இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர ஊழியர் கூட்டத்தில், அக்கட்சியின் மாணவரணிக்குப் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதோடு, இம்மாதம் 24ஆம் நாளன்று நடைபெறவுள்ள – போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர ஊழியர் கூட்டம், 17.08.2018. வெள்ளிக்கிழமையன்று 17.00 மணியளவில், கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் விருந்தினர் இல்ல வெளிவளாகத்தில் நடைபெற்றது.
நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் தலைமை தாங்கினார். கே.ஆர்.மஹ்மூத் ஸாலிஹ் கிராஅத் ஓதினார். மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் வரவேற்றார். ஹாங்காங் காயிதேமில்லத் பேரவையின் சீனப் பிரதிநிதி பீ.எஸ்.என்.அஹ்மத் ஜரூக், கத்தர் காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் பி.எம்.ஹுஸைன் ஹல்லாஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட – நகர நிர்வாகிகளான என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ, என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.
இக்கூட்டத்தில் முன்னிலை வகித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், அதன் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், கூட்டத்தின் நோக்கம் குறித்த விளக்கத்தை உள்ளடக்கி சிறப்புரையாற்றியதோடு, நகர மாணவரணி தேர்தலை நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை அறிவித்தார்.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 – இரங்கல் தீர்மானம்:
அண்மையில் காலமானவர்களான...
(1) இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்,
(2) தமிழக முன்னாள் முதல்வரும் – திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி,
(3) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவர் அல்ஹாஜ் ஏ.கே.அப்துல் ஹலீம்,
(4) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும் – அதன் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்களது தந்தை கே.எல்.டீ.அஹ்மத் முஹ்யித்தீன்,
(5) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில முதன்மைத் துணைத்தலைவரும் – நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான எம்.அப்துர்ரஹ்மான் அவர்களது தந்தை முஹ்யித்தீன் அப்துல் காதிர்,
(6) மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் ஷபீர் அஹ்மத்,
(7) கேரள முன்னாள் அமைச்சர் செர்க்களம் அப்துல்லாஹ்,
(8) நகர துணைச் செயலாளர் என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீனின் சகோதரரும் – காயல்பட்டினம் அப்பா பள்ளியின் முஅத்தினுமான என்.டீ.ஹாமித் லெப்பை
ஆகியோரது மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களுள் மர்ஹூம்களின் மக்ஃபிரத்திற்காக துஆ இறைஞ்சப்பட்டது.
தீர்மானம் 2 – மாணவரணி நிர்வாகிகள் தேர்வு:
மாநில பொதுச் செயலாளர் அல்ஹாஜ் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்களால் மாணவரணிக்கு தேர்தல் நடத்தப்பட்டு, பின்வருமாறு நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
தலைவர்:
கே.ஆர்.மஹ்மூத் ஸாலிஹ்
செயலாளர்:
கே.எச்.எம்.முஹம்மத் உமர் ராஃபிக்
பொருளாளர்:
கே.எம்.ஏ.அஹ்மத் முஹ்யித்தீன்
துணைத் தலைவர்கள்:
(1) கே.ஏ.எல்.மஹ்பூப் சுப்ஹானீ
(2) பீ.ஏ.இசட்.சாமு ஹஸ்ஸான்
(3) டீ.ஏ.இப்றாஹீம் ஃபஹீமுல்லாஹ்
(4) மூஸா
துணைச் செயலாளர்கள்:
(1) பீ.ஆர்.முஸ்தஃபா கமால்
(2) வி.எம்.எஸ்.முஹம்மத் மின்ஹாஜ்
(3) சுலைமான்
(4) ஏ.எம்.அப்துர்ரஹீம்
தீர்மானம் 3 – இதர அணிகளுக்கு ஒரு மாத காலத்திற்குள் நிர்வாகிகள்:
கட்சியின் நகர இளைஞரணிக்கு (1) எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், (2) ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் ஆகியோர் அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். அடுத்த ஒரு மாத காலத்திற்குள் உறுப்பினர்களைச் சேர்ந்து, முறைப்படி புதிய நிர்வாகிகளைத் ஏற்படுத்த அவர்கள் பொறுப்பளிக்கப்பட்டனர்.
அதுபோல - மகளிரணி, சுதந்திர தொழிலாளர் யூனியன் ஆகிய - கட்சியின் இதர அணிகளை விரைவாக அமைத்திட தீர்மானிக்கப்பட்டதோடு, அதற்கான பணிகளைச் செய்திட கட்சியின் நகர தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
தீர்மானம் 4 – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவி:
கடும் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களுக்கு உதவும் வகையில், நகரின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும், பெருநாளன்று கடற்கரையிலும் நிவாரண நிதி திரட்டி வழங்கிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5 – அரசியல் விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம்:
வரும் செப்டம்பர் 2ஆவது வாரத்தில், காயல்பட்டினத்தில் அரசியல் விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம் நடத்திடவும், அதில் – சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், கட்சியின் தேசிய துணைச் செயலாளருமான எச்.அப்துல் பாஸித், மாணவரணி தேசிய துணைத் தலைவர் கேரளாவைச் சேர்ந்த அஹ்மத் சாசு ஆகியோரை சிறப்புப் பேச்சாளர்களாக வரவழைக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 6 – போதைப் பொருள் ஒழிப்புப் பேரணியில் பங்கேற்பு:
வரும் 24.08.2018. வெள்ளிக்கிழமையன்று நகரில் நடத்தப்படவுள்ள – போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணியில், கட்சியின் சார்பில் பெருந்திரளாகக் கலந்துகொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் உடைய நன்றியுரை, துஆவைத் தொடர்ந்து ஸலவாத்துடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |