செளதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 113 - வது செயற்குழு ஜித்தா ஷரஃபிய்யாவிலுள்ள இம்பால உணவக உள்ளரங்கில் வைத்து நடந்தேறிய நிகழ்வின் விபரம் வருமாறு:
செளதி அரேபியா- ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 113-வது செயற்குழு கூட்டம் கடந்த 27/07/2018, வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப்பின் 07:30 மணியளவில் ஜித்தா-ஷரஃபியாவிலுள்ள இம்பாலா கார்டன் உணவக உள்ளரங்கில் வைத்து சிறப்பாக நடந்தேறியது.
சகோ. குளம் எம்.ஏ. அஹ்மது முஹியதீன் தலைமையில் சகோ. எம்.ஐ. அப்துல் பாஸித் இறைமறை ஓத சகோ. ஏ.எம்.செய்து அஹ்மது வருகை புரிந்த அனைவரையும் வரவேற்க கூட்டம் இனிதே ஆரம்பமானது.
தலைமையுரை:
சமீபத்தில் விடுமுறையில் தாயகம் சென்று இருந்த சமயம் உலக காயல் நல மன்றங்களின் கூட்டமைப்பான இக்ரா கல்விச் சங்கத்தின் பொதுக்குழுவில் கலந்து சிறப்பித்து அதன் சிறப்பான சேவைதனை அறிந்து கொண்டதுடன் அதில் கலந்து சிறப்பித்த உறுப்பினர்கள், கல்விக்காகவும், இக்ராவின் வளர்ச்சிக்கும் நல்ல பல கருத்துக்களை வழங்கி, நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்ற அவர்களின் தன்னார்வத்தை அங்கே என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. மேலும் நம் மன்ற உள்ளூர் பிரதிநிதி சகோ,ஏ.எம்.இஸ்மாயில் நஜீப் அவர்களோடு மன்ற நலப்பணிகள் பற்றியும் கலந்துரையாடி, ஷிபா அறக்கட்டளையின் சிறந்த பணிகளையும் தெரிந்து கொண்டேன் என்று, மன்றம் சார்ந்த செய்திகளை பகிர்ந்ததும் பரிமாறி கொண்ட நடப்புக்கும் கூட்ட தலைவர் சகோ. குளம் எம்.ஏ. அஹ்மது முஹியதீன் விளக்கமாக எடுத்துரைத்தார்.
மன்ற செயல்பாடுகள்:
கடந்த நோன்பில் நடந்த கூட்டத்தின் தீர்மானம் மேலும் நிறைவேறிய மன்றப்பணிகள், இமாம் மற்றும் முஅத்தின் ஆகியோர்களுக்கு நாம் வழங்கிய நிதி மற்றும் மன்றம் சார்ந்த செய்திகளையும், விளக்கினார் மன்ற செயலாளர் சகோ சட்னி, எஸ்.ஏ.கே. செய்யிது மீரான்.
நான் ஊரில் இருந்த வேளையிலே இக்ரா கல்விசங்கதிற்கும், ஷிபா மருத்துவ அறக்கட்டளை மற்றும் மக்கள் மருந்தகம் இவற்றிற்கு விஜயம் செய்து அவற்றின் மகத்தான சேவைகள் எவ்வாறு உள்ளது என்று பார்க்கும்போது மிக பாராட்டக்கூடியதாக இருந்தது. தம் தமது சொந்த வேலைகளுக்கு மத்தியில் நம் ஊர் நலனுக்காக அலுவலகம் வந்து அவர்கள் சிறந்த பணியாற்றுவதை என்னால் காண முடிந்தது. அதிலும் குறிப்பாக சகோ. இக்ரா தர்வேஷ் இரவு 12 மணிவரை பணியாற்றுவதையும் அறிந்து கொண்டேன். ஆக நம் மக்களுக்குக்காக பாடுபடும் எல்லா நல்ல உள்ளங்களுக்கும் வல்ல அல்லாஹ் பூர்ண நற்சுகத்துடன், எல்லா வளங்களும் பெற்று நீண்ட காலங்கள் வாழ்ந்திட துஆ செய்தவனாக எனதுரையை நிறைவு செய்கிறேன் என்று, மன்றம் சார்ந்த ஊர் நடப்புகள், இமாம், முஅத்தின் இவர்களுக்கு வழங்கிய நிதியால் அவர்கள் செய்த துஆக்கள் மற்றும் ஊரில் நடக்கும் இருசக்கர வாகன விபத்துக்கள் பற்றியும் மிக கவலையுடன், விளக்கமாக எடுத்துரைத்தார் மன்ற செயலாளர் சகோ,எம்.ஏ.செய்யிது இப்ராஹீம்.
நிதி நிலை:
தற்போதைய இருப்பு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவிகள் போன்ற விபரம் மற்றும் நிதிநிலைகளை விளக்கினார் பொருளாளர் சகோ , எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம்.
மருத்துவ உதவிகள்:
ஷிபா மருத்துவ கூட்டமைப்பின் மூலமாக பெறப்பட்ட பயனாளிகளின் மனுக்கள் வரிசைப்படுத்தப்பட்டு மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டு, புற்றுநோய், சிறுநீரக பிரச்சனை, மூலம், டெங்கு, இருதயம், தோல் நோய், குடல் இறக்கம், இரத்தம் உறையாமை, மற்றும் தொடர் சிகிச்சை என பாதிப்புக்குள்ளாகியுள்ள நம் காயல் சொந்தங்கள் மொத்தம் 18 பயனாளிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு அவர்களின் பூரண நல பேற்றுக்காக வல்லோன் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கப்பட்டது. மேலும் பொறியியல், B TEC, Pharmacy போன்ற உயர்கல்விக்கு என 12 பயனாளிகள் உதவித்தொகை, ஆக மொத்தம் 30 பயனாளிகளுக்கு இந்த கூட்டத்தில் முடிவு செய்து வழங்கப்பட்டது.
கலந்துரையாடல்:
நமதூரில் பெருகிவரும் இருசக்கர வாகன விபத்து, இக்ரா மற்றும் ஷிபா அமைப்பு மற்றும் கே எம் டி மருத்துவமனை சம்பந்தமான பல செய்திகளையும் உறுப்பினர்களின் ஆரோக்கியமான கலந்துரையாடலில் பரிமாறப்பட்டன.
இன்ஷாஅல்லாஹ் மன்றத்தின் 114-வது செயற்குழு கூட்டம் ஹஜ் கழிந்து செப்டம்பர் மாதம் புனித மக்காவில் வைத்து நடத்துவது எனவும் இதன் விபரம் அடுத்து அறியத்தரப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
சகோ. ஓ.ஏ.சி. கிஜார் சலாஹுத்தீன் நன்றி நவில, சகோ.பிரபு எஸ்.ஜெ.நூர்தீன் நெய்னா பிரார்த்திக்க துஆ கஃப்பாராவுடன் இச்செயற்குழு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!
சகோ. பிரபு எஸ்.ஜெ.நூர்தீன் நெய்னா கூட்டத்திற்கான முழு அனுசரணையை சிறப்புடன் செய்து இருந்தார்.
தகவல் மற்றும் படங்கள்:
எஸ்.ஐச்.அப்துல் காதர்.
பாட்சி ஷமீம் .
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
27.07.2018.
|