உலகப் புகழ்பெற்ற – அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பயில, காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவிக்கு இடம் கிடைத்துள்ளது. விரிவான விபரம்:-
காயல்பட்டினம் எல்.எஃப்.வீதியைச் சேர்ந்த மாணவி நிஸா ஆஃப்ரின். இவர், மாசே மஹ்மூத் நெய்னா & நூர் ஜஹான்; மர்ஹூம் அஹ்மத் பஷீர் & ஜீனத் நிஸா ஆகியோரின் பேத்தியும், அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பப் பொறியாளராகப் பணியாற்றி வரும் செய்யித் முஹம்மத் & சபீனா தம்பதியின் மகளும் ஆவார்.
அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் மாநிலம் – ஆஸ்டின் நகரத்தில் IB Programmeஇல் 12ஆம் வகுப்பு வரை பயின்று முடித்துள்ள இவருக்கு, உலகப் புகழ்பெற்ற – அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் IV Y Leauge பிரிவில் பயில சேர்க்கை இடம் கிடைத்துள்ளது.
இதற்காக அவரை அமெரிக்கா வாழ் காயலர்களும், மாணவியின் உறவினர்களும் பாராட்டினர்.
தகவல்:
‘துணி’ அன்ஸாரீ
|