தமிழகத்தில் இன்று ஒரே விடுத்தமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
காயல்பட்டினத்தை உள்ளடக்கிய தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், திமுக கூட்டணியில் – திமுக சார்பில் கனிமொழி கருணாநிதி, பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் - அதன் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட – கட்சிகள் சார்பாகவும், தனித்தும் மொத்தம் 37 பேர் போட்டியிடுகின்றனர்.
காயல்பட்டினத்தில் உள்ள 36 வாக்குச் சாவடிகளுக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குச் சாவடி அலுவலர்கள் நேற்று மதியத்திலிருந்தே வரத் துவங்கிவிட்டனர்.
வாக்குச் சாவடிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாக்குச் சாவடி எல்லையைக் குறிக்க, வெள்ளைத் தூள் கொண்டு சாலைகளில் குறியிடப்பட்டுள்ளன.
அனைத்து வாக்குச் வாடிகளிலும் வெளிப்பகுதிகளைச் சேர்ந்த காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி, காயல்பட்டினத்தில் மொத்தம் 35,266 வாக்காளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
|