காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா 16.04.2019. செவ்வாய்க்கிழமையன்று 09.00 மணிக்கு, கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
கல்லூரியின் தலைவர் எம்.பி.ஏ.முஹ்யித்தீன் ஸதக்கத்துல்லாஹ் மரைக்கா தலைமை தாங்குகிறார். நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.கே.முஹ்யித்தீன் தம்பி துரை வரவேற்றுப் பேசுகிறார்.
கல்லூரி முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழை (ஸனது) வழங்கி, பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார். கல்லூரியின் பேராசிரியர்கள் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மஃதின் அகடமி தலைவரும், கேரள முஸ்லிம் ஜமாஅத் செயலாளருமான மவ்லவீ பத்ருஸ்ஸாதாத் அஸ்ஸெய்யித் இஃப்ஹாமுல் கலீலுல் புகாரீ தங்ஙள் ஃபாழில் பாக்கவீ இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ‘ஜெஸ்மின்’ ஏ.கே.கலீலுர்ரஹ்மான் நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுறுகின்றன.
இவ்விழாவில், 7 ஆண்டு பாடத்திட்டத்தின் கீழ் கற்றுத் தேர்ந்த 19 மாணவர்கள் ‘மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ’ பட்டமும், திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்த - காயல்பட்டினத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டமும் பெறவுள்ளனர்.
விழா ஏற்பாடுகளை, கல்லூரி செயலாளர் எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும், மஹ்ழரா அரபிக் கல்லூரியின் www.mahlara.org என்ற இணையதளத்திலும், காயல்பட்டினம் குத்பிய்யா மன்ஸிலின் www.quthbiyamanzil.org என்ற இணையதளத்திலும் நேரலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விழா குறித்து கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரம்:-
தகவல்:
மவ்லவீ ஹாஃபிழ் S.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ
முதல்வர் - மஹ்ழரா அரபிக்கல்லூரி
|