காயல்பட்டினம் தீவுத்தெருவில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியையொட்டிய கீழ்ப்பகுதி சாலை நீண்ட காலமாகப் பழுதடைந்து குண்டுங்குழியுமாகக் காட்சியளித்தது.
இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை நகராட்சியிடம் கோரிய பிறகு, புதிய சாலை அமைப்பதற்காக அப்பகுதியில் பழைய சாலை கிளறப்பட்டது. பின்னர், பணி எதையும் தொடராமல் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் நிறைவு நாள் நிகழ்ச்சிகளில் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, அந்நிர்வாகத்தின் சார்பில் அழுத்தமாகக் கோரிக்கை வைத்த பிறகு, அப்பகுதியில் புதிய தார் சாலை போடப்பட்டுள்ளது.
|