SDPIகாயல்பட்டினம் நகரில் மழையால் பழுதடைந்துள்ள சாலைகளைப் புதுப்பித்து அமைத்தல், தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்தல், பேருந்து நிலையத்திற்குப் பின்புறமுள்ள பப்பரப்பள்ளி மைதானத்தில் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுவதால், அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்.டி.பீ.ஐ. கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் கிளைத் தலைவர் ஷேக் அப்துல் காதிர், செயலாளர் அப்துர்ரஹ்மான் தலைமையிலான அக்கட்சியினர் இணைந்து, ஆணையரிடம் மனுவை அளித்துள்ளனர்.
தகவல் & படம்:
M.ஜஹாங்கீர்
எஸ்.டி.பீ.ஐ. தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |