காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது மத்ரஸா கட்டிடம். நாட்பட்ட இக்கட்டிடம் மிகவும் பழுதுற்றுள்ள நிலையில், எப்போதும் - குறிப்பாக மழைக்காலங்களில் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் காட்சியளித்தது.
இதனையடுத்து, அக்கட்டிடத்தை இடித்தகற்றி, புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டு, 07.07.2016. நோன்புப் பெருநாளன்று தொழுகை நிறைவுற்றதும், கட்டிடப் பணியை முறைப்படி துவக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
படிப்படியாக நடைபெற்ற கட்டுமானப் பணி, கான்க்ரீட் அமைக்கும் நிலையை எட்டியது. இதனையடுத்து. 12.04.2017. புதன்கிழமையன்று கான்க்ரீட் பணிகள் முறைப்படி துவக்கி வைக்கப்பட்டன.
பள்ளியின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ ஃபைஜீ துஆ பிரார்த்தனை செய்ய, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கான்க்ரீட் கலவை இயந்திரத்திற்குள் மணலைக் கொட்டி பணியைத் துவக்கி வைத்தனர்.
இக்கட்டுமானப் பணி, சுமார் 30 லட்சம் ரூபாய் செலவு மதிப்பீட்டில் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல்:
N.T.இஸ்ஹாக் லெப்பை ஜுமானீ
|