காயல்பட்டினம் குருவித்துறை பள்ளியின் செயலாளர் - அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரியின் நிர்வாகி - தீவுத் தெருவைச் அல்ஹாஜ் கே.எஸ்.முஹம்மத் நூஹ், 10.04.2019. புதன்கிழமையன்று 01:30 மணியளவில், சென்னையில் காலமானார். அன்னார்,
மர்ஹூம் முஹம்மத் நூஹ் தம்பி, மர்ஹூம் அ.வு.செ.செய்யித் அப்துர் ரஹ்மான், மர்ஹூம் ஊண்டி கிதுரு முஹம்மத் ஆகியோரின் பேரரும்,
மர்ஹூம் ஹாஃபிழ் என்.கே.காதிர் ஸாஹிப் ஆலிம் அவர்களின் மகனும்,
மர்ஹூம் எம்.கே.ஷாஹுல் ஹமீத் அவர்களின் மருமகனாரும்,
கே.எஸ்.அப்துர் ரஹ்மான் ஸாஹிப், கே.எஸ்.மொகுதூம் முஹம்மத், மவ்லவீ ஹாஃபிழ் கே.எஸ். கிழுறு முஹம்மத் ஃபாஸீ ஆகியோரின் சகோதரரும்,
எம்.என்.காதிர் ஸாஹிப் என்பவரது தந்தையும்,
எம்.ஐ.முஹம்மத் இப்ராஹீம், எம்.என்.ஷாஹுல் ஹமீத் ஆகியோரின் மாமனாரும்,
எஸ்.ஏ.டீ.முஹம்மத் அப்துல் காதிர், எம்.எல்.முஹம்மத் யூனுஸ் ஆகியோரின் சகளையும்,
பிரபு சுல்தான், எஸ்.எச்.முஹம்மத் நூஹ், முத்துவாப்பா, ஷேக் சுலைமான் ஆகியோரின் மச்சானும்,
பிரபு ஷுஅய்ப், பிரபு முஹ்யித்தீன், எம்.என்.காமில் காதிர் சாஹிப், ஹாஃபிழ் எம்.ஏ. இஸ்ஸத்தீன் காதிர் ஸாஹிப், எம்.எம்.காதிர் ஸாஹிப், பிரபு முபாரக், ஹாஃபிழ் எம்.எம்.ஷெய்க் சதக்கத்துல்லாஹ், எஸ்.ஏ.ஆர்.மின்ஹாஜ் முஹ்யித்தீன், எம்.ஒய்.முஹம்மத் லெப்பை, ஹாஃபிழ் பிரபு முக்தார் இப்ராஹீம் ஆகியோரின் மாமாவும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, அன்று இஷா தொழுகைக்குப் பின் - 20:30 மணியளவில், குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
|