பொதுமக்களுக்கு புதிய வரிவிதிப்பை காயல்பட்டினம் நகராட்சி அறிமுகம் செய்துள்ளது. இதற்கான எதிர்ப்பைப் பதிவு செய்ய 15 நாட்கள் கால அவகாசமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகள் 2016 யை (SOLID WASTE MANAGEMENT RULES 2016) மேற்கோள்காட்டி - பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மீது புதிய வரியை அறிமுகம் செய்ய - காயல்பட்டினம் நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இது தொடர்பாக நேற்றைய நாளிதழில் காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது:-
வெளியான விளம்பரம் தெரிவிக்கும் தகவல்படி, இந்த
--- தீர்மானம் (எண் 1373) - மார்ச் 24 (2017) அன்று நிறைவேற்றப்பட்டதாகவும்,
--- அந்த தீர்மானப்படி புதிய துணை விதிகள் (BYE-LAWS) இயற்றப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த துணைவிதிகள் குறித்து ஆட்சேபணைகள் எதுவும் இருந்தால் - 15 தினங்களுக்குள், நகராட்சிக்கு தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் மன்றம் தேர்வாகாத நிலையில் இதுபோன்ற புதிய வரியை விதிக்க நகர்மன்ற முற்படக்கூடாது எனவும், இந்த புதிய வரி அவசியம் இல்லாத ஒன்று எனவும் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக மார்ச் மாதம் துவக்கத்தில் நகராட்சியிடம் மனு வழங்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.
ஏற்கனவே பல்வேறு வரிச் சுமைகளைத் தாங்கி வரும் பொதுமக்கள் மீது விதிக்கப்படும் இந்தப் புதிய வரியை ரத்து செய்ய “நடப்பது என்ன?” குழுமம் முழுமையாகப் போராடும் என்பதனை குழுமம் சார்பாகப் பதிவு செய்கிறோம்.
நகராட்சியில் ஏற்கனவே வசூல் செய்யப்படும் வரிகள் முறையாக - வீணடிக்கப்படாமல் செலவிடப்பட்டால் இந்த புதிய வரிக்கு எந்த அவசியமும் ஏற்படாது என்பதனையும் “நடப்பது என்ன?” குழுமம் தெரிவித்துக் கொள்கிறது.
புதிய வரிகளைத் தவிர, புதிய அபராதங்களையும் இந்த துணை விதிமுறைகள் அறிமுகம்படுத்தியுள்ளன.
================
புதிய வரிகள் சாராம்சம்
================
இல்லங்களுக்கான கட்டணம் ஆண்டுக்கு 120 ரூபாய் முதல் 480 ரூபாய் வரை
தனியார் பள்ளிகள், கல்லூரிகள் விடுதிகள் - ஆண்டுக்கு 3000 ரூபாய்
தேனீர் கடைகள் - ஆண்டுக்கு 600 ரூபாய்
தள்ளு வண்டி உணவு விடுதிகளுக்கு - தினமும் 10 ரூபாய் என ஆண்டுக்கு 3650 ரூபாய்
சிறிய ஹோட்டல்களுக்கு - ஆண்டுக்கு 6000 ரூபாய்
திருமண மண்டபங்கள் - நிகழ்வு ஒன்றுக்கு 500 ரூபாய்
மருத்துவமனைகளுக்கு - ஆண்டுக்கு 3000 ரூபாய்
க்ளினிகளுக்கு - ஆண்டுக்கு 1200 ரூபாய்
மீன் / மாமிசம் விற்பனைக் கடைகளுக்கு - ஆண்டுக்கு 1200 ரூபாய்
^^^^^ நகராட்சி வெளியிட்டுள்ள புதிய துணை விதிமுறைகள் (Bye-Laws) – இதன்கீழ் தரப்பட்டுள்ளது:-
^^^^^ புதிய வரிகள் / அபராதங்கள் விபரங்கள் படங்களாக இணைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய வரிகள் / அபராதங்கள் அவசியம் இல்லை என கருதும் பொது மக்கள் / நிறுவனங்கள் தங்கள் எதிர்ப்பை - எழுத்துப்பூர்வமாக, தனிப்பட்ட முறையில், பதிவு தபால் மூலம் அனுப்பி - நகராட்சியிடம் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஏப்ரல் 20, 2017; 7:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|