செய்தி: காயல்பட்டினம் வழி கும்பகோணம் மண்டலப் பேருந்துகளை 15 நாட்கள் கண்காணித்து, போக்குவரத்துத் துறைச் செயலருக்கு, நிர்வாக இயக்குநர் அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...சந்தேகத்திற்கிடமளிக்கும் நேரப்பதிவட்டவண posted byஜெம் தீபி (காயல்பட்டினம்)[31 December 2016] IP: 59.*.*.* India | Comment Reference Number: 45041
போக்குவரத்துத்துறைச் செயலாளருக்கு, நிர்வாக இயக்குநரால் அனுப்பட்டுள்ள கடிதத்துடன் இணைத்துள்ள நேரப்பதிவு அட்டவணையில் 15 நாட்களிலும் மேற்காண் மண்டல பேருந்துகளில் பெருவாரியானவை நமதூரை ஒரே நேரத்தில் கடந்து சென்றதாகப் பதியப்படுள்ளது. இது எவ்வாறு சாத்தியமாகும் ? இதன் உண்மைத்தன்மை அறியவேண்டுமானால் நடப்பது என்ன? குழுவினர் கண்காணித்து அட்டவணை தயார் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்தி: ரமழான் 1437: ரியாத் கா.ந.மன்றம் சார்பில் 178 ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி! பெருநாளன்று நாட்டுக்கோழி வழங்கவும் ஏற்பாடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வசந்த மலர்களைத் தூவி, வாஞ்சை மீதூர வாழ்த்துகின்றேன் posted by“ஜெம்” தீபி (Kayalpatnam)[09 June 2016] IP: 61.*.*.* India | Comment Reference Number: 44026
அவர்களின் இருள்தோய்ந்த முகங்களை இன்முகமாக்கி…
இந்த ரமலான் உணவுப் பொருட்கள் வழங்கியுதவிடும் மேன்மையான திட்டத்தை நிறைவேற்றியுள்ள “ரியாத் காயல் நல மன்ற”த்தின் அங்கத்தினர்கள், அபிமானிகள் மற்றும் இதற்கான முயற்சிகளில், பணிகளில் தன்னலம் கருதாது.. கண் துஞ்சாது… ஈடுபட்ட அனைவருக்கும் என் இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜஸாக்குமுல்லாஹு கைரா!
எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ்வின் பெருங்கருணையும், எம்பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ஷபாஅத் என்னும் திருப் பொருத்தமும் உங்கள் அனைவருக்கும் நிறைவாய்க் கிடைத்திட மனமுவந்து பிரார்த்திக்கிறேன்.
எவ்வளவு எவ்வளவு நலத் திட்டங்கள் ….
எத்தனை எத்தனை உதவிகள்…
தேவையுடையோரைக் கண்டறிந்து…
அவர்தம் தேவையறிந்து…
அதற்கெனத் திட்டமிட்டு…
அதைத் திறம்பட வடிவமைத்து…
சிறப்பான செயல் வடிவம் கொடுத்து…
குறித்த காலத்தில் அவற்றை நிறைவேற்றி…
பயனாளிகளின் உள்ளம் குளிர்விப்பதில்…
நெஞ்சம் நிறைந்து மகிழும்…
கடல் கடந்து வாழும்…. என்
அன்புச் சொந்தங்களே! பந்தங்களே! நண்பர்களே!
உங்கள் அனைவர் மீதும்…
இறையருள் வளமோங்கும்
வான்மழையாய் பொழியுமாக!
உங்கள் அனைவரையும் வசந்த மலர்களைத் தூவி,
வாஞ்சை மீதூர வாழ்த்துகின்றேன்.
உவகை மேலோங்கப் போற்றுகின்றேன்.
உங்கள் அனைவருக்கும் மகோன்னதம் பொருந்திய ரமழானின் பொருட்டால்…
நீடித்த ஆயுளும், நிறைந்த செல்வமும், நிம்மதியான வாழ்க்கையும் அமையப் பிரார்த்திக்கிறேன்.
என்றும் உங்கள் உதவிகளில் நெஞ்சம் நெகிழும்…
“ஜெம்” தீபி
செய்தி: ஸீ-கஸ்டம்ஸ் சாலைக்கு ரூ.46 லட்சம் செலவில், புதிய பேவர் ப்ளாக் சாலை! இன்று நடைபெற்ற ஒற்றைப் பொருள் கூட்டத்தில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நன்றியும் வேண்டுகோளும் வாழ்த்துக்களும்! posted byஜெம் தீபி (Kayalpatnam)[12 September 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 41844
நகர் மன்ற தலைவருக்கும் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மிக்க நன்றி.
இதே ஒற்றுமையோடு எஞ்சியுள்ள காலங்களில் விடுபட்டுள்ள திட்டங்களை விரைந்து நிறைவேற்ற என் அன்பான வேண்டுகோள்! அவைகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
சகோதரர் ‘காக்கும் கரங்கள்’ M.A.K.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சொன்னது போல, அதிகமான போக்குவரத்துள்ள இந்தச் சாலை முழுவதும் ஆழமாகத் தோண்டி அதன்பிறகு தரமான தார்சாலை அமைக்க வேண்டும்.
அந்தச் சாலை அமைக்கும்போது கீழ்க் கண்ட விஷயங்களை முக்கியமாக கவனித்து செயல் பட வேண்டும்.
1) மழைக் காலங்களில் இந்தச் சாலையில் ஏற்படும் நீர்ப் பெருக்கம் சரியான முறையில் வடிந்து செல்லத் தோதுவாக, அல்ஜாமிஉல் அஸ்கர் முனையிலிருந்து கடற்கரை வரை, சாலையின் இரு பக்கவாட்டிலும் ஓடை (gutter line) அமைக்க வேண்டும். அதன் இறுதிப்பகுதியை கடற்கரையில் ஒரு பெரிய செயற்கை குளமோ (pool) / பெரிய தொட்டியோ (reservoir) அமைத்து மழை நீரை சேமிக்க வேண்டும்.
கடற்கரை நிலப் பகுதிகளில் நிறைய மரங்களை நட்டி அதற்கு நீர் பாய்ச்ச அந்தத் தண்ணீர் உபயோகமாக இருக்கும், அல்லது செயற்கை நீரூற்றுக்களை வடிவமைத்துக் கட்டினால், சுற்றுலா வருவோருக்கு இன்பகரமாக இருக்கும். நகராட்சிக்கு வருமானம் கிடைக்கும் இது ஓர் பசுமைப் புரட்சி என்பதை நினைவிற்கொண்டு செயல்பட்டால் நல்லது.
2) சாலையின் நடுப் பகுதி லேசான மேடாகவும், தண்ணீர் தேங்காமல் வழிந்து ஓடும்படி கரைப்பகுதி தாழ்வாகவும் அமைக்க வேண்டும்.
3) K.T.M.தெரு, K.M.K.தெரு, அலியார் தெரு, ஆசாத் தெரு, பரிமார் தெரு, சித்தன் தெரு, அப்பா பள்ளித் தெரு, தீவுத் தெரு மேல் பகுதி, மரைக்கார் பள்ளித் தெரு, தீவுத் தெரு கீழ் பகுதி, சொளுக்கார் தெரு, முத்துவாப்பா தைக்காத் தெரு, கொச்சியார் தெரு, தேங்காய் பண்டக சாலை ஆகிய தெருக்களின் முனையில் சந்திப்பு தொட்டி (junction pit) கட்டி அதை ஓடையோடு இணைத்து விடவேண்டும்,
அந்தத் தெருக்களிருந்து பெருக்கெடுத்துவரும் மழை நீர் எளிதில் வடிந்து, சந்திப்புத் தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு, ஓடையின்வழியே எவ்வித இடையூறுமின்றி கடற்கரைக்குச் சென்று விடும்படி வடிவமைக்க வேண்டும்.
4) அந்தச் சாலையின் இரு பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புக்களை கண்டிப்பாக அகற்ற வேண்டும்.
5) சந்திப்புச் சாலைகள் இணையும் இடங்களில் வேகத் தடை அமைத்து அதற்கு முறையான கருப்பு, வெள்ளை (zebra crossing) வண்ணம் தீட்ட வேண்டும்.
6) அந்தச் சாலை முழுவதும் சோலார் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.
7) அந்தச் சாலையின் இரு பகுதியிலும் இருக்கும் காலி இடங்களில் நிழல் தரும் மரங்களை நட வேண்டும். அவற்றைப் பராமரிக்கும் பொறுப்புக்களை தனியார் பெறு வணிக நிறுவனங்களிடமோ/ தன்னார்வத் தொண்டு அமைப்புக்களிடமோ வழங்கினால் சிறப்பாக இருக்கும். அதைச் சுற்றி வேலியமைத்து, அதில் அவர்களின் விளம்பரங்களை வைத்துக் கொள்ள அனுமதிக்கலாம்.
8) அந்தச் சாலை அமைந்த பிறகு, அதில் எவ்விதத்திலும் ஆக்கிரமிக்கவோ, பந்தல் போட / ஆர்ச் போட என்று குழி தோண்டவோ, வேறு எந்த ரூபத்திலும் அந்தச் சாலையை யாரும் சிதைக்கவோ அனுமதிக்கவே கூடாது. இவ்விஷயத்தில் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.
9) அந்தச் சாலைக்கு, நமது பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதி, சமீபத்தில் நம்மை விட்டும் மறைந்த மேதகு டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்களின் நாமத்தைச் சூட்ட, நகர் மன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும். உடனடியாக அதைச் செயல்படுத்த வேண்டும் என்பதும் என் தாழ்மையான கருத்தாகும்.
இது சம்பந்தமாக வேறு கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால் இக்கருத்தைத் தொடர்ந்து வரையுங்கள். நல்ல விஷயங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பது நம் எல்லோருடைய கடமையும் கூட.
Re:...ஒன்றுபடுவோம் ! ஒரே (பெரு)நாளில் ஒன்று கூடுவோம்!! posted byGEM Theebi (Kayalpatnam)[17 July 2015] IP: 61.*.*.* India | Comment Reference Number: 41368
பிறை கண்டு (ரமழான்) நோன்பு வைக்க வேண்டும். இது கடமை. ஆனால் பெருநாள் கொண்டாடுவது கடமை இல்லை. சுன்னத்துதான்.
பெருசாரார் (நம் ஊரில் 80%) கடமையான (ரமழான்) நோன்பினை அனுஷ்டித்துக் கொண்டிருக்கும்போது, (குறைந்தபட்சம்) ரமழானை சங்கைப்படுத்தும் நோக்கத்துடனாவது, இருசாரார் இன்று பெருநாள் கொண்டாடாமல் (ஈகோவை விட்டுவிட்டு, ஊரின் ஒற்றுமையைப் பேணி) எல்லோரும் ஒரே நாளில் ஒன்றிணைந்து பெருநாள் கொண்டாடலாமே.
அதனால் சகோதரத்துவம் மலரட்டுமே.
இது, ஜும்ஆஹ் பயானில் ஒரு மார்க்க அறிஞர் இன்று எடுத்தியம்பிய அறி(ற)வுரை.
மிகச் சாதாரணமான அதிலும் சந்தோஷ முகங்களோடு ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும் பெருநாளில்…
” நாங்க லேட்டா கொண்டாடினாலும், லேட்டஸ்ட்டா கொண்டாடுவமுள்ளே!” என்று அங்கலாய்த்துக்கொள்ளும் நெருக்கமான உறவுகள்.
இப்படியே சில ஆண்டுகளாகத் தொடரும் நிகழ்வுகள்.
இவை… வேதனையின் விளிம்புகள்.
பழகிப்போன சடங்குகள் – ஆனால்
நாமெல்லோரும் பாசப்(?) பறவைகள்.
“உனக்கு நான் ஆடை, எனக்கு நீ ஆடை” என்றோதிக் கரம்பிடித்த… கண் நிறைந்த(?) கணவன் இன்று பெருநாள் கொண்டாட, கல்புக்குள் நிறைந்த (?) மனைவியோ நாளைதான் பெருநாள் கொண்டாடுவோம் என்ற முடிவுடன் இன்று நோன்பு வைத்திருக்க…
நமக்குள்… ஒரே குடும்பக் கூட்டுக்குள்
ஏன் இத்தனை பிணக்குகள். – இதில்
எங்கிருந்து அரும்பும் சந்தோஷ மொட்டுக்கள்.
சகோதர நெஞ்சங்களே!
நோன்பு வைக்கும் நாளை முன்/பின் வைத்துக்கொள்ளுங்கள்.
ஆனால், பெருநாள் கொண்டாட… கடமையான நோன்பு வைத்திருப்பவர்களின் நோன்பை கண்ணியப்படுத்தும் முகமாக …
நம் இன பந்துக்களிடையே ஒருமித்த சந்தோசத்தை எல்லோரும் ஒரே நாளில் அனுபவித்து மகிழ… அல்லாஹ்வுக்காக… ஒரே ஒருநாள் விட்டுக்கொடுங்கள்.
பிரிவு பட்டு … பிளவு பட்டு … சில்லுத் தேங்காயாக சிதறி விடாமல்…
எல்லோரும் ஒரே நாளில் ஒன்றுபட்டுக் கொண்டாடுவோம்.
நம்மைப் படைத்துப் பரிபாலித்துக் காத்தருளும் மாபெரும் கருணையாளன் அல்லாஹ்வைப் போற்றுவோம். இவ்வுலகை உய்விக்க வந்த உத்தமத் திருத்தூதர் வழி என்றென்றும் … தொய்வின்றித் தொடருவோம்.
என் அன்புச் சொந்தங்கள்… பந்தங்கள்… நட்பு வட்டாரங்கள் …
மற்றும் இஸ்லாமியச் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்
என் நெஞ்சம் நிறைந்த நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
Re:...கடமையுணர்வுக்கு கனிவான பாராட்டுக்கள். posted byGEM Theebi (Kayalpatnam)[08 July 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 41259
மின் ஊழியர்களின் கடமையுணர்வோடு கூடிய அர்ப்பணிப்புத்தன்மையை பாராட்டியே ஆக வேண்டும். அதே நேரம் பொறுப்புணர்வோடு அவர்களுக்கு தோள் கொடுத்த நகரமன்ற அங்கத்தினர்கள் உள்ளிட்ட அனைத்து நெஞ்சங்களுக்கும், மின் ஊழியர்களுக்கும், எல்லாம் வல்ல இறைவன் நற்கூலியையும், நோயற்ற நல வாழ்வையும் அவர்களுக்கும். அவர்களை இ(றை)ப்பணிக்கு அர்ப்பணித்துள்ள அவர்தம் குடும்பத்தினருக்கும் தந்தருளப் பிரார்த்திக்கிறேன்.
மேலும், வரும் வெள்ளிக்கிழமை – 10.7.2015 அன்று மாதாந்திர மின் பராமரிப்புக்காக வழமையான மின் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வந்துள்ளது.
வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருப்பதைக் கருத்திற்கொண்டு, காயல் மற்றும் சுற்று வட்டார முஸ்லிம்கள் தங்களது நோன்பு கால செயல்பாடுகளை சிரமமின்றி தொடர உதவும் வகையில், தயவு கூர்ந்து இம்மாத இறுதி வாரத்திற்கு மின் தடையினை மாற்றி வைக்குமாறு கோரிக்கை வையுங்கள். விரைவான நடவடிக்கை நிச்சயம் பலன் தரும்.
Re:... வாழ்த்துக்கள். வரப்போவதை வரவேற்க வேண்டுதல் posted byGEM Theebi (Kayalpatnam)[13 February 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 39246
திருச்செந்தூர் - நெல்லை பயணியர் புதிய ரயில் சேவை துவக்கத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
காயல்பட்டினம் வழியாக பயணிக்கும் பேருந்துகள் அனைத்தும், அடைக்கலாபுரம் – ஆறுமுகநேரி வழியாக இன்று முதல் திருப்பிவிடப்படுகிறது. எனவே, காயல்பட்டினம் பொதுமக்கள் அனைவரும் ஆறுமுகநேரிக்கு நடந்து வந்தோ, ஆட்டோவில் வந்தோ அல்லது மாட்டு வண்டி, குதிரை வண்டி மூலமாக வந்தோ, தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மிக விரைவில் …
இந்த செய்தியும் அனைத்து நாழிதள்களிலும் வரும்.
இதையும் உங்கள் வலைத்தளச் செய்தியில் பிரசுரிக்க தயாராக இருங்கள்.
செய்தி: நகரில் தேங்கும் மழை நீர் வழிந்தோட நிரந்தரத் தீர்வு கோரி இ.யூ.முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், அனைத்துக் கட்சிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...கருத்துப் பதிந்தால் நாடு கடத்தப்படும் posted byGEM Theebi (Kayalpatnam)[26 November 2014] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38290
அன்பின் அட்மின் அவர்களே!
நான் கருத்துப் பதிவில்புதியவன் என்பதால் எனது சுய முகவரியை/விபரத்தைக் கேட்டு எனது மின்னஞ்சலுக்கு கடிதம் அனுப்பி இருந்தீர்கள். உடனே நானும் அனுப்பி வைத்தேன். அதை சரியாகப் பார்க்கவில்லையா?
நான் வசிப்பது இந்தியாவில்.
ஆனால், நான் ஜப்பானிலிருந்து கருத்துப் பதிந்தது போல் எனது முகவரி வருகிறதே. ஏன்?
கருத்துப் பதிந்தால் நாடு கடத்திவிடுவீர்களா? பயமாகத்தான் இருக்கிறது.
[Administrator: நீங்கள் உபயோகப்படுத்தும் INTERNET SERVICE PROVIDER வழங்கும் IP ADDRESS முன்னர் ஜப்பான் நாட்டிற்கு ஒதுக்கப்பட்டதாக இருக்கும். தற்போது MTS நிறுவனம் பயன்படுத்துகிறது]
செய்தி: நகரில் தேங்கும் மழை நீர் வழிந்தோட நிரந்தரத் தீர்வு கோரி இ.யூ.முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், அனைத்துக் கட்சிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வஞ்சிக்கப்பட்ட வாலிபனுக்கு ... posted byGEM Theebi (Kayalpatnam)[26 November 2014] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38287
எத்தனை பதில் தந்தாலும், உனக்கு - அதை
ஏற்க மனமிருக்காது என்பதுதான் சரியான கணக்கு.
ஒவ்வொரு பதிலிலிருந்தும் எடுப்பாய் ஒரு தொடுப்பு.
இதுதான் உனது தனிச் சிறப்பு!
போதுமப்பா உன் கருத்துக் கணிப்பு!
நல்லது ஏதாவது நடக்க விடு அப்பு!
எதற்கெடுத்தாலும் வைக்காதே ஆப்பு!
செய்தி: நகரில் தேங்கும் மழை நீர் வழிந்தோட நிரந்தரத் தீர்வு கோரி இ.யூ.முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், அனைத்துக் கட்சிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... ஆர்ப்பாட்டம் - வாழ்த்துக்கள் posted byGEM Theebi (Kayalpatnam)[26 November 2014] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38283
ஊரே நாரிக் கிடக்கிறது? இதில் என்ன உள் அர்த்தம் வேண்டிக்கிடக்கிறது?
உள்ளார்ந்த உண்மை நிலையை கணிப்பதில் காயல்பதி கண்ணியமிகு நிநிலை நெஞ்சங்கள் என்றைக்கும் கிஞ்சிற்றும் குறைந்தவர்கள் அல்ல! அது முற்றிலும் உண்மைதான்.
ஆனாலும்,
காலை 10:00 மணி வரை ஆர்ப்பாட்டம் நடக்குமா என்ற அளவுக்கு கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. அதையும் தாண்டி திரளாக, மக்கள் அலை கடலென திரண்டு வரவில்லைதான். ஆனாலும், சிறு துறும்பும் பல் குத்த உதவும் என்ற அடிப்படையிலாவது, தங்கள் உணர்வுகளைப் பதிவு செய்ய வந்தவர்களையும் அவர்களைக் கொண்டு பொறுப்போடு ஆர்ப்பாட்டம் நடத்திய அனைத்துக் கட்சி, ஜமாஅத், பொதுநல அமைப்புக்கள், இவர்களை ஒருங்கிணைத்த முஸ்லிம் லீக் ஆகியோர்களை மனதார, நெஞ்சாரப் பாராட்டுகிறேன். அவர்கள் பனி சிறக்க வாழ்த்துகிறேன்.
இந்தச் சி(சீ)றிய ஆர்ப்பாட்டம் நடை பெற்ற பிறகுதான் அரசு இயந்திரம் விழித்துக்கொண்டது. அமைச்சர் ஓடி வந்தார். கலெக்டர் பாய்ந்து வந்தார்.
அல்லாஹ் அனைத்தும் மட்டுமல்ல, எல்லாவற்றையுமே அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross