Re:... posted byM. S. Shah Jahan (Colombo)[02 June 2018] IP: 123.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46182
‘மலாக்கா ஒரு பாரம்பரியமிக்க நகரம். சிறிது காலம் ஜப்பானியர்களும், பின்னர் போர்த்துகீசியர்களும், பிரிட்டிஷ்காரர்களும் ஆட்சி செய்த பழமை வாய்ந்த நகரம்’ என்ற குறிப்பு தவறு.
1505 ஆண்டில் கள்ளிக்கோட்டையில் வாஸ்கொடகாமா வந்திறங்கியதோடு நாடு பிடிக்கும் ஐரோப்பியர் வரலாறு இப்பகுதியில் துவங்குகிறது.
மலாய் தீபகற்பத்தில் முதலாவதாக போர்த்துக்கேயர், அப்புறம் டச்சுக்காரர், அடுத்து பிரிட்டிஸ்காரர் என்று ஆட்சி செய்தனர்.
இரண்டாவது உலக யுத்தத்திற்கு முன்பு சீனாவில் புகுந்த ஜப்பானியர் மலேசியா சிங்கப்பூரிலும் பிரிட்டிஷ் காலத்தில் நுழைந்தனர். சிறிது காலம் ஆட்சி செய்தனர். யுத்தத்தில் தோற்றதும் பிரிட்டிஷாரிடம் சரணடைந்து வெளியேறினர். மலாக்காவில் டச்சு பாரம்பரியம் அதிகம்.
Re:... posted byM. S. Shah Jahan (Colombo)[04 May 2018] IP: 123.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46162
கல்விக்கண் திறப்பவர்கள் ஒரு நாளும் கண் மூடுவதில்லை என்பார்கள். உங்கள் பணி அளப்பரியது. வாழ்த்துக்கள்.
“நம் ஊர் மற்றும் Hong kong Kowloon Masjid தலைமை இமாம்”
இதன் அர்த்தம் அவர் நம் ஊரிலும் Hong kong Kowloon Masjid லும் தலைமை இமாம் என்று பொருள்படும். நம் ஊரைச்சேர்ந்த Hong kong Kowloon Masjid தலைமை இமாம்” என்பதே சரி.
Moderator: செய்தி திருத்தப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!
Re:... posted byM. S. Shah Jahan (Colombo)[02 January 2016] IP: 123.*.*.* Sri Lanka | Comment Reference Number: 42696
அவரை காயல் நகருக்கு வருமாறு அழைத்ததும் அவரது வருகைக்கான சகல ஏற்பாடுகளை செய்ததும், காயல்பட்டணம்.காம் குழுவினர் அவரை சந்திக்க நேரம் ஒதுக்கி கொடுத்ததும் காவாலங்கா உறுப்பினர்களே என்பதை குறிப்பிட்டு இருக்கலாமே?
Moderator: விடுபட்ட தகவல் இணைக்கப்பட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
Re:... posted byM.S. Shah Jahan (Singapore )[07 January 2015] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 38797
ரஹ்மான் காக்காவிடம் நான் கற்ற முதல் பாடம்.
அது 1964 மார்ச் அல்லது ஏப்ரல் மாதம். ஹாங்காங்கில் பல்லாக் கம்பெனி சதக்கு ஹாஜியார் அவர்களோடு 611 China Building பணியாற்றி வந்தேன்.
ரஹ்மான் ஹாஜியார் உலக சுற்றுப்பயணம் சென்று வந்த பின் சதக்கு ஹாஜியாரைப் பார்ப்பதற்காக வந்தார்கள். பேச்சு நடுவில் என்னைப் பார்த்து " தம்பி யாரு ?" என்று என்னைப் பார்த்துக் கேட்டார்கள். நான் "உங்களுக்கு என்னைத் தெரியாது" என்றேன்.
காரணம் நான் கொழும்பில் வளரவில்லை. அதோடு படிப்பு, விளையாட்டு என்று என் காலம் போனது. நம் மக்களோடு எனக்கு தொடர்பில்லை. எனக்குப் பலரைத் தெரியாததால் பலருக்கும் என்னைத் தெரியாது என்ற சிறு மதி.
"வாப்பா பெயர் என்ன" என்று கேட்டார்கள். சொன்னேன். உடனே எனது தந்தையின் அங்க அடையாளங்கள் அனைத்தையும் சொல்லி வேறு விபரங்களையும் சொன்னார்கள். அசந்து விட்டேன். முதல் குத்திலேயே நான் நாக் அவுட் ஆகிவிட்டேன். இந்த மனிதர் சாதாரண ஆள் இல்லை என்று அப்போதே மனதில் பதிந்துவிட்டது.
சுமார் 10 வருடங்களுக்கு முன்பு காயல் நகரில் அவர்களுக்கு ஒரு வரவேற்பு கொடுக்க வேண்டும் என்ற என் பிரேரணை கூடி வரவில்லை. தனக்காக மட்டும் வாழாத பெருமகன் ரஹ்மான் காக்கா. எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு சுவனபதியைக் கொடுப்பானாக. ஆமீன்.
Re:... posted byM. S. Shah Jahan (Colombo)[23 October 2014] IP: 182.*.*.* Singapore | Comment Reference Number: 37869
"தம்பி, இந்தப் பயணத்தில் எனக்கு மவுத்து ஏற்பட்டால், நீங்க, இந்தத் துண்டில் இருப்பவர்களைத் தொடர்புகொண்டு தெரியப்படுத்துங்கள்..."
இதைப் படித்ததும் எனக்கு நினைவிற்கு வருவது: அது 1964ம் வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம். இதனை வாசிக்கும் பலர் பிறக்கவே இல்லை. ஹாங்காங் கின் Queen's Road, Central, China Building அறை எண் 611.
அன்றைய உலகம் சுற்றும் வாலிபனான, கீழக்கரையின் தொழிலதிபர் அல்ஹாஜ் B. S. A. ரஹ்மான் அவர்கள் தனது உலக சுற்றுப் பயணத்தை முடித்து ஹாங்காங் திரும்பிய சில நாட்களில் அல்ஹாஜ் P. A. சதக்கு அவர்களை சந்திக்க எங்கள் அலுவலகம் வந்தார்கள். பல நாடுகளில் தான் அனுபவித்த சுவையான அனுபவங்களை அவர்கள் கூறியதை நான் ஆர்வமாக கேட்டு வந்தேன். அதில் ஒரு செய்தி எனக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது. அது இதோ :
"நான் முதலில் ஹோட்டலுக்கு போனதும் டெலிகிராம் (தந்தி) படிவத்தை வாங்கி ஹாங்காங் கில் உள்ள எங்கள் கம்பெனி யின் 'புல் புல்' முகவரிக்கு தந்தி ஒன்று எழுதி என் மனைவியின் கையில் கொடுப்பேன். அவள் முகம் கறுத்து விடும். தந்தியில் ; கணவர் இறந்து விட்டார். நான் இந்த நாட்டில், இந்த ஹோட்டலின் இந்த அறையில் இருக்கிறேன். தொலை பேசி இலக்கம் இது. தொடர்பு கொள்ளவும் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். எனக்கு எதுவும் ஆகிவிட்டால் இந்த தந்தியை ஹோட்டல் காரரிடம் கொடு என்பேன். ஆங்கிலத்தில் பரிச்சியம் இல்லாத அவள் விசும்புவாள்" என்று சொன்னது என் நெஞ்சில் அப்படியே படிந்து விட்டது.
ஹாஜி ரஹ்மான் அவர்கள் நோயுற்ற நிலையில் இருக்க, அவரது துணைவியார் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross