செய்தி: காயல்பட்டினத்தைப் புறக்கணித்துச் செல்ல முயன்ற பேருந்தை பொதுமக்கள் முற்றுகை! ஓட்டுநரும், நடத்துநரும் மன்னிப்புக் கேட்டதையடுத்து வழிவிடப்பட்டது!! பொதுமக்களிடம் “நடப்பது என்ன?” குழுமம் வேண்டுகோள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...உறுதியான நடவடிக்கை தேவை. posted byAbdul Gaffoor (Kayalpatnam)[02 January 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45045
முதலில் சகோதரர் ஆசிரியர் ஹுசைன் சார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
மிக்க துணிச்சலுடன் பேருந்தில் இருந்து கொண்டே நடப்பது என்ன குழுமத்தை தொடர்பு கொண்டு பேருந்து குறித்த சரியான வழித்தடத்தை அறிந்து இறுதி வரை நடத்துனருடன் போராடி நம் ஊர் வழியே பேருந்தை வரச்செய்து உள்ளீர்கள்,
இதே துணிச்சல் நம் அனைத்து மக்களிடையே இருந்தால் இன்ஷா அல்லாஹ் நம் ஊர் வழியே தான் அனைத்து பேருந்துகளும் செல்லும்.
அடுத்து சகோதரர் ஸாலிஹ் காக்கா கூறியது போல் நாம் அனைவரும் சாலையில் பேருந்துகளுக்கு இடைஞ்சல் தரும்படி நம் வாகனங்களை நிறுத்தாமல் இருந்தால் கண்டிப்பாக அனைத்து பேருந்துகளும் நம் ஊர் வழியே வந்து செல்லும்.
நிறைவாக சில பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் வேண்டுமென்றே நம் ஊரை புறக்கணிக்கிறார்கள். குறிப்பாக மதுரை மற்றும் கும்பகோணம் மண்டல பேருந்துகள் தான் அதிகம். Community Monitoring முறையில் வரும் 04.01.2017. புதன்கிழமையன்று ஒரு நாள் முழுக்க 24 மணி நேரம் – சுழற்சி முறையில் பேருந்து நிலையத்தில் முகாமிட்டு, காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்து செல்கின்ற பேருந்துகள் கண்காணிப்பு செய்யும் முறை மிகவும் பயனுள்ள ஒன்று. அதே நேரம் இதே முறையை நாம் ஆறுமுகநேரி-அடைகலாபுரம்-வீரபாண்டிய பட்டணம் சாலையிலும் போட்டோ மற்றும் வீடியோ பதிவுகள் மூலம் கண்காணித்து அந்த பதிவுகளை அந்த மண்டல மேலாளர்களிடம் ஒப்படைத்து அவர்களிடம் உறுதியான நடவடிக்கைக்கு வலியுறுத்தலாம்.
செய்தி: குடிநீர் வினியோக அளவீட்டுக் கருவி அமைவிடம் தொடர்பான வழக்கை திரும்பப் பெற ஹாஜி ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா குடும்பத்தார் இசைவு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:குடிநீர் வினியோக அளவீட்டு... posted byAbdul Gaffoor (kayalpatnam)[14 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 15911
ஜமால் மாமாவின் இந்த உதவும் பண்பினால் என்றும் உயர்ந்த பண்புள்ளவராக காட்சி அளிக்கிறார்.ஊருக்காக விட்டுக்கொடுக்கும் மனப்பாண்மை ஒரு சிலருக்கு தான் வரும்,அவர்களில் ஜமால் மாமாவும் ஒருவர் என்பதினை இதன் மூலம் நமக்கு தெளிவாக தெரிகிறது.மாமாவிற்கும் அவரது குடும்பதற்கும் நன்றிகள் பல.
செய்தி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரின் தனதார்வத்தில் மாணவர் வங்கிக்கணக்கு திறக்கும் முகாம்! சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ம... posted byabdul gaffoor (kayalpatnam)[10 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14325
தற்போது பள்ளிக்கூடங்களில் சஞ்சயிக்கா திட்டத்தை அரசு நிறுத்த சொல்லிவிட்டது. இத்திட்டதை நிறுத்தி 2 ஆண்டுகள் ஆகிவிட்டதே.......
நகரில் ஒருவழிப்பாதை posted byabdul gaffoor (kayalpatnam)[27 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13847
நம் ஊருக்கு வெளியூரில் இருந்து பேருந்துகளில் ஏறும் போது காயல்பட்டினம் வழியாக செல்லாது என்று கூறுகின்றனர் பேருந்து நடத்துனர்கள். பல சண்டைகளை அவர்களிடம் போட்டு தான் பஸ் ஏற வேண்டியுள்ளது. காரணம் கேட்டால் நம்மூரில் கடுமயாக டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் நம் ஊர் வழியாக வருவதற்கே எரிச்சல் படுகின்றனர்.
எதிர்காலத்தில் நம் ஊருக்கு அனைத்து பேருந்துகளும் வரவேண்டுமானால் நாம் கண்டிப்பாக ஒருவழிப்பபாதையை அமுல்படுத்தியே ஆக வேண்டும். இல்லையெனில் நம் ஊருக்குள் பேருந்துக்ளை பார்ப்பதே அரிதாகிவிடும். இதில் நகராட்சி தலைவி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம் பள்ளியில் தேவராஜ் சார் மற்றும் புஹாரி சார் இருவரிடமும் கல்வி கற்று இன்று ஆசிரியர் & அலுவலகத்தில் பணிபுரிபவர்கள்.......... posted byM.H.Abdul Gaffoor (kayalpatnam)[30 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12587
எல்.கே.மேனிலைப்பள்ளியில் ... posted byM.H.Abdul Gaffoor (kayalpatnam)[29 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12481
அஸ்ஸலாமு அலைக்கும். இரண்டு வருடங்கள் தேவராஜ் சாரிடம் படித்து, நான்கு வருடங்கள் சாருடன் ஒன்றாக ஆசிரியராக பணிபுரிந்தது என்றும் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு காலமாகும்.
தேவராஜ் சாரிடம் இருந்து பாடத்தை மட்டுமல்லாது நேரம் தவறாமை, தேர்வு அறையில் எவ்வாறு விழிப்புடன் இருப்பது உள்ளிட்ட எண்ணற்ற பாடங்களை கற்றோம்.
தேவராஜ் சாரின் வீட்டுக்கு சென்றதும் அங்கு எங்களை அவர்கள் உபசரித்ததும் என்றும் எங்கள் (ஆசிரியர்கள்) நினைவில் இருக்கும்.
தேவராஜ் சாரின் ஓய்வு காலம் அமைதியாகவும், அவர்களின் கல்வி சேவை என்றும் தொடர வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்.
ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு வழியனுப்பு விழாவில் கலந்துகொண்டு இன்றைய மாணவர்களின் நிலையை அழகாக எடுத்து கூறிய ஸாலிஹ் காக்காவிற்கும் மனமார்ந்த நன்றிகள்.
Re:பாடங்களை விரைவில் முடிக்க... posted byAbdul (kayalpatnam)[20 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8489
நண்பர் ஜுபைர் சொல்வது போல் இரண்டு சனிகிழமை,35 நிமிடங்கள் குடுதலாக வகுப்புக்கள் நடத்துவதால் ஆசிரியர்களுக்கு ஒன்றும் extra salary ஒன்றும் கிடைக்க போவதில்லை.இது ஆசிரியர்களுக்கு கொடுக்கும் ஒரு punishment தான்,தவிர வேறு ஒன்றுமில்லை.
Administrator:இனி வருங்காலங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிடும் பொருட்டு பெயரினை முழுமையாக சமர்பிக்கவும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross