Re:...அர்த்தமுள்ள ஆதங்கமே! posted byAhamed Mohideen (Chennai)[09 January 2014] IP: 124.*.*.* India | Comment Reference Number: 32331
பொது தளத்தில தவறான தகவலைத் தெரிவிக்கும்போது அதன் உண்மையை தெளிவு படுத்தவது அனைவரின் கடமை. எதையும் ஆதாரத்தோடு பேசுங்கோ.
நான் ஆதாரத்தோடுதான் பேசுகிறேன்!! .
"நாம் அறிந்த வரையில் தோண்டி சாலைப்போடவேண்டும் என்ற கோரிக்கைதான் இருந்தது" என்றும் உண்மையை தெளிவு படுத்தவது அனைவரின் கடமை என்றும் கூறும் நீங்கள் உங்களால் இந்த உண்மையை தெளிவுபடுத்த முடியுமா?
45 சென்டி மீட்டர் தோண்டனும்...
வீட்டுக்கு தண்ணீர் வந்துடும்...
தலைவிக்கு கோரிக்கை கொடுத்தோம்...
என்று மனதில் தோன்றுவதை எல்லாம் சொல்வதற்கு நான் கவிஞன் இல்லை.!!
உங்கள் போனின் அழைப்பை அவர்கள் எடுப்பவராயின், கடந்த வெள்ளி கிழமை உங்களுக்கு வந்த அலைபிணை எல்லாம் எடுத்தீர்களா அல்லது இல்லையா? எங்கள் தெருவில் களிமண்ணையும் பாரங்கல்லையும் ரோட்டில் போட்டார்களா அல்லது இல்லையா? என்று கேட்டு விட்டு உங்கள் கருத்தை கூறுங்கள்...
Moderator: பிற தளங்களை மேற்கோள் காட்டும் வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
Re:...அர்த்தமுள்ள ஆதங்கமே! posted byAhamed Mohideen (chennai)[08 January 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 32328
விவாதத்திற்கு நான் வரவில்லை. பல விசயங்களை நீங்கள் புரியாமல் பேசுகிறீர்கள்!!
நான் மழைகாலம் என்று சொன்னது கடந்த வருட மழைகாலம். தங்களின் விளக்கமோ .(???)
கூடங்குளத்திலும் போராட்டம் நடக்கிறது அதற்காக அரசு பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் செய்யவில்லையா?
தான் பதவி ஏற்ற சில வாரங்களில் முதல் முறையாக அவர் சென்ற பகுதி பெரிய நெசவு தெரு பகுதிதான் - என்றாலும் அதன் பின் தாங்கள் சொன்னது போல "பேருந்தில்" திருச்செந்தூரிலிருந்து காயல்பட்டினம் பயணம் செய்வார்கள். ஆனால் போன் போட்டால் எடுக்கமாட்டார்கள். நேரில் வந்து பார்க்கமாட்டார்கள்.
நீங்கள் அறிந்தவரை என்பதனை நிறுத்திவிட்டு உண்மையை பேசுங்கள். தயவு செய்து அடுத்தவர்களுக்காக வாதிடுவதை நிறுத்துங்கள்!
Re:...அர்த்தமுள்ள ஆதங்கமே! posted byAhamed Mohideen (chennai)[07 January 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 32319
அர்த்தமற்ற ஆதங்கம்! என்று உங்கள் கருத்துக்களை பதிவு செய்த சாலையாரே!!
மழை காலத்தில் தண்ணீர் தேங்குவது இயல்பே! ஆனால், சாலையின் உயரம் கூடுவதனால் வீட்டுக்குள் எளிதாக தண்ணீர் வந்து விடும் என்பது உங்களுக்கு தெரியாதா?
என்னோட ஆதங்கமே மனு வாங்கிய நேரத்தில் சரி என்று சொன்னவர்கள் இன்று அதற்கு மாறாக ஒப்பந்த புள்ளி கொடுத்தது எந்த விதத்தில் நியாயம்?
மழை காலங்களில் மழை தேங்கிய இடங்களை பார்வையிட சென்ற இவர்களுக்கு எங்கள் தெருவில் தண்ணீர் தேங்கி வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு சேரும் சகதியுமாக கிடந்தது இவர்களுக்கு தெரியாதா? எது தேவை ? எது அவசர தேவை என்பது கூட தெரியாதவர்களா இவர்கள் ?
களிமண்ணையும் பாரங்கல்லையும் ரோட்டில் வந்து போட்டவர்கள் தானே இவர்கள், நான் போனில் முறையிட்ட போது எனக்கு தெரியாது engineer அல்லது உங்கள் கவுன்சிலரிடம் கேளுங்கள் என்று நழுவிய இவர்களிடமா நியாயம் வாக்கு உறுதிகள் பற்றி கேட்பது?
தெரு மக்களை ஒரு வழிப்பாதையை ஏற்று கொள்ள பணிவாக விண்ணப்பித்தார்கள் என்பது உண்மை.
