வரும் ரமழான் மாதத்தில், மன்றத்தின் 10ஆவது பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என, ஐக்கிய அரபு அமீரகம் அபூதபீ காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
அபூதபீ காயல் நல மன்றத்தின் 49 ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 14-04-2017 வெள்ளிக்கிழமை மாலை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் நஹ்வி. S.A. இஸ்ஹாக் லெப்பை ஆலிம் மஹ்ழரி அவர்களின் தலைமையில் மன்றத்தலைவர் வி.எஸ்.டீ.ஷேக்னா லெப்பை இல்லத்தில் நடைபெற்றது மன்ற இணைப் பொருளாளர் நோனா அபூஹுரைரா கிராஅத் ஓதி கூட்ட நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
பங்கேற்றோரின் விரிவான கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
ரமழான் மாத உணவுப்பொருள் வழங்கும் திட்ட உதவி:
எதிர்வரும் ரமழான் - நோன்பு மாதத்தை முன்னிட்டு காயல்பட்டினத்திலுள்ள ஏழை-எளிய பயனாளிகளுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கிட ஏற்கனவே முடிவு செய்த படி இவ்வருடமும் இன்ஷா அல்லாஹ் மன்றத்தின் சார்பாக 25 நபர்களுக்கும் தனித்தனி அனுசரணை மூலமும் இன்ஷா அல்லஹ் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டு மேலும் இதற்காக உணவுப்பொருள் வழங்க நாடுவோர் உடனடியாக இதற்கான ஒருங்கிணைப்பாளர்கள் மன்றத்தலைவர் V.S.T.ஷேக்னா லெப்பை, பொதுச்செயலாளர் மக்பூல் அஹ்மது மற்றும் இணைப் பொருளாளர்கள் நோனா அபூஹுரைரா, மற்றும் M.O. அன்ஸாரீ ஆகியோர்களை தொடர்புகொண்டு உடனடியாக அனுசரணை மற்றும் பயனீட்டாளர்களின் முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
மன்றம் சார்பாக உள்ளூர் ஒருங்கிணைப்பாளராக எற்பாடுசெய்யப்பட்ட காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ அவர்கள் மூலம் சமையல் பொருளுதவி பயனீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.
இமாம்-பிலால் ஊக்கத்தொகை:
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வாவின்) முன்முயற்சியில் செய்யப்படும் - இமாம் பிலால் ரமழான் நோன்புப் பெருநாள் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்தாண்டைப் போல இவ்வாண்டும் இணைந்து செயல்படவும், அவ்வகைக்காக நிதியை வழங்குவதற்கு மன்றத்தலைவர் V.S.T. ஷேக்னா லெப்பை மற்றும் பொதுச்செயலாளர் மக்பூல் அஹ்மது ஆகியோர்களை மன்ற உறுப்பினர்கள் தொடர்புகொண்டு தத்தம் நிதியை ஜகாத் மற்றும் ஸதக்கா வகையில் வரும் ரமழான் பொதுக்குழு கூட்டம் 08-6-2017 முன்பு செலுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ரமழானில் அடுத்த பொதுக்குழு கூட்டம்:
மன்றத்தின் அடுத்த (10-ஆவது) பொதுக்குழு கூட்டத்தை, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் புனித ரமழான் மாதம், ஜூன் 8 ஆம் திகதி வியாழக்கிழமை இப்தாருடன் வெகு சிறப்பாகக் கூட்ட இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு நிகழ்விடம், மற்றும் பொதுக்குழு இதர காரியங்களை சிறப்பாக்கி தர கடந்தாண்டைப் போல இவ்வாண்டும் ஹாஜி I. இம்தியாஸ் அஹ்மத் அவர்கள், S.A.C. ஹமீத், V.S.T. ஷேக்னா லெப்பை ஆகியோர்களும், சந்தா தொகை வசூலிக்க இணைப் பொருளாளர்கள்: நோனா அபூஹுரைரா (0561092766 ] M.O. அன்ஸாரீ(0559100909), மற்றும் இஸ்மாயில் [0502933778] ஆகியோர்களும் செயல்படுவார்கள். மேலும் இடம் முடிவான பிறகு தனி அழைப்பு செய்தியாக வெளியிட முடிவு செய்யப்பட்டது..
பொதுக்குழு நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனைத்து உறுபினர்களுக்கும் மின்னஞ்சல் / குறுஞ்செய்தி (Email/SMS) வாட்சப் (WhatsApp), இணையதளங்களில் மூலம் தகவல் தெரிவித்து உறுப்பினர்களை ஒன்றிணைக்க செயற்குழு உறுப்பினர்கள் PMSR செய்யது இப்ராஹிம், PMSR ஷேக்னா,SE.மொஹைதீன், M.H.L.ஷேக் மற்றும் டாக்டர் விளக்கு S. செய்யித் அஹ்மத் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
சிறப்பு விருந்தினர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக மன்ற துணைத்தலைவர் S.A.C. ஹமீத், செயற்குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ ஆகியோர் செயல்படுவார்கள்
ஷிஃபா அறக்கட்டளை
ஷிஃபா அறக்கட்டளை மூலம் மருத்துவ உதவிக்காக பண பரிவர்த்தனைகளை முறைப்படுத்திட ஷிஃபா எடுக்கும் நடவடிக்கைகளின் கூடுதல் விவரங்களை கேட்டறிய மன்ற ஷிஃபா ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விளக்கு S. செய்யித் அஹ்மத் செயல்படுவார்கள் என முடிவு செய்யப்பட்டது.
இறுதியாக ஹாஃபிழ் முத்து முஹம்மத் துஆ இறைஞ்ச, கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
செயற்குழுவில் பங்கேற்ற அனைவருக்கும், சுவையான காயல்பட்டினம் பாரம்பரிய கறிகஞ்சி, மிக்சர் மற்றும் வடை சிற்றுண்டி மன்றத்தலைவர் வி.எஸ்.டீ.ஷேக்னா லெப்பை அனுசரணையில் வழங்கி உபசரிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக...
தகவல்:
A.R.ரிஃபாய்
(மக்கள் தொடர்பு செயலர்)
படங்கள்:
துணி முஹம்மத் உமர் அன்ஸாரீ
|