கத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமில் 98 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். இதுகுறித்து, முகாம் ஒருங்கிணைப்பாளர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் (கத்தர்) வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
கத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங், காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து, புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி & பரிசோதனை இலவச முகாமை 07.09.2019., 08.09.2019. ஆகிய இரண்டு நாட்களில் நடத்தின.
இம்முகாம் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக, 07.09.2019. சனிக்கிழமையன்று, காயல்பட்டினம்
தீவுத்தெரு – அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி,
கோமான் தெரு – நெய்னா முஹம்மத் ஒலி பெண்கள் தைக்கா,
சதுக்கைத் தெரு ஜன்னத்துல் காதிரிய்யா பெண்கள் தைக்கா
ஆகிய 3 இடங்களில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர் சிகிச்சை மையத்தின் மருத்துவக் குழுவினர் இந்நிகழ்ச்சிகளை நடத்தினர்.
08.09.2019. ஞாயிற்றுக்கிழமையன்று, புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம், நமதூர் கே.எம்.டீ. மருத்துவமனை வளாகத்தில் நடத்தப்பட்டது.
முகாம் நுழைவாயிலில் பெயர் பதிவு செய்த பின்னர் பரிசோதனை முகாமுக்குப் பயனாளிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
டாக்டர் கோவிந்தராஜன் தலைமையில், டாக்டர் சசி ப்ரியா உள்ளிட்ட புற்றுநோய் மருத்துவ சிறப்பு நிபுணர்கள் இம்முகாமில் பங்கேற்று மருந்துவ பரிசோதனை செய்து, ஆலோசனைகளை வழங்கினர்.
காயல்பட்டினத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த 61 பெண்களும், 37 ஆண்களும் என மொத்தம் 98 பேர் இம்முகாமில் பங்கேற்று புற்றுநோய் பரிசோதனை செய்துகொண்டனர்.
முகாமில் சேவையாற்றிய செவிலியர் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் அனைவருக்கும் - முகாமை இணைந்து நடத்திய கத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புகளின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை, கத்தர் காயல் நல மன்ற முன்னாள் தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் தலைமையேற்று ஒருங்கிணைத்து வழிநடத்த, அதன் செயலாளர் எம்.என்.முஹம்மத் சுலைமான், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் பிரதிநிதி ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், கத்தர் காயல் நல மன்றப் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ், கே.எம்.டீ. மருத்துவமனை மேலாளர் கே.அப்துல் லத்தீஃப், இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், திருச்சி ஃபர்னிச்சர் நிறுவனத்தின் அதிபர் எல்.கே.எஸ்.செய்யித் அஹ்மத், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் ட்ரஸ்ட் சார்பில் மஸ்ஊத், மானாத்தம்பி, கே.எம்.டீ.சுலைமான், ஹபீப் முஹம்மத், உமர் அனஸ், சோனா முஹ்யித்தீன், சுலைமான் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
பெண்கள் பகுதியில், இக்ராஃ கல்விச் சங்கத்தின் பெண் தன்னார்வலர்கள் ஏற்பாட்டுப் பணிகளைச் செய்திருந்தனர். ‘முர்ஷித் ஜெராக்ஸ்’ கே.முஹ்ஸின், கே.எம்.டீ.சுலைமான், முஹம்மத் ட்ராவல்ஸ் அஹ்மத் சுலைமான் & ஜஃபருல்லாஹ், மக்கள் மருந்தகம் யூஸுஃப், ஏ.கே.எம். ஜுவல்லர்ஸ் நிறுவனத்தார் ஆகியோர் ஏற்பாட்டுப் பணிகளுக்குத் துணை நின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|