அந்த வேளையிலோ அல்லது அதற்கு பிறகோ, தெரு மக்களோ அல்லது அவர்களின் பிரதிநிதிகளோ, ஒரு வழிப்பாதையை ஏற்றுக்கொண்டாதாகக் கூறியிருந்தால், தலைவி கொடுத்த வாக்கை தவறிவிட்டார்கள் என்று நீங்கள் கூறுவதில் நியாயம் உள்ளது.
அப்படி என்றால் அவர்கள் சொல்லுவதற்கெல்லாம் தஞ்சாவூர் பொம்மை போல் தலையாட்டினாள் செய்வார்கள் அல்லது செய்யாமாட்டார்கள் ?
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும். அதற்காக நாங்கள் கூறும் காரணம் பொய்யாகாது.
அரசும் அதிகாரிகளும் மக்களுக்கு சேவை செய்வதற்கு அன்றி அவர்களின் அதிகாரத்தை வெளிபடுத்துவதற்கு இல்லை.
Re:...இது எந்த விதத்தில் நியாயம் ?? posted byAhamed Mohideen (Chennai)[07 January 2014] IP: 124.*.*.* India | Comment Reference Number: 32314
நமதூரின் உட்தெருகலான அப்பாபள்ளி, ஆசாத் தெருக்கெல்லாம் 45 CM தோண்டி ரோடு போடுவார்களாம்.!!! நகரின் முக்கியமான பெரிய நெசவு தெருக்கு 20 CM தான் தோண்டி ரோடு போடுவார்களாம்.!!! இது எந்த விதத்தில் நியாயம் ??
பழைய சாலையை ஒன்றரை அடி (45 செ.மீ.) ஆழத்தில் தோண்டி அகற்றிவிட்டு, புதிய சாலை அமைக்கவேண்டும் என்று, நகராட்சி ஆணையாளர், தலைவர், துணைத்தலைவர் ஆகியோரிடம் ஏற்கனவே கேட்டுக்கொண்டோம். இது சம்பந்தமாக கோரிக்கை மனுவையும் வழங்கினோம்.
மனு வாங்கிய நேரத்தில் சரி என்று சொன்னவர்கள் இன்று அதற்கு மாறாக ஒப்பந்த புள்ளி கொடுத்தது எந்த விதத்தில் நியாயம்?
இது இவர்களுக்கு புதிது அல்ல.. ஏற்கனவே 26.12.2011 அன்று அதாவது கடைசியாக எங்கள் தெருவிற்கு வந்த நகர்மன்ற தலைவி அவர்கள் பல வாக்கு உறுதிகளை கொடுத்தார்கள். இரண்டு வருடம் முடிந்தும் எதுவுமே செய்யவில்லை.
"மின் வினியோகக் கம்பிகளை தேவையான அளவுக்கு உயரப்படுத்தி, பாதுகாப்பான வகையில் அமைப்பதாக காயல்பட்டினம் மின்வாரிய துணைப் பொறியாளர் தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும், பள்ளி மாணவர்கள் பாதுகாப்பைப் பொருத்த வரை, பள்ளி துவங்கும் நேரம், இடைவேளை நேரம், முடியும் நேரங்களில்தான் இப்பிரச்சினை ஏற்படும் என்றும், அதனை சரிசெய்ய, பள்ளியின் என்.எஸ்.எஸ். மாணவர்களைக் கொண்டு தினமும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதாக எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும்,
இப்பகுதியைச் சார்ந்த குழந்தைகள் விளையாடுவதற்கு நகராட்சிக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்து பேசி, தனியொரு பூங்கா அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை பாதுகாப்பான வகையில் செய்து தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா மேலும் தெரிவித்தார்.
மழை காலங்களில் நாங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு மழை நீர் தேங்கி நின்றபோது இவர்கள் வந்து பார்த்தால் தானே நாங்கள் பட்ட கஷ்டம் இவர்களுக்கு தெரியும். இதை பற்றி பேச (ஆணையாளர், தலைவர், துணைத்தலைவர்) தொடர்பு கொண்டால் நம் அழைப்புக்கு பதில் இல்லை...
ஆனால், கூலக்கடை பஜார் மழைநீர் வடிகால் பிரச்சினை! என்றால் நகர்மன்றத் தலைவர், அதிகாரிகள் நேரில் ஆய்வு!! உடனே செய்வார்கள்.
Re:... posted byAhamed Mohideen (Chennai)[05 July 2013] IP: 124.*.*.* India | Comment Reference Number: 28407
அவர்களே ( பெண்கள்) முகத்தை மூடி கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும் அவர்களை புகைப்படம் எடுத்து, இங்கு வெளியிடவும் செய்துள்ள புகைப்படத்தை நீக்குவது நன்று..
