காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த – மறைந்த பாளையம் முஹம்மத் இஸ்மாஈல் & பிரபு முஹம்மத் மீரா நாச்சி தம்பதியின் மகன் ஹாஃபிழ் பீ.எம்.ஐ.எஸ்.செய்யித் ஜமாலுத்தீன். மஹ்ழரா அரபிக் கல்லூரியின் திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் பிரிவில் திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்து, 16.04.2019. செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது – பட்டம் பெறவுள்ளார்.
இம்மாணவர், 14.04.2019. ஞாயிற்றுக்கிழமையன்று மஹ்ழரா அரபிக் கல்லூரி வளாகத்தில், ஒரே அமர்வில் திருக்குர்ஆனை முழுமையாக பாராமல் ஓதி முடித்துள்ளார்.
07.00 மணிக்குத் துவங்கிய இவரது ஓதல் 19.30 மணிக்கு நிறைவுற்றது. தொழுகை, உணவுக்காக மட்டும் இடைவேளை எடுத்துக்கொண்டார். 19.45 மணிக்கு கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸ் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர் ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ துஆ ஓதி மஜ்லிஸை நிறைவு செய்தார். இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட – நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மகளிர் மறைவுப் பகுதிகளிலிருந்து நிகழ்ச்சிகளை அவதானித்தனர்.
ஹாஃபிழ் பீ.எம்.ஐ.எஸ்.செய்யித் ஜமாலுத்தீன் – தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் உறுப்பினர் பாளையம் ஹபீப் முஹம்மத் அவர்களது மகன் வழிப் பேரனும், சிங்கப்பூர் காயல் நல மன்ற ஆலோசகர் பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களது சகோதரர் வழிப் பேரனும் ஆவார்.
தகவல்:
K.M.N.மஹ்மூத் லெப்பை
படங்களுள் உதவி:
ஹாஃபிழ் முஹ்யித்தீன் முபாரக்
|