பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் 03ஆம் நாள் துவங்குகிறது. இத்தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விடைத்தாள்களின் முதல் தாளாக, மாணவர்களின் பதிவு எண் - நிழற்படத்துடன் கூடிய மேல் தாள் (Top Sheet) உடன் மொத்த விடைத்தாள்களும் ஒன்றாகத் தைக்கப்பட்டிருக்க வேண்டும் என தமிழக அரசு புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.
இதன்படி, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவர்கள் தேர்வெழுதவுள்ள எல்.கே. மேனிலைப்பள்ளி தேர்வு மையத்தில், அப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் முன்னிலையில், பள்ளி ஆசிரியர்களின் துணையுடன் விடைத்தாள்கள் தைக்கும் பணி நடைபெற்றது.
எல்.கே.மேனிலைப்பள்ளி சார்பில், கடந்தாண்டு ப்ளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள்கள் தைக்கும் பணி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |