காயல்பட்டினம் நகர மக்களுக்கு பல்லாண்டுகளாக மருத்துவ சேவையாற்றிய – சேவையாற்றி வருகிற மருத்துவர்களை கண்ணியப்படுத்தும் வகையில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், 19.08.2018. ஞாயிற்றுக்கிழமையன்று பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. அதே நிகழ்ச்சியில் – குழுமத்தின் அவசர மருத்துவ உதவித் திட்டமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இப்பாராட்டு விழாவில் கவுரவிக்கப்படவுள்ள மருத்துவ சேவையாளர்கள் பட்டியலை “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (MEGA) ஏற்பாட்டில் மூத்த மருத்துவர்கள் கவுரவிப்பு நிகழ்ச்சி (YEOMAN AWARDS FOR EXEMPLARY MEDICAL SERVICES)
மற்றும்
அவசர மருத்துவ உதவித்திட்டம் அறிமுக நிகழ்ச்சி (MEDICAL EMERGENCY RESPONSE PROJECT)
இறைவன் நாடினால்
ஆகஸ்ட் 19, 2018 ஞாயிற்றுக்கிழமை
மாலை 4:30 மணி முதல்
டாக்டர் எஸ்.ஆனந்தன் நினைவு மேடை
ஐக்கிய விளையாட்டு சங்க (USC) மைதானம்
காயல்பட்டினம்
===============
சிறப்பு விருந்தினர்கள்
===============
டாக்டர் M.பரீதா ஷிரின் M.B.B.S. (இணை இயக்குனர், அரசு சுகாதாரப்பணிகள், தூத்துக்குடி)
டாக்டர் M.கீதா ராணி M.B.B.S., D.P.H.,M.P.H.,D.B.E. (துணை இயக்குனர், அரசு சுகாதாரப்பணிகள், தூத்துக்குடி)
டாக்டர் M.S.அஷ்ரஃப் M.D., FICA, FRCP (Glasg.), FRCP (Lon.) (முன்னாள் தலைவர், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்)
-----------------------
கவுரவிக்கப்படும் மருத்துவர்கள்
-----------------------
டாக்டர் M.A.முஹம்மது தம்பி AB(USA), M.D., F.A.A.P, D.C.H.
டாக்டர் M. அபுல்ஹசன் M.B.B.S.
டாக்டர் A.முஹம்மது இத்ரீஸ் M.B.B.S.
டாக்டர் P.A.M.ஜாபர் சாதிக் M.B.B.S., D.F.M.
டாக்டர் M.S.L.மஹபூப் சுபுஹானி M.D., D.M. (Cardio.)
டாக்டர் M.S.நர்கீஸ் பானு M.B.B.S.
டாக்டர் V.பத்மநாபன் M.D.
டாக்டர் M.சாமு வஹீதா M.B.B.S., D.G.O, I.C.M.C.H.
டாக்டர் S.ராணி டப்ஸ் M.B.B.S.
டாக்டர் S.M.A.முஹம்மது அபூபக்கர் F.R.C.S., F.E.B.P.S.
டாக்டர் V.பாவநாசகுமார் M.D., D.C.H., P.G.D.H.Sc. (Diab.)
டாக்டர் D.முஹம்மது கிஜார் M.B.B.S., D.C.H.
டாக்டர் P.M.T.முஹைதீன் அப்துல் காதர் M.B.B.S., D.N.B
டாக்டர் N. சரஸ்வதி M.B.B.S.
++++++++++++++++++++++++++
சேவையாற்றி மறைந்த மருத்துவர்கள்
++++++++++++++++++++++++++
டாக்டர் G.I.B.பெர்னாண்டோ M.B.B.S., F.C.I.P.
டாக்டர் M.S.M.முஹம்மது சுலைமான் லெப்பை M.D.,D.V.
டாக்டர் S.ஆனந்தன் M.D.(PAED.), D.C.H.
டாக்டர் S.E.M.அபூபக்கர் M.B.B.S.
டாக்டர் I.அபு முஹம்மத் ஷபீக் M.B.B.S., ACU (Sri Lanka)
டாக்டர் A.அப்துல் சுபுஹான் M.B.B.S.
மனிதருக்கு நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக மாட்டான்! - நபிமொழி
நோயின்றி வாழவும், நோய் கண்டோருக்கு விரைந்து தீர்வு காணவும் இறைவன் நாட்டத்துடன் உதவுவோர் மருத்துவர்கள்!
மருத்துவர் தேவையோ அதிகம்; எண்ணிக்கையோ மிகக்குறைவு என்ற சூழலிலும் நமதூர் மக்களுக்காகப் பல்லாண்டுகளாக சேவையாற்றி வரும் இம்மருத்துவர்களுக்கு நன்றி செலுத்தும் இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துக்கொள்ள வருமாறு அன்போடு அழைப்பவர்கள் -
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஆகஸ்ட் 13, 2018; 9:30 am]
[#NEPR/2018081301]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|