காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 92ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 07.03.2019. வியாழக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ஏப்ரல் 06 அன்று இருபத்து ஒன்பதாம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, விளக்கவுரையை கேரள மாநிலம் குட்டிகாட்டூர் ஜாமிஆ ஆரிஃபிய்யா அன்வாரிய்யா அரபிக் கல்லூரியின் திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.கே.காஜா முஈனுத்தீன் மஸ்லஹீ வழங்கினார். அந்நாள் சட்டமேதை ஷாஃபிஈ இமாம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் நினைவு நாள் என்பதால் அவர்களது வாழ்க்கைச் சரித உரையை, மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.முஹ்யித்தீன் லெப்பை ஸக்காஃபீ வழங்கினார்.
அன்று 19.00 மணிக்கு, இமாம் புகாரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மீது அல்லாமா முஹம்மத் இஸ்மாஈலுன் நஹ்விய்யுல் முஃப்தீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களால் தொகுக்கப்பட்ட மின்ஹத்துல் பாரீ ஃபீ மித்ஹதில் புகாரீ எனும் புகழ்மாலை (மர்திய்யா)யும், இமாம் முஸ்லிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் புகழோதும் பைத்தும் ஓதும் மஜ்லிஸ், ஹாஃபிழ் கே.எஸ்.கிழுறு முஹம்மத் ஃபாஸீ தலைமையில் நடைபெற்றது. ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவு மாணவர் ஏ.ஏ.சி.அப்துல் அஜீஸ் குஷ்ஹாலீ கிராஅத் ஓதி துவக்கி வைக்க, காயல்பட்டினம் ஜீலானீ பள்ளியின் இமாம் ஹாஃபிழ் எஸ்.எச்.முஹம்மத் அப்துல் காதிர் துஆ ஓதி நிறைவு செய்தார்.
ஷஃபான் 01ஆம் நாள் (ஏப்ரல் 07) அன்று அபூர்வ துஆ நாளாகும். அன்று 05.45 மணிக்கு ஹாமிதிய்யா மாணவர் எஸ்.எம்.நூஹ் மிக்தாத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்கிறார். அன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, ஐக்கிய அரபு அமீரகம் துபை இ.டீ.ஏ. பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை மஹ்ழரீ வழங்குகிறார். கூட்டு துஆவின் சிறப்புகள் என்ற தலைப்பில், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தலைவரும், முத்துச்சுடர் மாத இதழின் ஆசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ வழங்குகிறார்.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் ஹாஃபிழ் எம்.ஐ.கே.செய்யித் அபூதாஹிர் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்ற, நிறைவாக, புனித மக்கா ஷரீஃப் முஃப்தீ அல்லாமா செய்யிதஹ்மதிப்னு ஜெய்னீ தஹ்லான் ரஹ்மத்துல்லாஹி அவர்களால் தொகுக்கப்பட்ட கத்முல் புகாரி ஷரீஃப் எனும் அபூர்வ துஆ பிரார்த்தனையை – காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும் – முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ தமிழாக்கத்துடன் ஓதி, இவ்வாண்டின் நிகழ்ச்சிகளை நிறைவு செய்கிறார்..
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
|