காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவில், ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளியில் அடங்கியிருக்கும் மஹான் ஹாஃபிழ் அமீர் வலிய்யுல்லாஹ் அவர்களின் நினைவாக, ஆண்டுதோறும் கந்தூரி நடத்தப்படுவது வழமை.
நடப்பாண்டு கந்தூரியை முன்னிட்டு, நகரளவிலான திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழுப்) போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளியின் நிர்வாகிகள் உள்ளிட்ட நெசவு ஜமாஅத் பிரமுகர்கள் முன்னிலை வகிக்க, போட்டியின் நடுவர்களாக காரீ ஏ.டீ.முஹம்மத் அப்துல் காதிர் என்ற ஏ.டீ.ஹாஜியார், ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ், ஹாஃபிழ் எஸ்.எச்.தாவூத் ஆகியோர் கடமையாற்றவுள்ளனர்.
|