Re:.கவுன்சிலர்களே! posted byAhamed Mohideen (Chennai)[18 December 2012] IP: 124.*.*.* India | Comment Reference Number: 24572
கவுன்சிலர்களே!, உங்களை விட பல மடங்கு வாக்குகள் அதிகமாக வாங்கி தான் அவர்கள் தலைவர்களாக வந்து இருக்கிறார்கள். உங்களை விட அவர்கலுக்கு பவர் கொஞ்சம் அதிகம்தான். அதற்காக வேண்டி இதற்கெல்லாம் இப்படி செய்யல்லாமா ?
இதே ஒற்றுமையை ஊர் நலனுக்காக நல்ல விசயங்களில் நீங்கள் ஒன்று இணைந்து செயல்பட்டால் மக்களுக்கு உதவியாக இருக்கும்..
செய்தி: 2ஆவது பைப்லைன் திட்டம் குறித்து விவாதிக்க காயல்பட்டினம் நகர்மன்றத்தில் அவசர கூட்டம்! காரசாரமான வாக்குவாதங்களுக்கிடையில் தீர்மானம் நிறைவேற்றம்!! வீடியோ காட்சிகள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... சற்று ஆறுதலே.. posted byAhamed Mohideen (Chennai)[18 December 2012] IP: 124.*.*.* India | Comment Reference Number: 24571
கேமரா மேனை வெளியே அனுப்ப முடியாத கவுன்சிலர், அந்த கோபத்தை அங்கு இருப்பவர்களிடம் தானே காண்பிப்பார்.
வீடியோ தேவை இல்லை என்று கூறிய கவுன்சிலர் மொபைலில் வீடியோ எடுக்கிறார்!!!!
இன்று மேசை தட்டி கைநீட்டி பேசுகின்ற கவுன்சிலர், அன்று ?????
கவுன்சிலரை சமாதானம்படுத்தி கூட்டத்தை தொடர உதவி செய்ய வேண்டிய கவுன்சிலர் பேக்கை தூக்கிட்டு தன் சகாக்களையும் கூடிகிட்டு வெளியே போவதும் மட்டுமில்லாமல் இருக்கிற கேமரா மேனையும் அனுப்பி வைப்பது சரிதானா ??
யார் எப்படி போன எனக்கு என்னா நான் போன் பேசிகிட்டே தான் இருப்பேன் என்று போன் பேசும் அதிகாரி
இதையெல்லாம் விட ஒரு கவுன்சிலர் மட்டும் ஊர், நாட்டு நலனுக்காக ஆதங்கம் பட்டு குரல் கொடுப்பது சற்று ஆறுதலே..
ஸாலிஹ் எதுக்கும் அடுத்தமுறை கொஞ்சம் பாதுகாப்பாக போங்கள்.
செய்தி: கடற்கரைக்கு வருவோர் கையில் பை கொண்டு வாருங்கள்! நகராட்சியின் சார்பில் பிரசுரம்! பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் நேரில் வினியோகித்தார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கடற்கரைக்கு வருவோர் கையில... posted byAhamed Mohideen (Chennai)[04 June 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 19154
இதெல்லாம் சரி .
குழந்தைகள் அமரும் இடத்தில பெரியவர்கள் விளையாடுவதையும் சில சமயம் அருகாமை ஊர்களில் உள்ளவர்கள் நமதூர் பண்பாட்டுக்கு மாறாக வளம் வருவதையும் கடக்கரை பயனாளிகள் சங்கம் கண்டு கொள்ளவில்லையா ?
எது முக்கியம் ?
Re:நடைமுறைக்கு வந்தது ஒருவழி... posted byAhamed Mohideen (Chennai)[03 February 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 16475
பேரூந்துகள் நெசவு தெரு வழியாக ஒரு மாதத்திற்கு மேல் சென்று கொண்டு இருந்தது என்று ஊரே சேர்ந்து "பொய்" சொல்லி அதனையே ஈமான் கொண்டு கலேக்டர் தம் அறிக்கையில் அதனையே கூறி ஒரு வழிபாதைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது இவர்களுக்கு கிடைத்த (இவ்வுலகில் தற்காலிக) வெற்றியாக இருக்கலாம். ஆனால், ஒரு பகுதியினருக்கு எதிராக பொய்யான சாட்சி கூறியதற்காக இவ்வர்கள் இன்ஷா அல்லாஹ் பின்னர் பதில் கூற வேண்டியது இருக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்.
நேற்று (02.02.2012) இரவில், "9 30" மணிக்கு மேல் பெரிய நெசவுத் தெருவில் ஆங்காங்கே கட்டிடப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த செங்கல், மணல் உள்ளிட்ட பொருட்களை விரைந்து அப்புறப்படுத்துமாறு தெரிவித்தனர் என்று பதிவு செய்யுங்கள். ஏன் என்றால் பகலில் இவ்வர்களுக்கு நேரமே இல்லை பாருங்கள் ??? இவர்களின் இந்த போக்கு கண்டனத்துகூரியது மட்டும் இன்றி வன்மையாக கண்டிக்கத்தக்க கூடியதும் ஆகும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross