வகுப்பு: LKG
நுழைவு நிலையில் வகுப்பு எண்ணிக்கை: 1
நுழைவு வகுப்பில் மொத்த இடங்கள்: 30
இலவச கல்விக்காக ஒதுக்கப்படவேண்டிய இடங்கள்: 8
இப்பள்ளிக்கூடங்களில் இணைய விரும்பும் மாணவர்கள் - அரசு இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இன்று (ஏப்ரல் 20) முதல் அந்த விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
முகவரி:
http://tnmatricschools.com/rte/rteapp.aspx?c=QfY$!z)A
இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய முடியாதவர்கள், படிவங்களை நிரப்பி - சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களில் சமர்ப்பிக்கலாம். இப்படிவங்களை இலவசமாக பெற நடப்பது என்ன? குழுமம் விரைவில் - இறைவன் நாடினால் - ஏற்பாடு செய்யும்.
இந்த திட்டத்தின் கீழ் - தூத்துக்குடி மாவட்டத்தில், எந்தெந்த பள்ளிக்கூடங்களில், எவ்வளவு இடங்கள் உள்ளன என்ற விபரத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|