DCW தொழிற்சாலை - 1925ம் ஆண்டு, தற்போதைய குஜராத் மாநிலத்தின் தாரங்கதாரா பகுதியில் துவக்கப்பட்டது. 1958ம் ஆண்டு, அந்நிறுவனம் -
தமிழகத்தில், காயல்பட்டினத்தில், காஸ்டிக் சோடா என்ற பொருளை உற்பத்தி செய்ய வேண்டும் எனக்கூறி தனது தொழிற்சாலையை
நிறுவியது.
காயல்பட்டினம் பகுதியில் தொழிற்சாலையினை அமைத்திட - தமிழக அரசு (அப்போது மெட்ராஸ் அரசு), அப்பகுதியில் உள்ள நிலங்களை - LAND
ACQUISITION ACT, 1894 சட்டத்தின் கீழ் ஆர்ஜிதம் செய்து, அந்நிறுவனத்திற்கு வழங்கியது.
இவ்வாறு ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்கள் -
காயல்பட்டினம் (வட பாகம்) - ஏக்கர் 1064
புன்னக்காயல் - ஏக்கர் 175 சென்ட் 66
சேர்ந்தமங்கலம் - ஏக்கர் 142 சென்ட் 89
மொத்தம் - ஏக்கர் 1382 சென்ட் 55
இதற்காக, அந்நிறுவனம் தமிழக அரசுக்கு, 5,56,622.19 ரூபாய் (5 லட்சத்து, 56 ஆயிரத்து, 622 ரூபாய், 19 பைசா) வழங்கியது.
நவம்பர் 19, 1958 இல் பதிவு செய்யப்பட்ட ஆவணம் (14 பக்கங்கள்)
இந்நிலங்களை தவிர, DCW நிறுவனமிடம், அரசினால் குத்தகைக்கு வழங்கப்பட்ட 793 ஏக்கர் நிலமும் தற்போது உண்டு. அந்நிலங்களுக்கான குத்தகை,
1993ம் ஆண்டே முடிவுற்றுவிட்டது என்பது தனிக்கதையாகும்.
2013ம் ஆண்டு டிசம்பர் 19 அன்று - DCW நிறுவனத்தின் EXTRA-ORDINARY GENERAL MEETING கூட்டம், தாரங்கதாராவில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் ஒன்று, DCW நிறுவனத்திற்கு தேவையான நிதியினை, 3000 கோடி ரூபாய் வரை திரட்டிட, நிர்வாகத்திற்கு
அனுமதி வழங்குவதாகும்.
அதனை தொடர்ந்து, DCW நிறுவனம் - 2014-15 நிதியாண்டில், இதுவரை குறைந்தது 395 கோடி ரூபாய் - வங்கிகள் மூலம் கடனாக திரட்டியுள்ளது.
இந்த கடனை பெற, 3 வெவ்வேறு தருணங்களில் நடந்த பத்திர பதிவுகள் மூலம், DCW நிறுவனம் - காயல்பட்டினம், புன்னக்காயல்,
சேர்ந்தமங்கலம், ஆத்தூர், கொடைக்கானல் ஆகிய இடங்களில் உள்ள நிலங்களை, வங்கியில் அடமானம் வைத்துள்ளது.
காயல்பட்டினம் வட பாகம் - ஏக்கர் 1268 சென்ட் 27
புன்னக்காயல் - ஏக்கர் 212 சென்ட் 66
சேர்ந்தமங்கலம் - ஏக்கர் 142 சென்ட் 89
ஆத்தூர் - ஏக்கர் 21 சென்ட் 96
கொடைக்கானல் - ஏக்கர் 18 சென்ட் 2
மொத்தம் - ஏக்கர் 1663 சென்ட் 80
இப்பத்திரவு பதிவுகள் - காயல்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்துள்ளன.
(1) பத்திரம் எண் - 1204/2014
மே 24, 2014 அன்று நடந்த அடமானத்திற்கான (MORTGAGE) பத்திரப்பதிவு மூலம் - DCW நிறுவனம், 125 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது.
கடன் வழங்கிய வங்கிகள் - PUNJAB NATIONAL BANK உட்பட பல வங்கிகள்
(2) பத்திரம் எண் - 2744/2014
டிசம்பர் 5, 2014 அன்று நடந்த அடமானத்திற்கான (MORTGAGE) பத்திரப்பதிவு மூலம் - DCW நிறுவனம், 230 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது.
கடன் வழங்கிய வங்கிகள் - ICICI BANK LTD - AHMEDABAD BRANCH, STATE BANK OF TRAVANCORE - MUMBAI BRANCH, DCB BANK
LTD - AHMEDABAD BRANCH, EXPORT IMPORT BANK OF INDIA - MUMBAI BRANCH
(3) பத்திரம் எண் - 222/2015
பிப்ரவரி 2, 2015 அன்று நடந்த அடமானத்திற்கான (MORTGAGE) பத்திரப்பதிவு மூலம் - DCW நிறுவனம், 40 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது.
கடன் வழங்கிய வங்கி - STATE BANK OF INDIA - MUMBAI BRANCH
|