பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பேயி, பல மாதங்களாக உடல் சுகவீனத்தால் படுக்கையுற்றிருந்த நிலையில், 16.08.2018. அன்று புது டில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் – சிகிச்சை பலனின்றி, 17.05 மணியளவில் காலமானார்.
அவரது உடல், டெல்லி கிருஷ்ண மேனன் மார்க் பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. 13.00 மணியளவில் அவரது இறுதி ஊர்வலம் புறப்பட்டு, ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல் என்ற இடத்தில் 16.00 மணியளவில் உடல் தகனம் செய்யப்பட்டது.
|