ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், 15.11.2019. வெள்ளிக்கிழமையன்று காயலர் சங்கம நிகழ்ச்சியாக நடத்தப்படவுள்ளது. இதில் கலந்துகொள்ள காயலர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் நவம்பர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, நமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 15-வது பொதுக்குழு கூட்டம் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.
அபூதபீ காயல் நல மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அபூதபீ, அல்அய்ன், மேற்கு மாகாண(ABUDHABI, AL AIN & WESTERN Region) வாழ் காயல் சகோதர, சகோதரிகள் அனைவரும் இச்செய்தியினை அழைப்பிதழாக ஏற்றுக்கொண்டு தங்கள் குடும்ப சகிதம் கூட்ட நிகழ்விடத்திற்கு முற்கூட்டியே வருகை தந்து சிறப்பித்து, தங்களின் உயர்ந்த ஆலோசனைகளையும் நமது காயல் மாநகரின் முன்னேற்றத்திற்கு தேவையான நல்ல பல கருத்துக்களையும் தர அன்புடன் அழைக்கின்றோம்.
நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
இடம்: CAPITAL GARDEN (CAPITAL PARK)–Khalifa Street -Abu Dhabi
குறிப்பு: வருகை ஏற்பாடுகளை சிறந்த முறையில் செய்திடத்தோதுவாக தங்களின் வருகையை டாக்டர் விளக்கு S. செய்யித் அஹ்மத் (0509450404), ஷம்சுதீன்(0505665864) MHL ஷேக்(0555082785) ரமீஜ்(0555479960) மற்றும் இஷ்ஹாக் ஆலிம் மஹ்ழரி(05094442181) ஆகியோர்கள் தொடர்பு கொள்ளும் போது உங்கள் வருகையை உறுதி செய்துகொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
காலை 10 மணி முதல் சிறுவர்,சிறுமிகளுக்கான கிராத் மற்றும் தீனியாத் போட்டிகளும், ஜும்ஆ தொழுகைக்குப் பின் பொதுக்குழு கூட்டமும் அதனைத்தொடர்ந்து மதிய உணவிற்குப்பின் வழமைபோல் சிறுவர் சிறுமியர் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு மாலை 5மணிக்குள் பொதுக்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் நிறைவுபெறும்.
அழைப்பில் அன்புடன்,
நிர்வாக்குழு மற்றும் பொதுக்குழு ஒருங்கிணைப்பாளர்கள்,
அபூதபீ கா.ந.மன்றம் -ஐக்கிய அரபு அமீரகம்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
A.R.ரிஃபாய்
(மக்கள் தொடர்பு & செய்தி/ ஊடகத்துறை பொறுப்பாளர்) |