Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ... posted bysyedAhmed (HK)[13 September 2011] IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 8008
ஹாஜி RS அப்துல் லதீப் அவர்கள்.
மக்களின் கல்விக்கு கண் திறந்தவர்
எண்ணற்ற ஹாபில்களுக்கு உலக அறிவு புகட்டுவதில் முன்னுரிமை வழங்கியவர்.
யாரையும் எதிர்பாராமல் தன சொந்த முயற்சியாலும் இறைவனனின் துணை கொண்டும் பள்ளிகூடத்தை நடதிக்கட்டியவர்.
கொள்கையால் எதிர் முகாமிலும் இருப்பவர்களிடமும் அழகாய் அன்பாய் பழகும் பண்பாளர். பள்ளி நடத்தும் அனுபவம் இருப்பதால் Management மற்றும் Reportability உடையவர். Rule மீறுபவர்களிடம் கடுமை காட்டக்கூடியவர். வயது, உலக அனுபவம், மார்க்க பண்பு, ஒழுக்கம், உலக அறிவு அனைத்தும் நிறைந்தவர். தன்னிறைவு பெற்றவர்.
பெரியவர்கள் வலியுறுத்தி கேட்டால் தவிர ஒதுக்கொள்ளமட்டார். பதவி ஆசை பந்தா இல்லாதவர்.
Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை... posted bySyedAhmed (HK)[09 September 2011] IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 7832
AWS மாமா உங்களின் கருத்து நூற்றிக்கு நூறு சரியனானது, வேகமாகவும் விவேகமாகவும் உணர்ச்சிக்கு முக்கியதுவ கொடுக்காமல் அறிவிற்கு முக்கியத்துவம் கொடுத்து, பழைய மோசமான அனுபவங்களை மனதில் வைத்து தனிப்பட்ட மனிதர்களின் விருப்பத்திற்கு வளையாமல், உண்மையுடன் பொய்யை கலக்காமல் நடந்ததை நடந்தாக எங்களுக்கு எடுத்து சொல்லும் உங்கள் பனி மிகவும் பாராட்டுக்கு உரியதும் காலத்திற்கு தேவையும் ஆனதாகும்.
Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை... posted bySyedAhmed (HK)[08 September 2011] IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 7792
உள்ளதை உள்ளபடி சென்றவர்களில் ஒன்றிற்கு மேலானவர்களிடம் ஊர்ஜிதப்படுத்தி, ஊடக தர்மத்தை பேணி விருப்பு வெறுப்பு இன்றி செய்தியை வெளியிட்ட காயல்பட்டினம்.காம் இணையதளத்திற்கு பாராட்டுக்கள்.
உங்களின் நடுநிலையான செய்தி எங்களை போன்று கடல் கடந்து வாழும் மக்கள் விழிப்புணர்வு பெறவும் சரியான முடிவுகளை எடுக்கவும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது.
Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை... posted bySyedAhmed (HK)[08 September 2011] IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 7781
போட்டியிட விரும்புவோர் அல்லது யார் வர வேண்டும் என்று விரும்புவோர் ஐக்கிய பேரவையிடம் பெயர் பதிவு செய்ய வேண்டுமா?
இதுக்கு பெயர் தான் Nomination இது Electrol Officer இடம் தான் செய்ய வேண்டும். நமது நகரமன்றத்தின் தேர்தலுக்கான Electrol Officer யார் என்பதை மாவட்ட ஆட்சி தலைவர் முடிவு செய்வார். ஐக்கிய பேரவை இதை செய்தால் இது Election Commission வேலையை ஐக்கிய பேரவை செய்வதாக ஆகும்.
25 பேரை ஐக்கிய பேரவை முடிவு செய்து அவர்களின் ஓட்டால் நகர் மன்ற தலைவர் முடிவு செய்யப்படுவார் என்பது முன்னமே கூடி முடி வெடுத்து பின் கதவு வழியாக வேண்டியவரை தலைவர் ஆக்கும் திட்டம் என்பது பளிச் என்று தெரிகிறது ..... பழைய புத்தகம் ஏற்கனவே நாம் எல்லோரும் படித்ததுதான் புதிதாக ஏதாவது கண்டுபிடியுங்கள்
Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை... posted bySyedAhmed (HK)[08 September 2011] IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 7779
நூதனமான தீர்மானம்
தேர்தலில் நேரடியாக போட்டியிட அல்லது அறிவுறுத்த ஆதரவு தெரிவிக்க வழிகாட்ட மட்டுமே சட்டம் வலி வகை செய்கிறது. மெகா வழிகாட்டுகிறோம் என்கிறார்கள் அது சட்டத்திற்கும் அறிவிற்கும் உள்பட்டது.
ஐக்கிய பேரவை PARELLEL ELECTION நடத்த நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது, கெட்டிக்காரன் பொய் எட்டு நாளில் வெளிப்படும் என்ற பழ மொழி தான் நினைவிற்கு வருகிறது
Re:ரமழான் 1432: தமிழ்நாடு தவ... posted bySyedAhmed (HK)[30 August 2011] IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 7471
எனக்கு தெரிந்து இந்த இயக்கம் தமிழ் நாடு முழுவதும் இந்த வேலையே செய்கிறது, ஏழைகளை தேடிசெச்ன்று கொடுக்க வேண்டும், நான் அறிந்த வகையில் அப்படிதான் செய்கிறார்கள்.
நமது ஜமாஅதுகளும் ஜாமத்துக்கு உட்பட்ட ஏழைகளின் பெருநாள் நல்ல படியாக இருக்க உதவி செய்ய வேண்டும், நம்மை போல் அவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பத ஜமாத்துக்கள் உறுதியாக எடுத்து நடைமுறை படுத்த வேண்டும்.
Re:‘நகராட்சித் தேர்தல் ஒருங்... posted bySyedAhmed (HK)[28 August 2011] IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 7372
இந்த கமெண்ட்ஸ் பகுதியிலும் மற்ற கமெண்ட்ஸ் பகுதிகளிலும் ஐக்கிய பேரவை பற்றி பலரும் எழுதி இருக்கிறார்கள், சிலர் ஐக்கிய பேரவையோடு சேர்ந்து செய்ய வேண்டும் என்றும் சிலர் இந்த அமைப்புகளுக்கு ஐக்கிய பேரவை ஆதரவு தர வேண்டும் என்றும்....
ஐயக்கிய பேரவையின் நிலை தான் என்ன, தேர்தலுக்கு வழிகாட்டுவதும் ஊழலற்றவர்கள் பதிவிக்கு வர ஐக்கிய பேரவை ஏதாவது முன் முயற்சி எடுக்கிறதா என்று ஒரு செய்தியும் இல்லை.
சுனாமி தொகுப்பு வீடு விஷயத்தில் தேர்தல் புறக்கணிப்பு என்று கூறிவிட்டு ஒன்றும் நடக்காமல் கலைந்தது போல் இல்லாமல் வீரியாமாக காரியம் ஆற்றினால் ஒழிய நாம் விரும்பும் நகர்மன்றம் அமைவது கேள்விக்குறியாகிவிடும். கவிமகன் காதர் காக்கா ஐக்கிய பேரவையுடன் coordination செய்த செய்தி இருந்தால் வெளியிடுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross