தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், 22.08.2018. புதன்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அவ்வமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாளை முன்னிட்டு, அன்று 07.30 மணிக்கு பெருநாள் தொழுகை காயல்பட்டினம் கடற்கரையில் நடத்தப்பட்டது.
அப்துர்ரக்கீப் தொழுகையை வழிநடத்த, அப்துர்ரஹ்மான் குத்பா உரையாற்றினார்.
பெண்களுக்கும் தனி இடவசதி செய்யப்பட்டிருந்த இத்தொழுகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர நிர்வாகிகளும் - அங்கத்தினருமான ஷம்சுத்தீன், சாளை முஹம்மத் அப்துல் காதிர், ‘ஜப்பான்’ சுலைமான், லக்கி மக்கீ, தேக் முஜீப், நகரப் பிரமுகர்களான டாக்டர் எம்.ஏ.அபுல்ஹஸன், எஸ்.இ.மரைக்கார் ஆலிம், வி.பி.ஷம்சுத்தீன், கோஸ் முஹம்மத், மவ்லவீ எம்.எம்.அஹ்மத் ஸாஹிப், ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப் உட்பட நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
தொழுகை நிறைவுற்றதும், ஆண்கள் பகுதியிலிருந்து 43 ஆயிரத்து 857 ரூபாயும், பெண்கள் பகுதியிலிருந்து 47 ஆயிரத்து 780 ரூபாயும் என மொத்தம் 91 ஆயிரத்து 637 ரூபாய் தொகையும், தங்க மோதிரம் ஒன்றும் ஏழைகள் நல நிதிக்கான நன்கொடையாக சேகரிக்கப்பட்டது. பள்ளி கட்டிட நிதியாக 9 ஆயிரத்து 400 ரூபாய் சேகரிக்கப்பட்டது.
தகவல் & படங்கள்:
‘தேக்’ முஜீப் |