குடும்ப அட்டையில் குடும்ப உறுப்பினரின் பெயர் இருந்து, அரசு அறிவித்த காலக்கெடுவுக்குள் அவர்களது ஆதார் எண்ணை நியாய விலைக் கடையில் சமர்ப்பிக்காத காரணத்தால், பலரது பெயர்கள் அரசு இணையதளத்தில் விடுபட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்களுக்கு வழங்கப்படும் புதிய மின்னணு (ஸ்மார்ட்) குடும்ப அட்டையில் அந்த உறுப்பினரின் பெயர் விடுபடுவதோடு, வாங்கும் சாமான்களின் அளவிலும் குறைவு ஏற்படும்.
இவ்வாறிருக்க, தமது குடும்ப அட்டையில் குடும்ப உறுப்பினரின் பெயர் இருந்து, இதுவரை அவரது ஆதார் எண்ணை சமர்ப்பிக்காதவர்கள் மீண்டும் தமது நியாய விலைக் கடைகளில் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க தற்போது வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், கால தாமதம் செய்யாமல் பொதுமக்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, விடுபட்ட குடும்ப உறுப்பினரின் ஆதார் எண்களை எளிதில் பதிவு செய்து, தேவையற்ற அலைச்சலைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
|