Re:...காயல் கலாச்சாரம் சரிதானா? posted byMuhammathu Salih (Chennai)[16 June 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44044
இஸ்லாமிய பார்வையில் நமதூர் கலாச்சாரம் சரிதானா? என்பதை அறிந்து கொள்ள ஒரு ஆலிமிடம் கேட்டேன். அதற்க்கு அவர் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனைவிமார்கள் வீட்டில் தானே தங்கினார்கள் என்றார் அவர். பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வீட்டில் தானே குடும்பம் நடத்தினார்கள் என்றேன். சரியான பதில் இல்லை. சஹாபாக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள். நாயகம் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சஹாபாக்களை எவ்வாறு வாழ போதனை செய்தார்கள் என்பவற்றை எல்லாம் மறு ஆய்வு செய்து ஷரியதிர்க்கு உட்பட்டு காலத்திற்கேற்றவாறு நம் ஊரில் மாற்றம் கொண்டுவர காழிகளும்ஆலிம்களும் ஊர்பெரியவர்களும் முயற்சி எடுக்க வேண்டும். உலகம் முழுவதும் இந்த விசயத்தில் ஒரு பாதையில் செல்லும்போது நமதூர் ஏன் இப்படி? நான்கு பெண் குழந்தைகள் பிறந்தால் நான்கு வீடுகள் என்பதெல்லாம் கொடுமையிலும் கொடுமை.
Re:... posted byS.A.C Salih (Chennai)[05 January 2015] IP: 101.*.*.* India | Comment Reference Number: 38756
சுய லாபத்தை கருத்தில் கொள்ளாமல் ஊர் பொது நலனை கருத்தில் கொள்ளுங்கள். நகராட்சியின் நிலத்தில் இத்திட்டம் வருவதை தடுப்பதில் இருந்தே உள்நோக்கம் புலனாகிறது.
எல்லா விஷயங்களிலும் முட்டுக்கட்டை போட்டு தடுத்து விட்டு ஆபிதா ஊருக்கு ஒன்றும் செய்ய வில்லை என்று பழியை அவர் மேல் போடுவது எந்தவிதத்தில் நியாயம்?
Re:... posted byS.AC.Salih (Chennai)[08 September 2014] IP: 101.*.*.* India | Comment Reference Number: 37105
நீரோ மன்னன் பிடில் வாசித்த கதை தான் நினைவுக்கு வருகிறது. ஏன் இந்த முரண்பாடு? கல்லூரி நிர்வாகம் காயல் மக்களுக்கு விளக்கம் தர கடமை பட்டுள்ளது. என் அருமை தாயையும் புற்றுக்கு பழி கொடுத்திருக்கிறேன்.
Re:... posted byShaik Mohamed Salih (Chennai)[31 July 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 29095
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எனது பால்ய நண்பன் இப்ராஹிமின் அப்பாவின் வபாத் செய்தி அறிந்து மிக்க துயருற்றேன். அன்னாரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுப்பானாக என்று வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதோடு மர்ஹூம் அவர்களுக்கு ஜென்னதுள் பிர்தௌஸ் என்ற மேலான சுவனபதியை அல்லாஹ் வழங்குவானாக ஆமீன்.
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byS.A.C Salih (Chennai)[30 September 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 9169
காயல் நகர வாக்காளப் பெருமக்களின் கவனத்திற்கு....
பாகிஸ்தானின் பெண் மந்திரி ஹினா ரப்பானி போன்ற அறிவுக்கூர்மையும், அனைவருடனும் இனிமையாக பழகும் பண்பாளரும் படித்த பட்டதாரியும், பல்வேறு சமூக சேவைகளில் தன்னலம் பாராமல் ஈடுபட்டு வருபவரும், கடந்த 12 வருட காலமாக Rafyas Rosery பள்ளி நிர்வாகத்தை முதல்வராக இருந்து சிறப்பாக நடத்தி வரும் அன்பு சகோதரி ஆபிதா B.sc., B.Ed., தற்போதுள்ள சூழ்நிலையில் நகர் மன்ற தலைவர் பொறுப்புக்கு மிகவும் பொருத்த மானவர்.
இவருக்கு ஏற்கனவே பல்வேறு IAS அதிகாரிகள் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகளின் செல்வாக்கு உள்ளது.
தமது சொந்த பணத்தை செலவு செய்து பல்வேறு சமூக சேவைகள் செய்து வருகிறார். தற்போதுள்ள சூழ்நிலையில் இவரே நமது நகர் மன்றத்திற்கு பொருத்தமான தலைவர்.
Re:நகர்மன்ற தலைவி பொறுப்புக்... posted byMohamed Salih (Chennai)[26 September 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 8783
சென்னை மாநகராட்சி கமிசனராக பணியாற்றிய திரு. ஜோதி ஜெகராஜன் IAS போன்ற அரசு உயர் அதிகாரிகளின் பாராட்டையும்,நன் மதிப்பையும் பெற்றவரும் இன்னும் இதுபோன்ற அரசு அதிகாரிகளின் செல்வாக்கை பெற்றவரும் நகரில் இரசாயணம் உரம் கலக்காமல் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள் மரம் செடி கொடிகளை மக்களுக்கு வழங்கி பசுமை புரட்சி செய்து கான்சருக்கு எதிராக சத்தமில்லாமல் சாதனை புரிந்து வரும் சகோதரி ஆபிதா B.sc., B.Ed., அவர்கள் லஞ்ச லாவண்யதிர்க்கு அப்பாற்பட்டவர், எந்த ஒரு அரசியல் கட்சியையும் சேராதவர், திறமையான நிர்வாகி குறிப்பாக சுறுசுறுப்பாக பணியாற்றக்கூடிய இளவயதுடயவர். இவரை தேர்ந்தெடுத்தால் நமதூர் பல வழிகளிலும் முன்னேற்றமடையும் என்பது என் கருத்து.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross