காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில், யு.கே.ஜி. பயின்று முடித்து, முதல் வகுப்பில் நுழையும் மழலை மாணவ-மாணவியரை ஊக்கப்படுத்தும் நோக்குடன் 21ஆவது பட்டமளிப்பு விழா, 20.04.2017. வியாழக்கிழமையன்று 14.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மாணவி ஏ.எச்.ராபியா ஜஹ்ரா கிராஅத் ஓத, தமிழத்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. ஆசிரியை அமலராணி வரவேற்றார். வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் பேராசிரியையரான வர்ஷுமதி, முத்து மொகுதூம் ஃபாத்திமா ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவியருக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்திப் பேசினர்.
கோடை விடுமுறையின்போது மாணவ-மாணவியரை அவர்களது பெற்றோர் நடத்த வேண்டிய விதம் குறித்து, விழாவுக்குத் தலைமை தாங்கிய - பள்ளி தலைமையாசிரியை எம்.செண்பகவல்லி அறிவுரை வழங்கினார்.
ஆசிரியை எம்.ராமேஷ்வரி நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
பட்டம் பெற்று, முதலாம் வகுப்பிற்குச் செல்லும் மாணவ-மாணவியரை – பள்ளி தாளாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், ஆசிரியையர், அலுவலர்கள், பெற்றோர் பாராட்டினர்.
|