Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:57:18 PM
வெள்ளி | 12 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1716, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5812:2515:2818:3219:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:09Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்09:02
மறைவு18:27மறைவு22:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5805:2305:48
உச்சி
12:18
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15394
#KOTW15394
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 10, 2015
ஆம் ஆத்மி கட்சி - டில்லி தேர்தலில் அமோக வெற்றி! (இறுதி நிலவரம்)
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4225 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}டில்லி சட்டசபை தேர்தலில் அர்விந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, அமோக வெற்றி பெற்றுள்ளது.

பிப்ரவரி 7 அன்று நடந்த 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகளை தொடர்ந்து, இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இறுதி நிலவரப்படி, ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களையும், பாரதிய ஜனதா கட்சி 3 இடங்களையும் பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடமும் பெறவில்லை.இந்த வெற்றியினை தொடர்ந்து, அர்விந்த் கேஜரிவால், டில்லி முதல்வராக - பிப்ரவரி 14 அன்று பதவி ஏற்கவுள்ளார். கடந்த ஆண்டு, பிப்ரவரி 14 அன்று தான் - டிசம்பர் 2013 தேர்தலுக்கு பிறகு முதல்வரான கேஜரிவால், 49 நாட்கள் பதவியில் இருந்தப்பின் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 5:00 pm / 10.02.2015]

[Administrator: படம் இணைக்கப்பட்டது @ 8:55 pm / 10.02.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...டெல்லி மக்களுக்கு பாராட்டுக்கள்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [10 February 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39178

வாழ்க ஜனநாயகம் ....

பா ஜா கா விற்கு இந்த மரண அடி கொடுத்த தில்லி மக்களுக்கு எனது பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [10 February 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39179

அல்ஹம்து லில்லாஹ்.

கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விட முடிகின்றது. இந்த வெற்றியின் மூலம் வல்ல அல்லாஹ் நன்மையை தருவானாக.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வாழ்த்துக்கள்!..
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [10 February 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39180

மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற பேரறிஞர் அண்ணாவின் கனவு நினைவாகிகூடிய அறிகுறிகளின் அச்சாரமாக இந்த வெற்றியை எடுத்துக்கொள்ளலாமா?

எப்படி இருந்தாலும் மத்தியிலுள்ள ஆட்சி மாநிலத்திலும் இருக்கக்கூடாது. நம்முடைய சுய மரியாதையும் தனித் தன்மையும் காக்கப்படவேண்டுமெனில் அந்த மாநிலத்திலுள்ள கட்சிகளே அந்த மாநிலத்தை ஆட்சி செய்ய வேண்டும்!.

பி.ஜே.பி செல்வாக்கில்லாத காலத்திலிருந்தே சுமார் பதினைந்து வருடங்களாக வெற்றிபெற்ற தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளராகிய கிரண்பேடியை வெற்றிபெற பல வித்தைகள் காட்டிய மோடியின் அத்தனை மாயாஜாலங்களும் மங்கிபோகி,மக்கிப்போகி மண்ணை கவ்வக்கூடிய பெருத்த தோல்வியை அடைந்திருப்பதன் பாடம் ஒரு துரோகத்திற்கு கிடைத்த சம்மட்டி அடியாகும்!.

ஆம் ஆதிமி கட்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.அதிகாரத்திற்கு வரும் அனைவரும் சொல்லும் வார்தைகைகளைத்தான் தாங்களும் சொல்கிறீர்கள்.உங்கள்மேல் உள்ள நம்பிக்கையின் பலம் நீங்கள் நடுநிலமையாய் ஆளும்ஆட்சியை பொறுத்தது. அகங்காரமோ,ஆணவமோ சிறிதளவும் தலைக்காட்டினாலும் அன்றுமுதல் அழிவு காலம் தொடரும் என்பதையும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...உருவு கண்டு எள்ளாமை வேண்டும்..
posted by mackie noohuthambi (colombo) [10 February 2015]
IP: 103.*.*.* | Comment Reference Number: 39182

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து என்று வள்ளுவம் சொல்கிறது.

என்னால் தான் எல்லாம் நடக்கிறது. நான்தான் எல்லாம்.நான் இல்லாமல் எதுவுமே இயங்காது என்ற கர்வம் மமதை திமிர் எல்லாம் மக்கள் சக்திக்கு முன் காணாமல் போய் விடும் என்பதை இந்த அரசியல் மாற்றங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக திருமறையில் அல்லாஹ் சொல்வதுபோல் அவன் நாடியவர்களுக்கு ஆட்சி அதிகாரங்களை கொடுப்பான் அவன் நாடியவர்களிடமிருந்து அதை பிடுங்கி கொள்வான் அவன் நாடியவர்களை கண்ணியப் படுத்துவான் அவன் நாடியவர்களை கேவலப்படுதுவான் என்ற உண்மையை நாம் நிதர்சனமாக காண்கிறோம்.

காயல்பட்டினத்தில் நடந்த நகராட்சி தேர்தல் முதல் தமிழக சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் இலங்கையில் நடை பெற்ற ஜனாதிபதி தேர்தல் டில்லி சட்டமன்ற தேர்தல் எல்லாமே ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி SHOCK TREATMENT கொடுத்துள்ளது.

எல்லா ஜமாத்களும் அணி திரண்டு ஒருவரை ஆதரிக்க சாதாரண ஒரு பெண்மணி காயல்பட்டினம் நகரமன்ற தலைவியாக ஆனார்.

60 ஆண்டு காலங்கள் இந்திய திருநாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி - வெறும் 44 இடங்களுடன் எதிர்க் கட்சி அந்தஸ்தையும் இழந்து ஆட்சியை பறி கொடுத்தது. 37 இடங்களை கைப் பற்றி தனிப் பெரும் தலைவியாக உருவெடுத்த தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பிலிருந்து அப்புறப்படுத்தப் பட்டு சட்டமன்ற உறுப்பினர் பதிவியையும் இழந்தார்.

ஆளும் கட்சியாக இருந்து, நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் எதிர்க் கட்சியாக கூட இருக்க தகுதியில்லாமல் ஆகி விட்ட முன்னாள் முதல்வர் - இலங்கையில் இன்னும் 6 ஆண்டுகள் மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்து தனது சர்வாதிகாரத்தை நிலை நிறுத்த நினைத்தவர் திடீரென்று ஆட்சி இழந்து பதவி இழந்து இன்று மக்கள் மன்றத்தில் குற்றவாளியாக கை கட்டி தலை குனிந்து நிற்கும் அவல நிலை - அமித்ஷா என்ற king maker மோடியின் வலது கரம், துடைப்பத்தை ஏந்தி நிற்கும் maflar man இடம் மண்ணைக் கவ்வியது - ஒவ்வொன்றாக நினைத்துப் பார்க்கிறேன். அல்லாஹ்வை புகழ்கிறேன்.

அவன் ஒரு விஷயத்தை செய்ய நாடினால் அவன் சொல்வதெல்லாம், "ஆகி விடு" என்பது தான். அது உடனே ஆகி விடும். கேள்வி கணக்கு நாள் நட்சத்திரம் எதுவும் அவனுக்கு குறுக்கே நிற்காது. எல்லோரும் இதை உணர்ந்து பணிவோடு நடப்போம்.

கெஜ்ரிவாலுக்கும் இது பொருந்தும். வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [10 February 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39183

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ்.....இந்த தலைநகர் வெற்றி மூலம்......நம் நாட்டின் நிலை பாடு ஓரளவுக்கு மாறலாம் ......

இனியாவது '' பிஜேபி '' கட்சி கொஞ்சம் ....கவனமுடன் செயல் படுவது தான் நல்லது .....நம் மரியாதைக்குரிய பாரத பிரதமர் ....அவர்கள் நம் நாட்டின் அனைத்து மதத்தவர்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்க வேணும் ......இது தான் அனைத்து மக்களின் எண்ணம் ..&.. இன்ஷா அல்லாஹ்....இனி ஒருமையுடன் செயலாட்டுவார்கள் என்கிற நம்பிக்கை அனைத்து மதத்தவர்களுக்கும் உண்டு ...........

ஆம் ஆத்மி கட்சி இனி முழுமையான பலத்துடன் வெற்றி பெற்று இருப்பதால் ....நம் தலை நகர் மக்களுக்கு நல்லதை தைரியமுடன் செய்வார்கள் .....

தொடரட்டும் >>>> ஆம் ஆத்மி கட்சி <<<< சாதனைகள் .......

நம் நாட்டு மக்கள் + உலக மக்களும் சரி ... ஆம் ஆத்மி கட்சி...செயல் பாட்டை மிகவும் உன்னிப்பாகவே கவனிப்பார்கள் ........

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Fareed (Dubai) [10 February 2015]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39184

It is wonderful victory for AAP.

AAP should use this victory and make the good way for poor peoples life easier

AAP should expand their branches all over India


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by L.A.K.BUHARY (Hong Kong) [10 February 2015]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 39185

இதற்கு முன்பு வென்ற ( DEC 2013 )ஆட்சியில் ,தான் ராஜினாமா செய்ததை தவறு என்றெண்ணி மக்கள் மன்றத்தில் " நான் ஆட்சி பொறுப்பேற்றால் இனி ராஜினாமா செய்ய மாட்டேன் , நல்லாட்சி தர பாடுபடுவேன் என்று மக்கள் மத்தியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு, வாக்குறுதி தந்து , சுமார் 95% பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடி ஆட்சி அமைக்க இருக்கிறார் முதல்வர் திரு.அரவிந்த் கேஜ்ரிவால்..

நல்வாழ்த்துக்கள்..! எதிர்காலத்தில் எம் இந்தியத்திருநாட்டை ஆளும் பொறுப்பை இக்கட்சி ஏற்கும் என்ற தகுதிகளுடன் பொறுப்பான நல்லாட்சி தருவீர்கள் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் வரத்துவங்கியுள்ளது.

மேலும்,மதச்சார்பின்மை நிலைபாட்டில் நம்பிக்கை வைத்து, அனைத்து தரப்பினர்க்கும் ஏற்ற ஓர் நல்லாட்சி ஆட்சி தருவதிலும்,,, கேலி,வசைபாடுகளை தவிர்த்து, செய்த அல்லது செய்யவிருக்கும் சாதனைகளை சொல்லி வாக்குகள் கேட்டால் மட்டும் தான் மக்கள் ஆளும் பொறுப்பை ஒப்படைப்பார்கள் என்பதை இன்றைய தினம் மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள் என்பதை பொதுமக்களும்,ஆளும் அரசியல் கட்சிகளும் புரிந்திருப்பார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [11 February 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39187

தில்லி தேர்தல் முடிவுகள் – ஆம் ஆத்மி வெற்றிக்கு உங்களின் நல் வாழ்த்துக்களை வரவேற்கின்றேன்...!

டில்லியில் நடந்து முடிந்த புரட்சிகரமான தேர்தலில் சாதாரண மக்கள் வென்றதற்கு நாங்களும் டில்லி மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்காக அரும்பாடுபட்டு உழைத்த தன்னார்வலர்கள் அனைவருக்கும் காயல்பட்டினம் ஆம் ஆத்மி கட்சி கிளை நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

டில்லி மக்களின் அடிப்படை பிரச்சனைகளான தண்ணீர், வீடு, மின்சார கட்டணம், கல்வி மற்றும் ஊழலுக்கான தீர்வுகளை முன்வைத்து செய்த வலிமையான பிராச்சாரத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி இதுவாகும்.

ஆம் ஆத்மி கட்சி தொடங்கிய போது மாற்று அரசியலுக்கு இந்தியாவில் சாத்தியமே இல்லை என்றும்; அரசியல் ஒரு சாக்கடை என்றும்; இந்தியாவில் நெறிமுறைகளின்படி கட்சி நடத்தவே முடியாது என்றும் சிலர் கருதினர். நிதியில் வெளிப்படைத்தன்மை, மற்றும் குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களை நிராகரிப்பது போன்ற நெறிமுறைகளுடன் ஒரு கட்சி மாற்று அரசியலைக் கொண்டு வர முடியும் என்று தில்லி முடிவுகள் காட்டுகின்றன. ஊழல், கருப்பு பணம் மற்றும் குற்ற அரசியலின் முடிவுக்கான ஆரம்பம் தான் இந்த வெற்றியாகும்.

இது போன்று ஒரு மாற்றம் வர, தமிழகத்தில் இருந்து 200 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் டில்லி சென்று தமிழர்கள் வசிக்கும் இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டோம். இந்த வெற்றி, புரையோடிப் போயிருக்கும் லஞ்ச ஊழலில் இருந்து விடுதலைப் பெற துடிக்கும் பிற மாநிலங்களுக்கு ஒரு அறைகூவல்.

குறிப்பாக, தமிழகத்தில் தி.மு.க /அ.தி.மு.க என்று இரு கட்சிகளும் இணைந்து வேறு மாற்றுக்கே வழியில்லாமல் மக்கள் திணறுகின்றனர். ஒரு பக்கம் அரசே மக்களை குடிப்பழக்கத்தில் ஆழ்த்தும் ஒரு அவல நிலை மற்றும் பிறக்கும் பொழுதிருந்து சுடுகாடு வரை அனைத்து அரசு அலுவலகங்களிலும் கூத்தாடும் லஞ்சம் / ஊழல் மற்றொரு புறம் மோசமான தொழில் துறை மற்றும் விவசாய கொள்கைகளால் பெருகி வரும் வறுமை எனத் தமிழகத்தில் எளிய மக்கள் ஊழலாட்சியின் எல்லாப் பரிமாணங்களையும் அனுபவித்து வருகிறார்கள். இரு பெரும் கட்சிகளும் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளன. ஆட்சியில் இருக்கும் போதே சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார் முந்தைய முதலமைச்சர். மிக மோசமான நிதி முறைகேடுகள் மற்றும் பணபலம் தாண்டவாமாடும் தேர்தல்களே தமிழகத்தில் வழக்கமாக உள்ளன.

தமிழகத்தில் உள்ள மக்கள் பிரச்சனைகளை பெரிய அளவில் முன்னெடுக்க உள்ளோம். மின்சார வாரியம், டாஸ்மாக் போன்றவற்றில் நடைபெறும் ஊழல்களை வெளிக்கொணர்ந்து அரசியலில் பினாமிகளின் தாண்டவத்தையும் கூட்டு சதி முதலாளித்துவத்தையும் நிறுத்துவது, தரமான கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகள், கனிமவளக் கொள்ளை, ஆற்றுமணல் கொள்ளை போன்றவற்றில் முறைகேடுகளை தடுப்பது மட்டுமின்றி, குற்றம் செய்த அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளைக் கடுமையாகத் தண்டிக்கச் செய்வது, தமிழகத்தில் சுயராச்சியத்திற்குப் பாதை வகுக்கும்படி, நிலக் கையகப்படுத்தல் அரச கட்டளையை எதிர்ப்பது, குடிசைப்பகுதி மக்களின் நலன் போன்றவற்றை முன்னெடுப்பது, விவசாயிகளின் மிகப்பெரிய பிரச்சனைகளுக்கான தண்ணீர் மற்றும் விலை நிர்ணயம் குறித்து போராடுவது, ஊழல் எதிர்ப்பு சட்டமான லோகயுக்தாவை அமல்படுத்துவது, தேர்தல் நிதியில் வெளிப்படைத் தன்மை கொண்டு வருவது என பல மக்கள் பிரச்சனைகளை முன்னெடுக்கும் ஆம் ஆத்மி கட்சி. இவை மூலமாகத் தமிழகத்தில் உண்மையான மக்களாட்சி மலர ஆம் ஆத்மி கட்சி தன போராட்டத்தை இன்றே தொடங்கும்.

தமிழ்நாட்டை கொள்ளையர்களிடம் இருந்து மீட்க நடக்கும் இந்த இரண்டாம் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற விரும்பும் அனைத்து நல்லுள்ளங்களையும் அழைக்கிறோம். கட்சியில் இணைய விரும்பும் அனைவரும் 9025644644 எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். தி. நகரில் உள்ள எங்கள் கட்சி அலுவலகத்திலும் வந்து இணையலாம்.

தோழமையுடன் - ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு / காயல்பட்டினம் ஆம் ஆத்மி கட்சி கிளை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved