காயல்பட்டினம் நகராட்சி அலுவலர்கள் – நகராட்சிப் பணி நேரத்தின்போது ஆடிப்பாடிக் கொண்டாடி, அதை வீடியோ பதிவு செய்து ‘டிக்-டாக்’ செயலியில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
https://youtu.be/YpCvMImihC4
https://youtu.be/vn8XYOI2_9g
https://youtu.be/SnY-OmIMGMI
https://youtu.be/KQ1spYGz5RY
https://youtu.be/hFrrlJ8r9dM
https://youtu.be/54r6mitMQrs
https://youtu.be/ER1dK2cuQF4
https://youtu.be/MVrvPBDreVQ
https://youtu.be/JzuIn5E_vW8
https://youtu.be/5HL1hHHXMRM
https://youtu.be/WK0wY7oZa4Y
https://youtu.be/foACPKu5X5M
நகராட்சியின் குடிநீர் குழாய் பொருத்துநர் நிஸார், அலுவலர்களான நவநீதகிருஷ்ணன், சுமி, ராஜ்குமார், பிரபு, கார்த்திக் உள்ளிட்டோர் அந்த வீடியோ காட்சிகளில் இடம்பெற்றுள்ளனர்.
இத்தகவலை – 27.06.2019. அன்று ‘கலைஞர்’ தொலைக்காட்சியும், அதனைத் தொடர்ந்து பிற தொலைக்காட்சி அலைவரிசைகளும், நாளிதழ்களும் காட்சிகளோடு செய்தி வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து, இது நகரின் அன்றைய முதன்மைப் பேசுபொருளானது.
https://youtu.be/U3dYdzRLpYM
இச்செயலில் ஈடுபட்டவர்கள் விளக்கம் அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்ததாகவும், பின்னர் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அவர் பரிந்துரைத்துள்ளதாகவும், இதுகுறித்த விசாரணைக்காக – நகராட்சி பொறியாளரும், (பொறுப்பு) ஆணையருமான எஸ்.சுரேஷ் – சென்னை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரைச் சந்திக்கச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. |