“இந்தியாவில் வட்டியில்லா வங்கி அமைவதை நோக்கி..” என்ற இலக்குடன் பயணித்து வரும் ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கம் காயல்பட்டினம் கிளை அமைப்பின் சார்பில், மகளிருக்கான ஜன்சேவா விளக்கக் கூட்டம், இம்மாதம் 07ஆம் நாள் சனிக்கிழமையன்று 19.00 மணி முதல், 21.30 மணி வரை, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ஹாஃபிழ் ஸதக்கத்துல்லாஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஜன்சேவா காயல்பட்டினம் கிளை தலைவர் வாவு எஸ்.காதிர் ஸாஹிப் வரவேற்புரையாற்றினார்.
காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.வஹீதா - துவக்கவுரையாற்றினார். ஜன்சேவா செயல்திட்டங்கள் குறித்து, அதன் காயல்பட்டினம் கிளை பொருளாளர் ‘மாஷாஅல்லாஹ்’ தாவூத் விளக்கிப் பேசினார்.
‘ஜன்சேவா கடந்து வந்த பாதை’ எனுமு் தலைப்பில், சென்னை மற்றும் காயல்பட்டினம் ஜன்சேவா கிளைகளின் நிர்வாகிகளுள் ஒருவரான எஸ்.இப்னு ஸஊத் உரையாற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில், கூட்டத்தில் பங்கேற்றோர் எழுப்பிய சந்தேகங்களுக்கு ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கத்தின் தொழிலூக்க திட்ட ஆலோசகர் அப்துர்ரஹீம் விளக்கமளித்துப் பேசினார்.
நிகழ்ச்சியின் நிறைவில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல - பங்கேற்றோரில் பரிசுக்குரியோர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்பட்டனர்.
ஜன்சேவா காயல்பட்டினம் கிளை துணைத்தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஜன்சேவா காயல்பட்டினம் கிளை அங்கத்தினருள் ஒருவரான எல்.டீ.ஸித்தீக் நெறிப்படுத்தினார். நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான மகளிர் பங்கேற்றனர்.
ஜன்சேவா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |