திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே புதிய பயணியர் ரயில் சேவை (வண்டி எண்: 56035 / 56036) இன்று மாலையில் துவக்கி வைக்கப்பட்டது. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, திருச்செந்தூர் டவுண் பஞ்சாயத்து தலைவர் ராஜநல்லா, தென்னக ரயில்வேயின் மதுரை மண்டல மேலாளர் ஏ.கே.ரஸ்தோகி ஆகியோர் முன்னிலை வகிக்க, மத்திய தொடர்வண்டித் துறை அமைச்சர் சுரேஷ் ப்ரபாகர் பிரபு, புதுடில்லியிலிருந்து 18.19 மணியளவில் காணொளி காட்சி (வீடியோ கான்ஃபரன்ஸிங்) மூலம் துவக்கி வைத்தார்.
துவக்க நாளான இன்று, இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் 6, சரக்குப் பெட்டி 2 ஆகியவற்றைக் கொண்டதாக இயக்கப்படவுள்ளது. வழமையான சேவை - பிப்ரவரி 10 அன்று முதல் துவங்கும். அப்போது 9 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டிகள் கொண்டு இயக்கப்பட்டது.
நாளை முதல் அன்றாடச் சேவையாக இயக்கப்படவுள்ள இவ்வண்டி (#56035) திருசெந்தூரில் இருந்து தினசரி 10:25 மணிக்கு புறப்பட்டு, திருநெல்வேலி ரயில் நிலையத்தை 12:15 மணிக்கு அடையும். [காயல்பட்டினம் - 10:35]
திருநெல்வேலியில் இருந்து 15:15 மணிக்கு புறப்பட்டு (#56036), திருச்செந்தூர் ரயில் நிலையத்தை 17:15 மணிக்கு அடையும். [காயல்பட்டினம் - 16:29]
இந்த தொடர்வண்டிச் சேவையின் புறப்பாடு, அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும் நேரம், சேரும் நேரம் வருமாறு:-
திருச்செந்தூர் - திருநெல்வேலி மார்க்கம் [#56035]
திருநெல்வேலி - திருச்செந்தூர் மார்க்கம் [#56036]
இது திருச்செந்தூர் - திருநெல்வேலி மார்க்கத்தில் இயக்கப்படும் 6ஆவது பயணியர் ரயில் சேவையாகும்.
ஏற்கனவே - திருச்செந்தூரிலிருந்து 07:05, 11:10 (பழனி வரை), 14:35 (தூத்துக்குடி வரை), 16:30, 17:55 ஆகிய நேரங்களில் பயணியர் ரயில்கள் - திருநெல்வேலிக்கு இயக்கப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து 07:20, 09:35, 11:15 (தூத்துக்குடி முதல்), 14:10 (பழனி முதல்), 18:40 ஆகிய நேரங்களில் பயணியர் ரயில்கள் - திருச்செந்தூருக்கு இயக்கப்படுகிறது.
இவை தவிர, சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் செந்தூர் விரைவு வண்டி, திருநெல்வேலியில் இருந்து (#16105) 06:15 மணிக்கு புறப்பட்டு, திருச்செந்தூர் ரயில் நிலையத்தை 08:25 மணிக்கு அடைகிறது (காயல்பட்டினம் - 07:29).
இதே வண்டி - திருசெந்தூரில் இருந்து (#16106) 18:50 மணிக்கு புறப்பட்டு (காயல்பட்டினம் - 19:00), திருநெல்வேலி ரயில் நிலையத்தை 20:15 மணிக்கு அடைகிறது. |