ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்றம் சார்பில், நிகழும் ஆகஸ்ட் மாதம் 19ஆம் நாளன்று – முதலுதவி விழிப்புணர்வு & பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.
இதில் ஆண்களுக்கு 50, பெண்களுக்கு 50 என மொத்தம் 100 இருக்கைகள் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் பங்கேற்க விரும்புவோர், நகரிலுள்ள நான்கு நிறுவனங்களில் படிவத்தைப் பெற்றுப் பூர்த்தி செய்து வழங்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, இணையதளம் மூலமும் பெயர் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.
அபூதபீ காயல் நல மன்றம் மற்றும் காயல்பட்டினம் ஷிஃபா அறக்கட்டளை சார்பாக நகரில் முதலுதவி விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் வரும் 19-08-2018 - ஞாயிறு காலை 9மணி முதல் மதியம் 12.30 மணி வரை எல்.கே .மேனிலைப்பள்ளியில் கீழ் கண்ட நிகழ்முறை படி நடைபெற உள்ளது. முகாமில் உங்கள் வருகையை கீழ்க் கண்ட லிங்கில் பதிவு செய்து பயன் பெறுமாறு வேண்டிக்கொள்கிறோம்
https://goo.gl/forms/T6GHm8enI1P4Jgdy2
முகாம் அன்று அபூதபீ மன்றம் சார்பாக மருத்துவ முதலுதவி கையேடு ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.பொதுமக்கள் அதனை பெற்று பயன்பெறவும் அன்போடு வேண்டிக்கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்.
தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்கள்.
அபூதபீ காயல் நல மன்றம் - ஐக்கிய அரபு அமீரகம்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக...
தகவல்:
A.R.ரிஃபாய் (செய்தி / ஊடகத்துறை பொறுப்பாளர்) &
அப்துல் காதிர் பாதுல் அஸ்ஹப் (முகாம் ஒருங்கிணைப்பாளர்) |