சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் 08.02.2019. அன்று நடைபெற்றுள்ளது. அதன் விபரங்களை உள்ளடக்கி அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
ரியாத் கா.ந.மன்றத்தின் 69-வது செயற்குழு கூட்ட நிகழ்வு!
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 70-வது செயற்குழு கூட்டம் கடந்த 08.02.2019 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின் மன்ற தலைவர் சகோ. PMS முஹம்மது லெப்பை அவர்கள் இல்லத்தில் சகோ. முஹ்சீன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
ஆரம்பமாக மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது, சகோதரர் முஹ்சீன் அவர்கள் கூட்ட நிகழ்வின் சாரம்சத்தை வாசித்த பின் சகோ. S.L. சதக்கத்துல்லாஹ் அவர்கள் இறைமறை ஓதிக் கூட்டத்தை துவக்கி வைத்தார்.
தலைமையுரை:
கூட்டத்தைத் தலைமையேற்று நடாத்தித் தந்த சகோதரர் முஹ்சீன் அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். நமது மன்றம் ஒரு முன்னோடி மன்றமாக இருந்து நல்ல பல செயல்திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும், தொடர்ந்து மருத்துவம், கல்வி, சிறுதொழில் சார்ந்த நலத்திட்டங்கள் செய்து வருவதாகவும் கூறினார். கடந்த பொதுக்குழுவில் பெறப்பட்ட WAKF நிதியினை பயன்படுத்திட நடப்பு செயற்குழுவிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், கடந்த ஆண்டு Primary School Project-இல் ஏற்பட்ட தொய்வினை சரி செய்து அதனை சீரிய முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
மன்ற நல உதவிகளுக்கான நிதி ஒதுக்கீடு:
நகரில் இருந்து பெறப்பட்ட மருத்துவ கடிதங்கள், கல்வி/சிறுதொழில் விண்ணப்பங்களை வாசித்து நிதியை ஒதுக்கிய பின், அவர்களின் பூரண உடல் நலத்திற்கும் வல்ல இறைவனியிடம் பிரார்த்திக்கப்பட்டது. நிதி ஒதுக்கீட்டின் சாராம்சம் மற்றும் 2018-ஆம் ஆண்டிற்கான நிதி அறிக்கையைப் பொருளாளர் சகோதரர் M.M.S. ஷேக் அப்துல் காதர் சூஃபி அவர்கள் வாசித்தார். சந்தா நிலுவை உள்ள உறுப்பினர்கள் ஜனவரி 2019 முதல் சந்தாக்களை புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஷிஃபா அறங்காவலர் கூட்டம்:
கடந்த 26.01.2019 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு SKYPE மூலம் ஷிபா அறங்காவலர் கூட்டம் நடைபெற்றது, அந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட நமது மன்ற முன்னாள் தலைவர் சகோ. நூஹு அவர்கள் அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முக்கிய அம்சமான காயல் நல மன்றங்களின் கூட்டு முயற்சியில் நகரில் டயாலிசிஸ் சென்டர் (Dialysis Center) அமைப்பது பற்றிய விளக்கத்தையும், அதன் அவசியத்தையும் பற்றி தெளிவு படுத்தினார், தொடர்ந்து மன்ற உறுப்பினர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு முறையாக விளக்கம் அளித்தார், இந்த டயாலிசிஸ் சென்டர் அமைவதின் சாதகப் பாதகங்களை பற்றி ஆலோசித்தபின், அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த ஒப்புதலோடு ரியாத் காயல் நல மன்றம் சார்பாக டயாலிசிஸ் சென்டர் அமைப்பதற்கு நிதி உதவி வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.
Kayal Schools Welfare Projects:
உள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவியுடன் இயங்கி வரும் துவக்கப் பள்ளிகளுக்கு உதவும் Kayal Schools Welfare Projects மூலம் கடந்த காலங்களில் பல நல உதவிகள் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அத்திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்திட, சகோ. முஹ்சின் மற்றும் சகோ. கூஸ் முஹம்மது அபூபக்கர் இருவரும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்கள். பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று தேவைகளைக் கேட்டறிந்து நல உதவிகள் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
பெண்கள் மற்றும் சிறார்கள் நிதி (Women And Kids Fund – WAKF):
பெண்கள் மற்றும் சிறுவர்/சிறுமியர்களும் மன்ற நல உதவிகளில் தங்கள் பங்களிப்பை வழங்கிடும் முகமாக அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த Women And Kids Fund – WAKF திட்டம். இத்தட்டத்தின் மூலம் பெறப்பட்ட நிதியில் இருந்து நகரில் அமையவிருக்கும் டயாலிசிஸ் சென்டருக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
எமது மன்ற சிறுவர்/சிறுமியர் மற்றும் பெண்கள் வழங்கிய இப்பங்களிப்பு சதகத்துன் ஜாரியா என்று சொல்லக்கூடிய நீடித்த நன்மையைப் பெற்று தரும். எனவே, இது போன்ற நல்ல பல செயல் திட்டங்களை செயல்படுத்திட தொடர்ந்து தங்களது பங்களிப்பை WAKF நிதிக்கு வழங்குமாறு கேட்டு கொள்ளப்பட்டது.
பார்வையாளர்கள் கருத்து:
இக்கூட்டத்தின் பார்வையாளர்களாக கலந்து கொண்ட சகோ. ஹுசைன் மௌலானா, சகோ. முஹம்மது உவைஸ்னா லெப்பை, சகோ. ஜகரிய்யா மற்றும் ஜித்தாவில் இருந்து சகோ. செய்யத் முஹையத்தீன் ஆகியோர் தம்மை கூட்டத்திற்கு அழைத்ததிற்கு நன்றி கூறி, தங்களின் கருத்துக்களையும் மேலான ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டார்கள்.
குறிப்பாக சகோ. ஹுசைன் மௌலானா அவர்கள் கூறுகையில், மிகவும் நேர்த்தியான முறையில் நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அதற்கான கூலியை நமது செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு இறைவன் வழங்குவான் என்று பிரார்த்தனை செய்தார்.
இக்கூட்டம் நடத்த சகோ. PMS முஹம்மது லெப்பை அவர்கள் இடம் வழங்கினார். சகோ. முஹ்சீன், சகோ. செய்யத் சபியுல்லாஹ், சகோ. முஹம்மத் ஹசன், சகோ. கூஸ் அபூபக்கர், சகோ. செய்யத் ஆகியோரின் அனுசரணையில் மதிய விருந்து, மாலை தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
இறுதியாகச் சகோ. நயீமுல்லாஹ் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவில, துஆவோடு குழுப்படம் எடுத்த பின்னர் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியாத் கா.ந.மன்றம் சார்பாக...
செய்தியாக்கம்:
தைக்கா ஸாஹிப்
படங்கள்:
ஊடகக் குழு
|