இம்மாதம் 24ஆம் நாள் (நாளை) அதிகாலை 06.00 மணி முதல், 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு எரிபொருள் வினியோகிக்கப்படாது என – காயல்பட்டினம் இரத்தினபுரியில் உள்ள “காயல் ஃப்யூல் சென்டர்” நிறுவனம் அறிவித்துள்ளது. அவர்களின் அறிவிப்பு வருமாறு:-
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். இன்ஷாஅல்லாஹ் நாளை – அதாவது 24.04.2019. புதன்கிழமை அதிகாலை 06.00 மணி முதல் – 18 வயதுக்குக் குறைந்தவர்கள் யாராயினும், அவர்கள் எந்த வகையான வாகனங்களைக் கொண்டு வந்தாலும் – ஒருபோதும் அவர்களுக்கு எரிபொருள் வினியோகிக்கப்படாது.
வயதில் சந்தேகமிருப்பின், அவர்களின் அடையாள அட்டையைப் பார்த்து, அவர்கள் மைனர் அல்ல என்று உறுதி செய்த பிறகே எரிபொருள் வினியோகிக்கப்படும்.
எங்களுக்கு இதனால் விற்பனை குறைந்தாலும் பரவாயில்லை. வாகனத்தை ஓட்டுபவர்கள் & உடன் செல்வோரின் விலைமதிக்க முடியாத உயிர்களே எங்களுக்கு முக்கியம்!!!
1. Re:...அழகிய முன்மாதிரி posted bymackie noohuthambi (kayalpatnam )[24 April 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46399
சமீப காலங்களாக தமிழகம் முழுவதும் இந்த பைக் விபத்துக்கள் ஒரு விதமான பீதியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. வீட்டிலிருந்து புறப்பட்ட கணவன் மனைவி மகன் மக்கள் திரும்பவும் வீடு வந்து சேருவார்களா என்ற சந்தேகம் பரவலாக ஏற்பட்டுள்ளது.
அதுவும் குறிப்பாக நமதூரில் நடைபெற்று வரும் விபத்துக்கள் 12 வயது கூட நிறைவடையாத மாணவர்கள் தாறுமாறாக பைக் ஓட்டி விபத்துக்களை சந்திக்கிறார்கள். முதியவர்களும் இயலாதவர்களுக்கு தெருவில் நடக்கவே பயப்பட்டு அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த நிறுவனம் அறிவித்துள்ள செய்தி மனதுக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது. இந்த தகவலை ஒரு நோட்டிஸ் ஆக வெளியிட்டு எதிர்வரும் ஜும்மா நாளில் எல்ல ஜும்மா பள்ளிகளிலும் விநியோகிக்க ஆவண செய்யுங்கள் .
ஒரு நல்ல விஷயத்தை யார் முன்னெடுத்து செய்வார்களோ யார் அதற்கு பரிந்துரை செய்வார்களோ அவர்களுக்கு அந்த நல்ல விஷயத்தில் ஒரு பங்கு உண்டு என்பது இறைவனின் வாக்கு. தமிழ்நாடு அரசுக்கு இந்த தகவலை அறிவித்து இதை ஒரு சட்டமாகவே இயற்றி தமிழ்நாடு கெஸட்டில் அறிவித்து நாடு முழுவதும் இதை அமுல்படுத்த நமது ஊரிலுள்ள பொது நல அமைப்புக்கள், ஐக்கிய பேரவை , நடப்பதென்ன என்ற அமைப்புக்கள் எல்லோரும் சேர்ந்து அரசுக்கு ஒரு மனுவை அளித்தால் அவசியம் நமது சட்டமன்ற உறுப்பினர் அனிதா அவர்களும் நமது மண்ணின் மைந்தர் அபூபக்கர் அவர்களும் முயற்சி செய்து சட்டமன்றத்தில் பேசி ஒரு நல்ல முடிவை அறிவித்து இந்த விபத்து மிக்க பைக் கலாச்சாரத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முடியும் என நினைக்கிறோம்.
அல்லாஹ் இந்த நல்ல முயற்சியில் ஈடுபடும் எல்லோருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் செழுமையான வாழ்வையும் தந்தருள்வானாக. நமது இளைஞர்களின் பெறுமதியான விலைமதிப்பில்லாத உயிர்கள் பாதுகாக்கப்படவும் அருள் புரிவானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross