இரெண்டே ஆம்பளைங்கதான் posted bySarjoon (Kayalpatnam)[29 June 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19688
குள்ளநரி கொள்ளைக் கூட்டங்களோடு குலவுகின்றது. வெளி நடப்பிலும் ஒரு சந்தோசம். குறைந்தது இரண்டு தன் மானச் சிங்கங்களை அனுப்பி இருக்கிறோம் என்று. ஆமாம் எல்லோரும் வெளி நடப்பு செய்ததற்கு ஏதாவது காரணம் உண்டு. ஆனால் உள்ளங்கை நெல்லிக்கனிப் போல தெளிவாக ஹக்கைப் பேசியவரின் வெளி நடப்பிற்கு காரணம் என்னவோ? அந்த ஹக்குக்கே வெளிச்சம்
Re:நகர்மன்றத் தலைவரின் பதிலு... posted bySarjoon (Kayalpatnam)[28 June 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19669
அப்படிப் போடு அருவாளை. சகோதரர் லுக்மான் அவர்கள் ஒவ்வொரு விளக்கத்திற்கும் யாராவது ஒரு நகர்மன்ற உறுப்பினரையோ அல்லது வெளி நபரையோ சாட்சியாக சொல்லி இருப்பாராயின் இந்நேரம் தெரிந்து இருக்கும் அவற்றின் யோக்கியதைகள்.
ஆக இன்னுமொரு நகர்மன்ற உறுப்பினரின் முகத்திரை கிழிகிறது. போங்கோ போங்கோ போயி போட்டி நகர்மன்றத்துல கலந்து அடுத்து என்ன பண்ணலாம்டு திரைக்கதை வசனம் எழுதிட்டு வாங்கோ
Re:நகர்மன்றத் தலைவரின் பதிலு... posted bySarjoon (Kayalpatnam)[28 June 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19664
எது எப்படியோ....ஒன்று மட்டும் தெளிவு... தேவை இல்லாத கருத்துக்களை தேவை இல்லாத இடங்களில் பேசி குழப்பங்களை உருவாக்குவதில் சகோதரர் லுக்மானுக்கு நிகர் அவர் மட்டுமே.
இரு நகர்மன்ற கழிசடைகள் தரம் கெட்டு பேசிய நிகழ்வில் அதைப்பற்றி மட்டுமே பேசி இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு நகர்மன்ற தலைவி மீது குற்றங்களை சாட்டி அந்த நிகழ்வை திசை திருப்பிய உங்களின் நகர்மன்ற சகோதர பாசம் பாச மலர்களை தாண்டிய புதிய பரிமாணம். நகர்மன்ற தலைவியின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க ஒருவார காலம் எடுத்த நீங்கள் இப்பொழுது எங்கேயுமே பேசப்படாத, நகர்மன்றத் தலைவி குற்றச்சாட்டு சொல்லாத ஐக்கிய பேரவை என்ற தேரை முச்சந்தியில் கொண்டு வந்து விட்டுள்ளீர்கள்.
ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் எனபது போல உங்கள் செயல்பாடு உள்ளது. உங்களின் செயல்கள் உங்கள் மேல் இருந்த நம்பிக்கையை தகர்த்துவிட்டது. எது எப்படியோ... கடந்த வருடங்களைப் போல காயல் நகர்மன்றம் என்றென்றும் ஊழல்வாதிகளின் கூடாரமே. சீக்கிரம் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை கொண்டு வந்து நூறு சதம் ஊழல் மன்றமாக மாற்றுங்கள்.
செய்தி: கடற்கரைக்கு வருவோர் கையில் பை கொண்டு வாருங்கள்! நகராட்சியின் சார்பில் பிரசுரம்! பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் நேரில் வினியோகித்தார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கடற்கரைக்கு வருவோர் கையில... posted bySarjoon (Kayalpatnam)[04 June 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19147
கடற்கரையை சுத்தமாக வைக்கவேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. ஆனால் நகராட்சியின் இந்த அறிவிப்பு நகைச்சுவையின் உச்சக்கட்டம். தினசரி குறைந்தது இரு நூறு பேராவது கடற்கரைக்கு வரும்பட்சத்தில் அனைவரும் கையில் ஒரு பையைக் கொண்டு வந்து அதில் தங்களின் குப்பைகளை அள்ளிக் கொண்டுச் செல்வது என்பது நடை முறைக்கு ஒவ்வாதது. அதற்க்கு பதிலாக நகராட்சியே சில குப்பை தொட்டிகளை கடற்கரையில் ஆங்காங்கே வைப்பது என்பது எளிமையானது. நடைமுறைக்கு ஒத்து வருவது. சிங்கபூர் சுத்தமாக இருப்பதற்கு காரணம் இது போன்ற எளிய வழி முறைகள் தாம். நகராட்சி கண்டுக்கொள்ளுமா இதை
ஐக்கியமான யோசனை posted bySarjoon (Riyadh)[16 October 2011] IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11004
YUF செயலாளர் சொல்லுவதைப் போல ஒன்றும் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்ததின் மூலம் உங்களுக்கு என்ன நடந்தது எனபது தெரியும் என்ற கோணத்தில் மறுப்பு அறிக்கை விட்டு இருக்குரீர்கள். இதோடு என்ன நடந்தது என்பதையும் சொல்லி இருக்கலாமே. அதற்கு ஏன் இன்னொரு நாள் தேவை. சரி சரி ஐக்கியமாக எல்லோரும் அமர்ந்து ஆலோசித்து வெளியிடுவார்கள் போலும். ஒற்றுமை முக்கியம் இல்லையா?
Administrator....என்னால் முடிந்த வரை கண்ணியமான முறையிலேயே கருத்துக்களை பதிவு செய்கிறேன். ஏன் என்னுடைய கருத்துக்கள் வெளி இடப்படுவதில்லை என்ற காரணத்தைக் சொல்ல இயலுமா?
Administrator: Through your email ID, so far 4 comments have been posted. All the 4 have been approved. Please let us know - comment reference number of the rejected message
Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்... posted bySarjoon (Riyadh)[10 October 2011] IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10140
ஒற்றுமையை பற்றிப் பிடிக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. ஐக்கிய பேரவையின் நடவடிக்கைகளை குறை சொல்லும் சகோதரர்கள் முன் வைக்கும் பிரட்சினைகள் சில. அவற்றில் எனக்குத் தெரிந்த இரண்டு முக்கியமான பிரட்சினைகள்
1) வேட்பாளர்கள் யார் யார் என்பதை முன்கூட்டியே தெரிவிக்காமல், ஜமாத்துகளுக்கு அவர்களை தேர்ந்தெடுக்கும் முடிவை எடுக்கும் கால அவகாசம் கொடுக்காமல், ஜாமாத்துகள் மூலம் அனுப்பப்பட்ட தனி நபர்களின் சொந்த அபிப்பிராயத்தின் மூலம் தேர்ந்தேடுக்கப்பட்டதின் அவசியம் என்ன?
2) ஐக்கிய பேரவையின் பொது வேட்பாளரின் மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கும் பட்சத்தில் ஐக்கிய பேரவையின் ஓட்டெடுப்பில் இரண்டாவதாக வாக்குகள் பெற்ற வேட்பாளரை வேட்பாளராக நிறுத்த முனைந்து இருக்க வேண்டும். அதற்க்கு மாற்றமாக ஐக்கிர பேரவை வேட்பாளரின் தாயார் மனு செய்ததின் சூட்சுமம் என்ன?
இது போன்ற சந்தேகங்களுக்கு விடை அளிக்காமல் ஐக்கிய பேரவையின் இது போன்ற ஏனோ தானோ அறிக்கைகள் என் போன்ற நடு நிலையாளர்களின் சந்தேகங்களை வழுப் படுத்துகிறது. இழந்துவிட்ட ஒற்றுமையை மீட்டெடுக்க ஐக்கியப் பேரவை இது போன்ற சந்தேகங்களுக்கு பதிலளிக்குமா? இல்லை தேர்தல் புறக்கணிப்பு என்று சொல்லி பின்பு தாங்கள் விரும்பிய கட்சிகளுக்கு வாக்களிக்க உத்தரவிட்டு, ஏன் இந்த மாற்றம் என்று கேட்ட இணையதளத்தின் மீது குற்றம் சொல்லியதைப் போல நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று ஒத்தக்காலில் நிற்குமா?
Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப... posted byMohamed Sarjoon (London)[31 July 2011] IP: 109.*.*.* United Kingdom | Comment Reference Number: 6551
அன்புள்ள ஜியாவுதீன் காக்கா அவர்களுக்கு
சலாம். ஆலிம்கள் மற்றும் முஅத்தீங்கள் பற்றிய தங்களின் அக்கறை சமுதாய மக்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமும் கூட. நீங்கள் இந்த செய்தியில் ஆரம்பமாக பதிவு செய்து இருந்த கருத்தும் கூட அதன் மூலமாக ஏதாவது நல்லது நடந்து விடாதா என்ற எண்ணம்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த பரகசியம். ஆனால் அது சரியானச் செய்தியில் பதிக்கப்பட்டு இருக்குமானால் உங்களின் எண்ணம் சரியான முறையில் எல்லோரையும் சென்று சேர்ந்து இருக்கும். எது எப்படியோ நீங்கள் சுட்டிக் காட்டி இருந்த ஆலிமிர்க்கும் அவர்களின் குடும்பத்திற்கும் பல காலங்களாக உதவிகள் சேர்ந்த்துக் கொண்டு இருக்குறது என்பதை பலரும் உங்களுக்கு இணைய அஞ்சல் மூலமாக தெரிவித்து இருந்ததை நீங்களும் மறக்காமல் கருத்தாக பதிந்ததற்கு எனது மனமார்ந்த நன்றிகள். தங்களின் கருத்துப் பணி தொய்வின்றி தொடர எனது வாழ்த்துக்கள். எனது கருத்துக்கள் உங்களை ஏதும் காயப்படுத்தி இருக்குமானால் அதற்க்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள்.
யானைக்கும் அடி சறுக்கும் posted bySarjoon (London)[26 July 2011] IP: 109.*.*.* United Kingdom | Comment Reference Number: 6427
அன்புள்ள ஜியாவுதீன் காக்கா அவகளுக்கு, நகைச்சுவையாக பல நல்லக் கருத்துக்களை பல செய்திகளில் பதிவு செய்த நீங்கள், யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல எங்கள் முதல்வர் அவர்களைப் பற்றி தவறான கண்ணோட்டத்தில் பதிவு செய்து அதல பாதாளத்தில் தலை குப்புற விழுந்து இருக்குறீர்கள்.
முதல்வர் அவர்களின் பாராட்டு விழாவிற்கும் எங்கள் மதரசாவில் பதினைந்து வருடங்களுக்கு முன் விட்டு விலகி சென்ற ஆசிரியர் அவர்களையும் சம்பந்தப்படுத்துவது அப்துல்லாவிற்கும் அமாவாசைக்கும் உள்ள ஒற்றுமையே. தாங்கள் எங்கள் அன்பு ஆசிரியர் மர்ஹூம் யூசுப் முனீரி அவர்களுக்கு சமுதாயம் என்ன செய்தது என்று இணையதள கருத்துப் பதிவில் கேட்குமுன் எங்களைப் போன்ற முன்னாள் மாணவர்களிடம் கேட்டிருக்கலாம்.
உண்மையைச் சொல்லப் போனால் எங்கள் ஆசிரியர் குடும்பத்தின் எல்லா வித சுக துக்கங்களிலும் நாங்கள் பங்கு எடுத்து இருக்கிறோம், இன்னும் நாங்கள் உதவ முனைகிறோம் என்பதே உண்மை. செய்த எல்லா உதவிகளையும் உங்களிடம் பரிமாறி எங்களின் நன்மைகளை இழக்க விரும்பவில்லை. ஆக இத்துடன் இது சம்பந்தமான விவாதங்களை விட்டுவிடுங்கள். முடிந்தால் உங்களால் இயன்ற உதவிகளை செய்ய முனையுங்கள்.
அடுத்து உங்களின் ஆதங்கம் சேவை செம்மலுக்கு பின் தான் பாராட்டு விழா நடத்த தோன்றியதா என்று? இப்படி ஒரு நிகழ்வு நடத்தவேண்டும் என்பது எங்களின் பல ஆண்டு கனவு. அது நடத்துவதற்கு காரண காரியமாக அமைந்ததே இந்த சேவை செம்மல் விருது. காரண காரியங்கள் எதுவும் இல்லாமல் ஒரு விழாவை ஒரு மதராவைச் சார்ந்தவர்கள் அதன் முதல்வருக்கு நடத்தினால் அதை ஊர் மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பது உங்களைப் போன்ற புத்திசாலிகளுக்கு புரியாமல் போனது எப்படி?
(இது எனது தனிப்பட்ட கருத்து. மதரசாவிற்க்கும் அதன் முதல்வருக்கும் இதில் எவ்வித சம்பந்தமும் இல்லை)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross