செய்தி: காயல்பட்டினம் நகராட்சி அலுவலர்கள் பணி நேரத்தில் ‘டிக்-டாக்’ செயலியில் ஆடிப்பாடிக் கொண்டாட்டம்! நகராட்சி நிர். மண்டல இயக்குநர் விசாரணை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபர்)[08 July 2019] IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 46435
‘டிக்-டாக்’ ஏன்னா அம்மாம் பெரிய அப்பாடக்கர் பாவமா ?
லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என்று புகார் கூறினால் ,
கம்ப்யூட்டர் வாங்காமலே , வாங்கியதாக பணம் கொள்ளை அடித்து உள்ளார்கள் என்று புகார் கூறினால் ,
கான்ட்ராக்ட்டில் ஊழல் , சாமான் வாங்குவதில் ஊழல் , அதில் ஊழல் இதில் ஊழல் என்று புகார் கூறினால் ..
நகராட்சியில் பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை , காந்தி நோட்டு இல்லாமல் ஏதும் அசையாது என்று புகார் கூறினால்
ஆடிட்டர் ரிப்போர்ட்டில் , பணம் கையாடல் செய்யப்பட்டது என்று அவர்களே புகார் கூறினால் ..…
எதையும் கண்டுக்கொள்ளாமல், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் அரசாங்கம் / நிர்வாகம் ,,,, "டிக் டாக் " செயலியை வேலை நேரத்தில் உபயோகித்தார்கள் என்று இவ்வளவு வீரியமாக விசாரணை , ட்ரான்ஸபர் என்று கச்சை காட்டுகிறதே ….
அதான் சந்தேகம் … அவ்வளவு பெரிய பாவமா ? ‘டிக்-டாக்’
இந்த செயலுக்கு வக்காலத்து வாங்கவில்லை .. சந்தேகம் தான்..
எது பெரிய தவறு என்று .
செய்தி: குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் முஹம்மத் தம்பி (எ) தம்பி டாக்டர் காலமானார்! பெரிய குத்பா பள்ளியில் நல்லடக்கம்!! பெருந்திரளானோர் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன் (அல்கோபர்)[23 April 2019] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46396
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .
மிகவும் கவலையான செய்தி .
காயல்பட்டினத்தின் அடையாளங்களில் ஒன்றை இழந்து இருக்கின்றோம் .
இங்கு என்னை அறிமுகப்படுத்தும் சமயம் , என் ஊர் காயல்பட்டினம் என்று சொன்னதுமே , தம்பி டாக்டர் ஊரா ? என்று பலரும் வினவியது உண்டு.
நான் றூரத்தில் இருந்து ரசித்த ஒரு பெர்சனாலிட்டி .
மிகவும் சிம்பிள் ,
குழந்தையே குழந்தைக்கு வைத்தியம் பார்க்கும் அழகு , பலருக்கும் ஒரு எடுத்துக்காட்டு , குறிப்பாக மருத்துவர்களுக்கு ..
சமூக வலைத்தளங்களில் பல பல அன்பர்கள் இவர்களின் சிறப்பை சிலாகித்து பதிவை பதிந்து உள்ளார்கள் .
----------------------------------------------
அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள்.
அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது" என்றார்கள்.
மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர்.
அப்போதும் நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது?' எனக் கூறினார்கள்.
உமர்(ரலி) 'எது உறுதியாகிவிட்டது?' எனக் கேட்டதும்
நபி(ஸல்) அவர்கள், 'இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது.
ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்" எனக் கூறினார்கள்.
( ஸஹீஹ் புஹாரி 1367 )
------------------------------------
கிருபை யுள்ள வல்ல ரஹ்மான் , இவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை மன்னித்து , சுவனத்தில் உயர்ந்த பதவியை கொடுப்பானாக.
துயரத்தில் வாடும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக .
செய்தி: மஹ்ழரா அரபிக் கல்லூரி மாணவர் ஒரே அமர்வில் திருக்குர்ஆனை முழுமையாக ஓதும் நிகழ்ச்சி! நகர மக்கள் திரளாகப் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன் (அல்கோபர்)[16 April 2019] IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 46390
Re:... posted byசாளை எஸ். ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபர்)[06 February 2019] IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 46377
விபத்து நடந்த சிறிது நேரத்தில் அந்த வழியாக நாங்கள் வந்தோம்.
தள்ளுவண்டிக் காரர்களின் வாழ்வாதாரம் சிதைந்து போனது. அவர்களை காண பரிதாபமாக இருந்தது.
அடிபட்ட கார், தள்ளு வண்டி ஆகியவற்றுக்கே இவ்வளவு சேதாரம் என்றால் , அடி கொடுத்த பைக்குக்கு எவ்வளவு சேதாரம் இருக்கும் என்று அங்கும் இங்கும் தேடிப்பார்த்தால் , பைக்கை காணவில்லை.
என்னப்பா இது .. ஆச்சரியமாக இருக்கே ஒருவேளை ஜின்னுடைய வேலையாக இருக்குமோ என்று விசாரித்தால் , ஒரு 150 மீட்டருக்கு அப்பால் , அனாதையாக அந்த பைக் நின்றுக்கொண்டு இருந்தது. ஆக்ஸிடன்ட் பண்ணிவிட்டு ஓடப்பார்த்தவனை விரட்டி சென்று பிடித்து உள்ளார்கள்.
இதில் ஒரு நகைச்சுவை என்னென்ன , விபத்து ஏற்படுத்திய அந்த பையன் , சிறு காயத்துடன், நல்ல தெம்பாக கெஞ்சிக்கொண்டு இருந்தான். பணம் வேணா தந்து விடுக்கிறேன், விட்டு விடுங்கள்… விட்டு விடுங்கள் என்று.
அவனுடைய நிலையையும் , அதிகார கெஞ்சலையும் கண்டு யாருக்குமே அவன் மீது பரிதாபம் வரவே இல்லை.
தற்செயலாக அங்கு போலீசார் வருவதை எப்படி கண்டானோ தெரியவில்லை , உடை மரத்துக்கு பின்னாடி தடார் என்று படுத்து, பயங்கரமாக அடிபட்டது போல சீன் போட ஆரம்பித்து விட்டான் .
அப்பறம் என்ன .. எங்களுக்கே அவன் மேல் பரிதாபம் வந்து விட்டது, போலீசுக்கு வராதா..? பிரமாத நடிப்பு.
செய்தி: அக். 06இல் காயல்பட்டினத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்! மாவட்டத்தின் அனைத்துக் கிளையினரையும் அழைக்க, நகர பொதுக்குழுவில் தீர்மானம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசாளை எஸ். ஐ. ஜியாவுத்தீன் (அல்கோபர்)[04 October 2018] IP: 178.*.*.* Ukraine | Comment Reference Number: 46277
உங்களின் அனைத்து தீர்மானங்களும் மக்களுக்கு நன்மையாக அமைய வாழ்த்துக்கள்.
சின்ன சந்தேகம் :-
" கூட்ட நிகழ்வுகள் குறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:- "
- சகோ எஸ்.கே.ஸாலிஹ் அவர்களை தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டதாக, முஸ்லீம் லீக் அதிகாரப்பூர்வ இதழில் கட்டம் கட்டி செய்தி வந்ததே..!!
- எப்போது மீண்டும் அந்த பதவி கொடுக்கப்பட்டது.
- பறித்ததற்கு கட்டம் கட்டிய பத்திரிகை, கொடுத்ததற்கு கட்டம் கட்டாமலாவது செய்தி வெளியிட்டதா..??
Re:...பூரிப்பு posted byசாளை எஸ். ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபர்)[02 August 2018] IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 46231
மாஷா அல்லாஹ், பாரக் கல்லாஹ்.
மிகவும் மகிழ்ச்சியாகவும் பூரிப்பாகவும் உள்ளது.
பல காலங்கள் கழித்து ஒரு அருமையான நிகழ்வை அறிய முடிகின்றது.
ஒரு செய்தி என்றால் அதில் ஒரு மகிழ்ச்சியான செய்தி இருக்கும், ஆனால் இந்த செய்தியில் படிக்கப் படிக்க மகிழ்ச்சியான செய்திகள் கோர்வையாக வந்துக்கொன்டே இருக்கின்றது.
உண்மையில் புல்லரித்தது.
வெரி குட் வெரி நைஸ்.
வல்ல அல்லாஹ் எல்லா வளங்களையும் இந்த குழந்தைக்கும், பெற்றோர்களுக்கும் வழங்குவானாக, கூடவே உறுதுணையாக இருந்த அனைவர்களுக்கும்.
குறிப்பு :- அமெரிக்கா சென்றால் பிள்ளைகள் கெட்டுவிடும் என்று சொல்லுபவர்களுக்கு, இந்த செய்தி சமர்ப்பணம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross