காயல்பட்டினம் துளிர் அறக்கட்டளையின் - அறிவுத் துளிர் குடும்ப நண்பர்கள் வட்டம் சார்பில், மன நலன் குறித்த கேள்வி-பதில் நிகழ்ச்சி, துளிர் பள்ளி காணொளிக் கூடத்தில் இம்மாதம் 15ஆம் நாளன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
மனநலம் பற்றி மக்களிடம் எளிதாக எடுத்து சொல்லவும், மனநலம் பற்றி பொதுவாக மக்கள் மனதில் எழும் கேள்விகளுக்கு பதில் சொல்லவும், மனநோய் என்பது பேய், பிசாசு, பில்லி, சூனியத்தால் ஏற்படக்கூடியதல்ல என்பதை தெளிவுபடுத்தவும், பொதுவாக மனிதர்களுக்கு வரும் நோய்களில் ஒன்றுதான் இது என்பதை புரிந்திடவும், மன நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், அவற்றின் வகைகள், அவற்றை எவ்வாறு கண்டறிவது, அதற்கான மருத்துவம் என்ன? இது போன்ற மன நலம் சம்பந்தமான பல்வேறு விசயங்களை மருத்துவ கண்ணோட்டத்தில் அறிந்து கொள்ள மனநல மருத்துவரின் கேள்வி, பதில் நிகழ்ச்சி துளிரில் வரும் 15.02.2015 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தென்னகத்தின் பிரபல மன நல மருத்துவர் பாலகுருசாமியின் குமாரர், தன்வந்தரி மருத்துவமனையின் இயக்குனர், மன நல மருத்துவர் பா. ஐய்யப்பன் கலந்து கொண்டு பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார். இதில் ஆர்வமுள்ள பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு துளிர் சார்பில் கேட்டுகொள்ளபட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துளிர் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |